தமிழக முஸ்லிம்களின் போராட்ட வளர்ச்சியில் தவ்ஹீத்வாதிகளின் பங்கு


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்னால் வரை அதாவது ஆங்கிலேயர் ஆட்சியில் எல்லாம் இஸ்லாமியர்களுக்கு அனைத்து உரிமைகளும் வழங்கப்பட்டு வந்தன. குறிப்பாக நாம் இன்றைக்கு  போராட கூடிய கல்வி வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு, அரசியலில் பிரநிதித்துவம் போன்ற அனைத்தும் வழங்கபட்டன.  ஆனால் இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு முஸ்லிம்களின் இந்த உரிமையானது கொஞ்சம் , கொஞ்சமாக பறிக்க பட்டு இன்று ஏதோ பல்வேறு அமைப்புகளின் போராட்டங்களுக்கு பிறகு மூன்றரை சதவிகித இட ஒதுக்கீட்டை பெற்று   உள்ளோம்.

மத்திய அளவில் பத்து சதவிகித இட ஒதுகீட்டுக்காக இன்ஷா அல்லாஹ் வருகிற  ஜூலை மாதம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் போராட்டத்தை அறிவித்து இருக்கிறது.

இந்த போராட்டம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம், தமிழகத்தின் தலைநகரை திணறடிக்க செய்யபோகும் இந்த போராட்டம் மற்ற மாநிலங்களில் ஒலித்தால் மட்டுமே இடஒதுக்கீட்டை எளிதாக பெற முடியும்.

மாநில தலைநகரத்தில் இந்த போராட்டம் நடப்பதால் மற்ற மாநிலங்களிலும் எதிரொலிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

சுதந்தர இந்தியாவில் முஸ்லிம்களின் உரிமைகள் பறிக்கபட்டு, அரசியல் கட்சிகளாலும், பாசிச தீவிரவாத சக்திகளாலும் மிதிக்கப்பட்டு கொண்டிருந்த வேளையில் தமிழக முஸ்லிம்களை போராட்ட குணம்மிக்கவர்களாக  மாற்றி இந்த இட ஒதுக்கீட்டை பெற்று தந்தது எது? என்று நாம் சற்று சிந்தித்து பார்த்தோமேயானால் “தவ்ஹீத்” என்ற சிந்தனை தான் விடையாக அமையும்.

இந்த தவ்ஹீத் என்பது தமிழக முஸ்லிம்களின் மத்தியில் பரவ ஆரம்பித்தது.  இஸ்லாத்திற்கு எதிரான இணைவைப்பு கொள்கைகளிலும், அநாச்சாரங்களிலும் மூழ்கியிருந்த மக்களை உண்மையான முஸ்லிம்களாக வார்த்தெடுத்தது இந்த தவ்ஹீத் என்ற சிந்தனை தான்.

1980 இருந்து  தவ்ஹீத் என்ற ஓரிறை கொள்கை பிரச்சாரம் பல்வேறு தவ்ஹீத் உலமாக்களால்  தமிழகத்தில் ஓரளவு வேரூன்றபட்டு இருந்தது. ஆனால் அந்த காலகட்டத்தில் தவ்ஹீத் உலமாக்கள் சமுதாய பிரச்சினைகளில் எந்தவித ஈடுபாடும் இல்லாமல் இருந்தார்கள்  என்பதே நிதர்சனம். ஆனால் முன்னால் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் அதாவது பாபரி மஸ்ஜித் இடிப்புக்கு பின்னர் முஸ்லிம்கள் சாரை சாரையாக தடா என்ற (பெரும்பாலும் முஸ்லிம்களை மட்டும் சிறையில் அடைக்க பயன்பட்டு வந்த) சட்டத்தை எதிர்த்து பேரணி நடத்தியதே இந்த தவ்ஹீத்வாதிகளின் முதல் போராட்டம் எனலாம்.

தவ்ஹீத் உலமாக்களை அத்துடன் தவ்ஹீத் கொள்கையை அடியோடு அழிக்க நினைத்த சுன்னத் ஜமாத்தினரையும் கூட இந்த போராட்டத்தில் பங்கெடுக்க வைத்தது இந்த தவ்ஹீத் சிந்தனை என்பதில் மாற்று கருத்து இல்லை.

இந்த தவ்ஹீத் என்ற கொள்கை  தான் சுதந்திர இந்தியாவில் முஸ்லிம்கள் தங்களின் உரிமைக்காக தங்களின் உயிரையும் விட தயார் என்ற நிலைக்கு மாற்றியது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

Advertisements

4 Responses

 1. மன்னிக்கவும் தமிழகத்தில் மட்டும் தான் இந்த கூத்து எல்லாம்
  சமூக போராட்டம் என்பது தமிழகத்தில் கூட தலைவர் பழனி பாபா தலைமையில் விதிக்கப்பட்டது தான்
  பாபா தவ்ஹீது வாதியா? போராட்டம் என்பது முதலில் ஜமாத்துகளில் உள்ள கிழடு கட்டைகளிடம் போய் இளமை முறுக்கை காட்டியதா? அல்லது அபு அப்துல்லாவிடம் போட்ட காசு சண்டையா? பின்னர் குனங்குடி ஹனிபா விடம் பிடுங்கி கொண்ட த மு மு க என்ற இயக்கத்தில் இருந்தபோது அல் உம்மா பற்றி வாக்கு மூலம் கொடுத்ததா? பின்னர் விடியல் குருப் மீது வாய் திறந்து வாங்கி கட்டிக்கொண்டதா? ஜவாஹிருல்லா வை ஹைதர் அலி யை மேடையில் கொச்சை வார்த்தைகளால் திட்டியதா? பாக்கர் உடனான சொத்து சண்டையா? அய்யா! பாவம் சமுதாயம்! நீங்கள் யாருடன் ஒன்றாக் இருந்துள்ளீர்கள்?

  • அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..)

   அன்புள்ள சகோதரரே ! தங்களுடைய கருத்திற்கு நான் எதிர்வாதம் செய்வதாக நினைக்காதீர்கள். எந்த அமைப்புகளாயினும் அவற்றில் ஒரு சில குறைகள் இருக்கத்தான் செய்யும். நான் பிரசுரித்த கட்டுரையில் மற்ற அபைப்புகளை பற்றி குறையாக அமையவில்லையே? அந்த கட்டுரையிலிருந்து ஓர் ஆதாரம் உங்கள் பார்வைக்கு…
   “இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்னால் வரை அதாவது ஆங்கிலேயர் ஆட்சியில் எல்லாம் இஸ்லாமியர்களுக்கு அனைத்து உரிமைகளும் வழங்கப்பட்டு வந்தன. குறிப்பாக நாம் இன்றைக்கு போராட கூடிய கல்வி வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு, அரசியலில் பிரநிதித்துவம் போன்ற அனைத்தும் வழங்கபட்டன. ஆனால் இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு முஸ்லிம்களின் இந்த உரிமையானது கொஞ்சம் , கொஞ்சமாக பறிக்க பட்டு
   இன்று ஏதோ

   பல்வேறு அமைப்புகளின் போராட்டங்களுக்கு


   பிறகு மூன்றரை சதவிகித இட ஒதுக்கீட்டை பெற்று உள்ளோம். நாம் ஒருபோதும் மற்ற அமைப்புகளை குறை கூறக்கூடாது. தவ்ஹீத் சிந்தனை எப்போதும் நம்மிடையே பரந்து காண வேண்டும். அல்லாஹ் நம் அனைவரையும் நேர்வழியில் நடத்தாட்டத்துமாக…

 2. எனது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி!
  தவ்ஹீத் சிந்தனை என்று ஏன் வேறுபடுத்தி காட்ட வேண்டும்? இஸ்லாமிய சிந்தனை என்று சொல்லலாமே பிரிவினை வேண்டாம் என்பதிலும், ஷிர்க் வேண்டாம் என்பதிலும் எனக்கு மாற்று கருத்து இல்லை. பெயர் குறிப்பதில் தான் பிரிவு ஏற்படுவதாக எனக்கு தோன்றுகிறது. அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன் அவனே நமக்கு நல் வழி காட்டுபவன்

 3. allahu akbar

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: