கணிணி – நாமே அசெம்பிள் செய்வது எப்படி – முதல் வகுப்பு

அட எவ்வளவு நாளைக்கு தான் நாம் மற்றவர் கையை எதிபார்ப்பது. மகாத்மா சொன்னது போல முடிந்த அளவு நாமே நாம் வேலைகளை தெரிந்து கொள்ள வேண்டும் அல்லவா.

இது கலி யுகம் மட்டும் அல்ல கணிணி யுகம் கூட தான் . முன்பு தொலை காட்சி இல்லாத வீடு வீடு இல்லை தற்போது கணிணி இல்லாத வீடு வீடு இல்லை என்றாகி விட்டது . அப்படி இரண்டற கலந்து விட்ட கணினியை கடை தெருவில் விற்கும் கத்திரிக்காய் மாதிரி கூவி வித்தவுடன் ஓடி போய் வாங்கி விட கூடாது .

ஒவ்வருவருக்கும் ஒரு தேவை இருக்கும் நாம் செய்ய போகும் வேலைகளுக்கு ஏற்ப உள்ள கணினியை தேர்ந்தெடுக்க வேண்டும் . மாணவர்களுக்கு , அலுவலகத்திற்கு , விளையாட்டு பிரியர்களுக்கு , இணையப் பயன் பாட்டுக்கு , கணிணி வல்லுனர்களுக்கு , இசை பிரியர்களுக்கு , பொது தேவைக்கு என பலவாறாக இருந்தாலும் நாம் அசெம்பிள் செய்ய போவது ஒரு பொது பயன் பாடுள்ள கணிணியை தான் .

முதல் வகுப்பு என்பதால் எளிதாக தொடங்க நினைக்கிறேன் , எனவே நாம் கேபினெட் என்பதில் இருந்து தொடங்குவோம் . இந்த கேபினெட் தான் சென்டரல் ப்ரோசெசசிங் யுனிட் என்பதை தன்னகத்தே கொண்டுள்ளது .

இதில் சென்ட்ரல் ப்ரோசெசசிங் என்பது கேபினெட் ,இன்புட் என்பது கீபோர்ட் ,மௌஸ் , ஔட்புட் என்பது மானிடர் ஆகியவற்றை குறிக்கும் . மெமரி என்பது கணினியின் நினைவகத் திறன் . இந்த கேபினெட் உள்ளே தான் SMPS, மதர் போர்டு , ஹார்டிஸ்க் , மெமரி , ரைட்டர் , ப்லோப்பி டிரைவ்,cooler fan என அனைத்தும் இணைக்கப் பட்டு இருக்கும் . சரி கேபினெட் அப்பிடினா என்னானு பார்த்தோம் அது எப்படி இருக்கும் தெரிஞ்சுக்க படம் கிழேகேபினெட் வாங்கும் பொது சைடு பகுதியில் , மற்றும் பின் பகுதியில் பேன் வைக்கும் ஆப்ஸன் உள்ளதாக வாங்க வேண்டும் . ஒன்று மட்டும் தெரிந்து கொள்ளுங்கள் இந்த கேபினெட் மட்டும் சரி இல்லை என்றால் பேஸ்மென்ட் சரி இல்லாத வீடு மாதிரி தான் .

கேபினெட் விலை 900 rs – 2500 rs (சென்னை விலை)

நாம் அசெம்பிள் செய்ய வாங்க போகும் கேபினெட் zebronics விலை 1000 rs .

அடுத்த வகுப்பில் நாம் பார்க்க போவது கேபினெட் உடன் வரும் SMPS பற்றி.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: