வெளிச் சந்தையில் விற்கப்படும் சமையல் காஸ் சிலிண்டர்களை பறிமுதல் செய்ய வலியுறுத்தல்.

வெளிச் சந்தையில் விற்கப்படும் சமையல் காஸ் சிலிண்டர்களை, பறக்கும்படை அமைத்து பறிமுதல் செய்ய வேண்டும் என்று, தஞ்சாவூரில் சனிக்கிழமை நடைபெற்ற காஸ் சிலிண்டர் முகவர்கள் மற்றும் நுகர்வோர் கலந்தாய்வுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.    மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் (பொ) மு. கருணாகரன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் நுகர்வோர்கள் சார்பில் சுவாமிமலை விமலநாதன் அளித்த மனு விவரம்:   சமையல் காஸ் சிலிண்டர் உபயோகிப்பாளர்களுக்கு புதிய கணக்குப் புத்தகங்களை உடனடியாக முகவர்கள் வழங்க வேண்டும்.

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள காஸ் சிலிண்டர் முகவர்கள் தங்களுடைய சேவை எல்லையைக் கடந்து நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் இணைப்பு கொடுத்துள்ளனர்.   இதனால் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நுகர்வோர்களுக்கு காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. எனவே, பிற மாவட்டங்களுக்கு விற்பனை செய்வதைத் தடை செய்ய வேண்டும்.    மாவட்டத்தில் பல இடங்களில் வெளிச் சந்தையில் ரூ. 400 முதல் ரூ. 550 வரை சிலிண்டர்கள் தாராளமாக கிடைப்பதால், முறையாகப் பதிவு செய்தவர்களுக்கு சிலிண்டர் கிடைப்பதில்லை.வீட்டு உபயோக சிலிண்டர்கள் வெளிச் சந்தையில் விற்கப்படுவதை தடுக்க பறக்கும் படை அமைக்க வேண்டும்.

ஒரு சிலிண்டர் முன்பதிவு செய்த பிறகு 21 நாள்களுக்கு பிறகு அடுத்த சிலிண்டர் பதிவு செய்ய வேண்டுமென்ற விதியை மத்திய பெட்ரோலியத் துறை 2007-ம் ஆண்டில் மாற்றம் செய்தது.சிலிண்டர்கள் தேவைப்படும் அனைத்து நேரங்களிலும் முன்பதிவு செய்து கொள்ளும் வசதியை அறிவித்திருந்தும், சில முகவர்கள் முன்பதிவு செய்ய மறுக்கிறார்கள்.  எனவே, எப்போது வேண்டுமானாலும் நுகர்வோர் 2-வது சிலிண்டருக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம் என்பதை நாளிதழ்களில் வெளியிட வேண்டும் என்றார் அவர்.    முன்னதாக நடைபெற்ற கூட்டத்தில் நுகர்வோர்களுக்கு தாமதமின்றி சமையல் காஸ் சிலிண்டர்கள் கிடைக்க காஸ் சிலிண்டர் முகவர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கருணாகரன் உத்தரவிட்டார்.

கூட்டத்தில் மாவட்ட வழங்கல் அலுவலர் கனகராஜன், வட்ட வழங்கல் அலுவலர்கள் காமராஜ் (தஞ்சாவூர்), ஜெயபால் (திருவிடைமருதூர்), சக்திவேல் (பட்டுக்கோட்டை), இந்தியன் ஆயில் நிறுவன துணை மேலாளர் கே. கோவிந்தராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நமது  திருமங்கலக்குடியிலும் சமையல் காஸ் சிலிண்டர்கள் தாமதமாகவே கிடைக்கின்றன.மேலும் தில்லை காஸ் எஜேண்சி தாமதமாக தருவதோடு மட்டுமல்லாமல்.எங்களிடம் அரிசி,எண்ணை,ரவா போன்ற பொருட்களை வாங்கினால்தான் காஸ் தருவோம் இல்லையெனில் தரமுடியாது என்று கூறி வெளிச் சந்தையில் அதிக லாபத்திற்கு விற்று வருகிறது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: