சிறுபான்மையினருக்கு இலவச தொழில் பயிற்சி.

தஞ்சை மாவட்டத்தில் வசிக்கும் சிறுபான்மை வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு அளிக்கப்படும் இலவச தொழில் பயிற்சிகளில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கா. பாஸ்கரன் வெளியிட் செய்திக் குறிப்பு:

தஞ்சை மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவர், இஸ்லாமியர், சீக்கியர், புத்த மதத்தினர் மற்றும் பார்சி வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் சார்பில் திறன் வளர்ப்பு பயிற்சிகள், தேர்ந்தெடுக்கப்பட்ட தனியார் பயிற்சி நிலையங்கள் மூலம் இலவசமாக அளிக்கப்பட உள்ளன. இதற்கான பயிற்சி கட்டனம் பயிற்சி நிலையத்துக்கு அரசால் அளிக்கப்படும்.

எலக்ட்ரிக்கல் வயரிங், ரீவைண்டிங், பிட்டர், வெல்டர் மற்றும் கணினி பயிற்சியும், புடவைகளில் கல் பதித்தல், தையல் பயிற்சி, நவீன ஆடை வடிவமைப்பு மற்றும் ஏர்கண்டிஷனிங் – ரெப்ரிஜெரேஷன் தொடர்பான பயிற்சிகள் அளிக்கப்படும்.

பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது தேர்ச்சி பெறாதவர், குடும்ப ஆண்டு வருமானம் ஒரு லட்சம் ரூபாய்க்கு குறைவாக உள்ளவர், மதிப்பெண் பட்டியல், ஜாதிச் சான்று, குடும்ப அட்டை மற்றும் வருமானச் சான்றுடன் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.

இந்தப் பயிற்சிகளை அளிக்க விரும்பும் தனியார் பயிற்சி நிறுவனங்கள் தங்களது பயிற்சி கட்டண விவரத்துடன் மேற்கண்ட அலுவலகத்தை தொடர்புகொள்ளலாம் என்றார் ஆட்சியர்.

நன்றி : தினமணி

திருமங்கலக்குடி TNTJ கிளை சார்பாக நடந்த பெண்கள் பயான்.

திருமங்கலக்குடி TNTJ கிளை சார்பாக இன்று(12.01.2012) 3:30 மணியளவில் பெண்களுக்கான மார்க்க விழக்க நிகழ்ச்சி நடந்தது.

இந்நிகழ்ச்சியில் மாநில பேச்சாளர் சகோ.உபையத்துல்லாஹ் அவர்கள் “சமுக தீமைகள்” என்ற தலைப்பில் உரையாற்றினார். இதனைத் தொடர்ந்து பெண்களுக்கான சிறப்பு கேள்வி-பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் பெண்கள் ஆர்வமாக மார்க்க சம்பந்தமான கேள்விகளை கேட்டு அறிந்தனர்.

இதில் உறுப்பினர்கள் மற்றும் பெண்கள் அனைவர்களும் கலந்து கொண்டார்கள். இப்பணி சிறக்க துஆ செய்யுங்கள்….

ரியாத் மண்டல TNTJ சார்பாக காலெண்டர் வினியோகம்.

ரியாத் மண்டல TNTJ சார்பாக 200 காலெண்டர்கள் வினியோகம் செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

ரியாத் SKUT மற்றும் திருமங்கலக்குடி TNTJ ன் நமதூர் ஊராட்சி மன்ற தலைவர் சந்திப்பு.


ரியாத் SKUT மற்றும் திருமங்கலக்குடி TNTJ ன் சார்பாக நமதூர் ஊராட்சி மன்ற தலைவர் திரு.இராஜேந்திரன் அவர்களின் சந்திப்பு நடைபெற்றது.இதில் ரியாத் வாழ் சகோதரர்களால் ஊராட்சி மன்ற தலைவருக்கு வேண்டுகோல் வைக்கப்பட்ட கடிதம் கொடுக்கப்பட்டது.

மற்றும் நமது TNTJ கிளை சார்பாகவும் நமது கிராமத்தில் மேற்கொள்ள வேண்டிய அவசியமான நடவடிக்கைகள் கூறித்து கூறப்பட்டது.அனைத்தையும் செய்து தருவதாக நமதூர் ஊராட்சி மன்ற தலைவர் திரு.இராஜேந்திரன் கூறினார்.

மேலும் இதில் அவர்களிடம் ரியாத் TNTJ காலண்டர் மற்றும் இஸ்லாம் குறித்து சில நூல்களும் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்…

திருமங்கலக்குடி tntj கிளை சார்பாக இன்சா அல்லாஹ் வருகிற 12-01-2011 அன்று பெண்களுக்கான மார்க்க விளக்க கூட்டம் நடைபெற உள்ளது.

திருமங்கலக்குடி tntj கிளை சார்பாக இன்சா அல்லாஹ் வருகிற 12-01-2011 அன்று ஆய்பாளையத் தெரு சீட்டுகார் சாகுல் வீட்டீல் பெண்களுக்கான மார்க்க விளக்க கூட்டம் நடைபெற உள்ளது.அனைவரும் கலந்து கொள்ளவும்.

தானே புயல் நிவாரண உதவி செய்ய

திருமங்கலக்குடி tntj கிளையில் தானே புயலால் பாதிக்கப்பட்ட நமது சமுதாய மக்களுக்கு நிதி உதவி வசுலிக்கப்படுகறது உதவி செய்ய நாடுவோர் கீழ்காணும் எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்
CONTACT:8825110553/ 9944837738.

திருமங்கலக்குடி TNTJ கிளை ஆலோசனைக் கூட்டம்

திருமங்கலக்குடி TNTJ கிளை ஆலோசனைக் கூட்டம் இன்று(08.01.2012) நடைபெற்றது.இதில் கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

மதார் மன்றம் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மரணம்.

நமதூர் மதார் மன்றம் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் R.E சார் அவர்கள் இன்று(8.1.2012) இரவு மரணமடைந்தார்கள்.

Zakir Naik vs William Campbell-Quran and Bible தமிழில்

 

 

பேஸ்புக் சகோதரிகளுக்கு எச்சரிக்கை!

பேஸ்புக் பாவனையாளர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுக்கக் கூடிய செய்தி இது. பேஸ்புக், டுவிட்டர், போன்ற சமூக இணைப்பு இணையத் தளங்களின் பாவனையாளர்களின் போட்டோக்கள் பயங்கரமாக பாலியல் ரீதியில் துஷ்பிரயோகம் செய்யப்படக் கூடிய அதிகபட்ச ஆபத்து உருவாகியுள்ளது. எனவே சகோதரிகளே பேஸ்புக்கில் உங்கள் புகைப்படங்கள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்.

அன்பின், சினிமா தார‌கைக‌ளின் புகைப்ப‌ட‌ங்க‌ளையும் த‌ம‌து சொந்த‌ப் புகைப்ப‌ட‌ங்க‌ளையும் பாவிக்கும் ச‌கோத‌ரிக‌ளுக்கு,

ப‌ர‌ந்து விரிந்த‌ இணைய‌த்த‌ள‌த்தில் உங்க‌ளை பிர‌தி நிதித்துவ‌ப்ப‌டுத்துவ‌தே உங்க‌ள் புகைப்ப‌ட‌ங்க‌ள் தான்…

அது ஒரு புற‌ம் இருக்க‌ ஒரு சில‌ கேள்விக‌ளை கேட்க‌ நினைக்கின்றேன்.!!

முத‌ல் பார்வையிலேயே உங்க‌ளைப்ப‌ற்றி எந்த‌ வ‌கையான‌ சிந்த‌னையை அடுத்த‌வ‌ர் ம‌ன‌தில் ஏற்ப‌டுத்த‌ விரும்புகின்றீர்க‌ள்????

நீங்க‌ள் விய‌ர்வை சிந்தி தூய்மையாய் உழைக்காம‌ல் த‌ம் உட‌லை வைத்து ச‌ம்பாதிக்கும் ஒரு வெட்க‌ம் கெட்ட‌ கூட்ட‌த்தின் ர‌சிகை என்ப‌தை வெளிப்ப‌டுத்திக்கொள்ள‌ விரும்புகின்றீர்க‌ளா??

உங்க‌ளுக்கு என்ன‌ பெருமை அவ‌ர்க‌ளின் புகைப்ப‌ட‌ங்க‌ளை பாவிப்ப‌த‌ன் மூல‌ம் வ‌ருகின்ற‌து???

உங்க‌ளையும் அந்த‌ வெட்க‌ம் கெட்ட‌ கூட்ட‌த்தின் ஒருவ‌ராக‌ பிற‌ர் எண்ணிக்கொள்ள‌ அனும‌திப்பீர்களா??

சொந்த‌ப் புகைப்ப‌ட‌ங்க‌ளை பாவிக்கும் நீங்க‌ள், உங்க‌ளை நீங்க‌ளும் விள‌ம்ப‌ர‌ப்ப‌டுத்திக்கொள்ள‌ முனைகின்றீர்க‌ளா??

நீங்க‌ள் அடுத்தவ‌ரால் விரும்ப‌ப் ப‌ட‌வேண்டும் என்று விரும்புகின்றீர்க‌ளா??

உங்க‌ளைப்ப‌ற்றி மிகையாக‌ எடை போட்டாலும் த‌வ‌றில்லை குறைவாக‌ எடை போட‌க்கூடாது என்று நினைக்கின்றீர்க‌ளா??

உங்க‌ள் குறைக‌ளை சொல்லா விட்டாலும் ப‌ர‌வாயில்லை பிற‌ரால் புக‌ழ‌ப்ப‌ட‌ வேண்டும் என்று எண்ணுகின்றீர்க‌ளா??

அப்ப‌டியும் இல்லை என்றால் இனைய‌த்தின் மூல‌மாக ஆபாச‌மான‌ த‌ள‌ங்க‌ளுக்கு உங்க‌ள் புகைப்ப‌ட‌ங்க‌ளை அனுப்ப‌ நீங்க‌ளே வ‌ழி செய்கின்றீர்களா?

எது எப்ப‌டியோ.. face book மூல‌ம் உங்க‌ள் புகைப்ப‌ட‌ங்க‌ள் வேறு த‌ள‌ங்க‌ளில் உலா வ‌ர‌ வாய்ப்புக்க‌ள் அதிக‌ம் என்ப‌து உண்மையே..

இதோ சில‌ வ‌ழிமுறைக‌ளைச்சொல்கிறேன் முடியுமானால் சிந்தித்துப்பாருங்க‌ள்..

1) உங்க‌ள் புகைப்ப‌ட‌ங்க‌ளை யாருக்கெல்லாம் காட்ட‌ நினைக்கின்றீர்க‌ளோ த‌னியாக‌க் காட்டிக்கொள்ளுங்க‌ள்.. பொது இட‌ங்க‌ளில் பாவித்து பெண்மையின் மென்மையை காய‌ப்ப‌டுத்தாதீர்க‌ள்…

2)பெண் என்ப‌வ‌ள் காட்சிப்பொருள‌ல்ல‌ என்ப‌தை உண‌ர்ந்து கொள்ள‌ முய‌ற்சி செய்யுங்க‌ள்..
நீங்க‌ள் காட்சிப்ப‌டுத்தும் புகைப்ப‌ட‌ங்க‌ள் உங்க‌ள் எதிர்கால‌த்தையே கேள்விக்குறியாக்க‌லாம் என‌வே சிந்தித்து முடிவெடுங்க‌ள்..

3) நீங்க‌ள் இஸ்லாம் கூறும் வ‌கையில் உடைய‌மைப்பைக் கொண்டிருந்தாலும் அதுவும் தவிர்க்க‌ப்ப‌ட‌ வேண்டிய‌ விட‌ய‌ம் என்ப‌தை நினைவில் வைத்துக்கொள்ளுங்க‌ள்.
ந‌வீன‌ தொழில் நுட்ப‌த்தின் மூல‌ம் எந்த‌ள‌வு ந‌ன்மை விளைகின்ற‌தோ அந்த‌ள‌வு தீமையும் ம‌னித‌ ச‌மூக‌த்திற்கு விளைந்து கொண்டு தான் இருக்கின்ற‌து..
உங்க‌ள் புகைப்ப‌ட‌ங்க‌ள் மூல‌ம் நீங்க‌ள் துஷ்பிர‌யோக‌த்திற்கு உட்ப‌ட‌லாம்…

4)உங்க‌ளுக்கு உங்க‌ள் அழ‌கைக்காட்ட‌வே வேண்டும் என்றிருந்தால் இருக்க‌வே இருக்கிர‌து ப‌ல‌ வ‌ழிக‌ள் அதில் ஒன்றை தெரிவு செய்து கொள்ளுங்க‌ளேன்..

1 உங்க‌ள் த‌ந்தையிட‌ம் தாயிட‌ம் காட்ட‌லாம்.
2 ச‌கோத‌ர‌ ச‌கோத‌ரிக‌ளிட‌ம் காட்ட‌லாம்
3 உங்க‌ள் க‌ற்பை ம‌ஹ‌ர் மூல‌ம் ஹ‌லால் ஆக்கிக் கொண்ட‌ உங்க‌ள் க‌ன‌வ‌ரிட‌ம் காட்ட‌லாம்
உங்க‌ளுக்கே உங்க‌ளுக்கென்று ஒரு உற‌வு (க‌ணவ‌ன்)இருக்க‌ யாருக்கோவெல்லாம் உங்க‌ள் உட‌லை, உங்க‌ள் அழ‌கைக்காட்டி ஏன் வீணாக்குகின்றீர்க‌ள்.
க‌ணவ‌னுக்காக‌ அழ‌ங்க‌ரித்து அவ‌ரை ம‌கிழ்விப்ப‌த‌ற்கே ந‌ன்மைக‌ள் கிடைக்கும் என்றிருக்க‌ பாவ‌த்தின் பால் ஏன் விரைகின்றீர்க‌ள்??.

நீங்க‌ள் த‌னித்துவ‌மாக‌ இருக்க‌ வேண்டும் என்று விரும்பினால் உங்க‌ள் புகைப்ப‌ட‌ங்க‌ளையும், சினிமா ந‌டிகைக‌ளின் ப‌ட‌ங்க‌ளையும் த‌விர்த்து இன்னும் எத்த‌னையோ வ‌கையான ப‌ட‌ங்க‌ள் உள்ள‌ன‌ அவ‌ற்றில் ஒன்றைப் பா‌வித்துக்கொள்ளுங்க‌ள்.

இல்லையெனில் உங்க‌ள் பெய‌ரை புகைப்ப‌ட‌மாக‌ப் பாவியுங்க‌ள்.

த‌ய‌வு செய்து முஸ்லீம் பெய‌ர்க‌ளுட‌ன் + இறை நிராக‌ரிப்பாள‌ர்க‌ளின் புகைப்ப‌டங்க‌ளை இணைத்து இஸ்லாத்தின் புனிதத்துவ‌த்திற்கு க‌ள‌ங்க‌ம் விளைவிக்காதீர்க‌ள்.

இஸ்லாமிய‌ ஆடைக‌ளைப் ப‌ய‌ன்ப‌டுத்திக்கொண்டு (face book) துஷ்பிர‌யோக‌ம் செய்யாதீர்க‌ள்.

நீங்க‌ள் பாவிக்கும் புகைப்ப‌ட‌த்திற்கு விசுவாச‌மாக‌ ந‌ட‌ந்து கொள்ளுங்க‌ள். உதார‌ண‌மாக‌ ஹிஜாப் அணிந்த‌ பெண்ணை நீங்க‌ள் profile picture ஆக‌ப் பாவிக்கின்றீர்க‌ள்.. ஆனால் நீங்க‌ள் பாவிக்கும் செய்திக‌ளோ சினிமாவும் மார்க்க‌த்திற்கு முற‌னான‌ விட‌ய‌ங்க‌ளும் தான். இது எந்த வ‌கையில் ஒன்றுக்கொன்று ஒன்றிப்போகும்??

உங்க‌ளால் இஸ்லாத்திற்கு எந்த‌க் கெடுத‌லும் ஏற்ப‌ட‌க்கூடாத‌ல்ல‌வா அத‌ற்காத்தான் இந்த‌ ஆலோச‌னைக‌ள்..

“உங்களால் தான் மாற்ற‌ங்க‌ள் நிக‌ழ்கிற‌து என்ப‌தை ம‌ற‌க்க‌ வேண்டாம்”…

இந்த‌ ஆலோச‌னைக‌ள் யார‌து ம‌ன‌தையும் புண்ப‌டுத்துவ‌த‌ற்காக‌ எழுத‌ப்ப‌ட‌வில்லை என்ப‌தை அன்புட‌ன் தெரிவித்துக் கொள்கிறோம்…

இது ஆண்களுக்கும் பொருந்தும்.

Follow

Get every new post delivered to your Inbox.