குறிச்சிமலை திருமங்கலக்குடி ரியாத் வாழ் சகோதரர்களின் SKUT (சிறு சேமிப்பு மற்றும் கடன் உதவித் திட்டம்)

குரிச்சிமலை திருமங்கலக்குடி ரியாத் வாழ் சகோதரர்களால் நடத்தப்படும்  SKUT (சிறு சேமிப்பு மற்றும் கடன் உதவித் திட்டம்) கூட்டம் கடந்த 02/03/2012 வெள்ளிஅன்று ஜும்மவிர்க்கு பிறகு ரியாத் மாநகரில் பத்தாஹ் வில் ஹாஜா ரூமில் SKUT கூட்டம் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் SKUT தலைவர் பஜுல் நூர் அவர்கள் சூரத்துல் இக்லாஸ் என்ற தலைப்பில் உரையாற்றி SKUT 

செயல்பாடுகளை விளக்கினார். துணைத் தலைவர் சலாவுதீன் அவர்கள் அதன் பயன்பாடுகளை பட்டியலிட்டார்.பொருளாளர் ஜியாவுதீன் அவர்கள் கடந்த நான்கு வருட கணக்குகளை இருப்பு நிலை குறிப்பு தயாரித்து கூட்டத்தில் சபர்பித்தார். அதனை தொடர்ந்து துணைச் செயலாளர் அவர்கள் skut சிறு மாற்றங்களை விளக்கினார். கூட்டத்தில் அனைவரிடமும் கருத்து கேட்கப்பட்டது இறுதியாக செயலாளர் ஜவ்ஹர் பாட்ச அவர்கள் நன்றி கூறிட துவாவுடன் கூட்டம் முடிந்தது. மதியம் உணவு சிறப்பாக ஏற்பாடு செய்யப்படிருந்தது. அல்ஹம்துலில்லாஹ்.  

Advertisements

புகையை பற்றிய சில உண்மைகள்.

இதய நோய்களுக்கு பகைவனாக விளங்கும் புகையை பற்றிய சில உண்மைகள் இங்கு தரப்பட்டுள்ளன.

1. ஒவ்வொரு சிகரெட்டும் உங்கள் விலை மதிப்புள்ள வாழ்க்கையிலிருந்து ஐந்து நிமிடங்களை பறித்துக் கொள்கிறது.

2. ஒவ்வொரு புகை இழுப்பும் 4,000 வெவ்வேறு தீய பொருட்களைக் கொண்டது. இதில் புற்றுநோய் மற்றும் இருதய நோய் ஏற்படுத்தும் ரசாயனங்களும் அடங்கும்.

3. சிகரெட்டின் எரிமுனையில் வெப்பநிலை 900 டிகிரி செல்சியஸ் ஆகும். இது நீரின் கொதிநிலையை விட 9 மடங்கு அதிகமானது. இந்த வெப்பநிலையில் சில ரசாயன மாற்றங்கள் ஏற்பட்டு மிகவும் விஷமுள்ள பொருட்களை விடுவிக்கப்படுகின்றன.

4. புகையில் 95 சதவீதம் வாயுக்கள் இருக்கின்றன. அவற்றில் கார்பன் மோனக்சைடின் செறிவு 2-8 சதவீதம் உள்ளது. 60 சதவீதம் கார்பன் மோனக்சைடு செறிவு உயிருக்கு ஆபத்து என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

5. எரியும் புகையிலிருந்து கிடைக்கும் நச்சுக்கலவையில் நிகோடின் அதிகம் உள்ளது. இது உடலின் பல முக்கியமான உறுப்புகளை கடுமையாக பாதிக்கும்.

6. புகைப்பதால் ஏற்படும் மாரடைப்பால் இறக்கும் வாய்ப்புகள் 60-70 சதவீதம் அதிகமாக இருக்கிறது. இங்கு 40-25 மடங்கு மாற்ற முடியாத நுரையீரல் நோய் உருவாவதற்கான வாய்ப்பு அதிகம். நுரையீரல் புற்றுநோய் உருவாகும் ஆபத்து 10-25 மடங்கு அதிகம்.

7. உணவுக்குழாய், வயிற்று மற்றும் மூச்சுக்குழாய்கள் ஆகியவற்றில் புற்றுநோய் ஏற்படும் அபாயம் இவர்களுக்கு அதிகமிருக்கும்.

8. மனைவி கருவுற்றிருக்கும் போது, அவர் கணவர் அருகில் புகைப்பிடித்தால் குழந்தை வளர்ச்சி தடைபட்டு எடை குறைவாக பிறக்கும். கருச்சிதைவு அபாயம் மற்றும் சிசுவின் மரணத்திற்கு வாய்ப்பு அதிகம்.

மேலும் குழந்தையின் அறிவு வளர்ச்சி தாமதப்படும். மனவளர்ச்சி குன்றிப்போகும். குழந்தைப்பருவ ஆஸ்துமா அந்த குழந்தைக்கு மற்ற குழந்தைகளை காட்டிலும் அதிகம் வரும்.

9. இன்றைய காலக்கட்டத்தில் 20 வயதில் கூட மாரடைப்பு வரும். இளைஞர்கள் சிறு வயது முதலே “Passive Smoking” என்ற வகையில் புகை பிடிக்கும் அப்பாவின் அருகிலிருந்து வளர்வதும் ஒரு காரணம்.

10. எரிமுனையிலிருந்து வரும் புகையை சுவாசிப்பதும், பக்க வீச்சும் அதிக தீமையானது. அது அப்பாவிகளான உங்கள் குழந்தை மற்றும் குடும்பத்தினரின் ஆரோக்கியத்தை குலைக்கும். உங்கள் மனைவிக்கும் மாரடைப்பை ஏற்படுத்தும்.

11. ஒரு நாளைக்கு ஒரு பேக்கட்(Packet) புகை பிடிப்போர் ஓராண்டில் 4000 சிகரெட்டை புகைக்கிறார்கள். சிகரெட்டுகளுக்காகவும், புகை பிடிக்கும் பழக்கத்தால் வரும் நோய்க்காகவும் நீங்கள் செலவிடும் தொகையை கொண்டு வீட்டில் பல நவீன சாதனங்களை ஒவ்வொரு ஆண்டும் வாங்கலாம்.

12. 20 வயது முதல் சுமார் 40 வயது வரை தினமும் ஒரு பாக்கேட் சிகரெட் பிடிப்பவரின் சிகரெட்டுகளை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கினால் அது எவரெஸ்ட் மலையின் உயரத்தை எட்டிப் பிடிக்கும்.

திருமங்கலக்குடி-குறிச்சிமலை TNTJ கிளை பொதுக்குழு.

திருமங்கலக்குடி-குறிச்சிமலை TNTJ கிளை பொதுக்குழு 04.03.2012 ஞாயிற்று கிழமையன்று காலை 10மணிக்கு நடைபெற்றது.இதில் மாவட்ட பொருப்பாளர்கள் மற்றும் கிளை நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.

இதில் கிளை நிர்வாகத்தின் வரவு,செலவு கணக்குகள் பார்க்கப்பட்டது,கிளையின் முன்பு இருந்த நிர்வாகிகள் தொடர்ந்து நீடிப்பார்கள். கிளை துணை தலைவராக முஹம்மத் அவர்களும் தேர்வு செய்யப்பட்டார்.மேலும் இதில் கிளை செயல்பாட்டில் உள்ள குறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

TNTJன் பிப்ரவரி-14 வாழ்வுரிமை போராட்ட விடியோ தொகுப்பு

TNTJன் பிப்ரவரி-14 வாழ்வுரிமை போராட்டக் களம்.

அல்ஹம்துலில்லாஹ்….

நமதூரிலிருந்து இன்று TNTJன் பிப்ரவரி-14 வாழ்வுரிமை போராட்டத்திற்காக 6 வேன் , 1 சுமோ , 1 ஆட்டோ மற்றும் நிறைய நபர்கள் இரு சக்கர வாகனங்களில் வந்து கலந்துகொண்டார்கள்.

 

 

TNTJன் பிப்ரவரி-14 போராட்டத்திற்கான தெருமுனைப் பிரச்சாரம்.

TNTJன் பிப்ரவரி-14 போராட்டத்திற்கான தெருமுனைப் பிரச்சாரம் நமதூரில் 5.02.2012 அன்று மாலை 4 மணிக்கு துவங்கி இரவு 9 மணி வரை நடைபெற்றது.

காயிதேமில்லத் தெரு,ஜாகிர் உசேன் தெரு,குறிச்சி மலை ஜின்னா தெரு,காட்டுக்குளம் மற்றும் IOB பாங்க் அருகில் நடைபெற்றது.

இதில் மாவட்ட பேச்சாளர்கள் சகோதரர் உபையத்துல்லாஹ் மன்பயி , சகோதரர் அலி அவர்கள் பிப்ரவரி-14 போராட்டம் ஏன்?எதற்கு என்ற தலைப்பில் உறை நிகழ்த்தினார்கள்.

TNTJன் பிப்ரவரி-14 போராட்டத்திற்கான சுவர் விளம்பரங்கள்.

TNTJன் பிப்ரவரி-14 போராட்டத்திற்கான சுவர்,ஆட்டோ மற்றும் பள்ளிவாசல்களில் விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளன.