சிசேரியன் பிரசவத்தால் ஆபத்து உண்டா?

[ பொதுவாக, சிசேரியன் அறுவை சிகிச்சை ஆபத்தில்லாதவை. மிகச் சில சமயங்களில் பிரச்சினைகள் வருவதுண்டு. ஆனால் எல்லா அறுவை சிகிச்சைகளிலும் அந்த ஆபத்து உண்டு. ஏதாவது தொற்றுநோயோ அல்லது இரத்தக்கசிவோ ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
மிக அரிதாக கர்ப்பப்பையை வெட்டிய இடம் மிகப் பலவீனமாக மாற வாய்ப்பிருக்கிறது. இது குடலிறக்கத்துக்கு வழி வகுத்து விடுகிறது. முதல் பிரசவம் சிசேரியன் என்பதால், அடுத்த பிரசவமும் சிசேரியனாக இருக்கும் என்ற கவலை வேண்டாம். உங்களது அடுத்த பிரசவம் இயல்பாக பெண்ணுறுப்பின் வழியே நிகழ வாய்ப்பிருக்கிறது.
ஆனால், உங்களுக்கு சிசேரியன் எந்தக் காரணங்களுக்காகச் செய்யப்பட்டது என்பதைப் பொறுத்து, அடுத்த பிரசவமும் சிசேரியனாக அமையும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.]

ஆசிய நாடுகளில் இப்போது சிசேரியன் பிரசவம் வேகமாக அதிகரித்துக்கொண்டு வருகிறது. மெடிகல் மெகசீன்களில் வரும் கணக்கெடுப்பின்படி பார்த்தால், கிட்டத்தட்ட நாற்பத்தைந்து சதவீதம், சிசேரியன் பிரசவம் அதிகரித்திருக்கிறது. மருத்துவர்கள் இந்த அதிகரிப்பைக் கண்டு அதிர்ந்து போய் இருக்கிறார்கள். இதைக் குறைப்பதற்குச் செய்யவேண்டிய வழிமுறைகளைப் பற்றியும் ஆராய்ந்து வருகிறார்கள்

சிசேரியன் முறை பிரசவம் என்றால் என்ன?
பெண்ணுறுப்பின் வழியாக குழந்தை வர முடியாமலிருக்கும் போதோ அல்லது அப்படி வருவது அபாயகரமானதாக இருக்கும் போதோ அடிவயிற்றில் அறுவை சிகிச்சை செய்து, குழந்தை வெளிக்கொண்டு வரப்படுகிறது. இதைத்தான் சிசேரியன் முறை பிரசவம் என்கிறார்கள்.

மருத்துவர், தாயின் அடிவயிற்றையும், கர்ப்பப்பையையும் அறுத்து குழந்தையை வெளியில் எடுக்கிறார். இதை “சிசெக்ஷன்’ என்றும் சொல்லுவதுண்டு. இந்த சிசேரியன் முறை பல பச்சிளங்குழந்தைகளின் உயிரையும், அவற்றின் அம்மாக்களின் உயிர்களையும் காப்பாற்றுவது மட்டுமல்லாமல், தாம தமாகும் நோர்மலான பெண்ணுறுப்பு வழி பிரசவத்தினால் வரக்கூடிய பிரச்சினைக ளையும் தடுக்கிறது.

சிசேரியன் முறையை எப்போது உபயோகிக்கலாம்?
தேர்ந்தெடுத்த சிசேரியன் முறை பிரசவ வலி எடுப்பதற்கோ, பெண்ணு றுப்பின் வழியே பிரசவம் நடப்பதற்கோ மருத்துவ ரீதியாகப் பிரச்சினைகள் இருந்தால், பிரசவ வலி வரும் முன்பே சிசேரியன் செய்யப்படும். உதாரணமாக, கர்ப்பம் தொடர்வதால் தாய் அல்லது குழந்தைக்கு ஆபத்து என்ற சூழலிலோ அல்லது இயல்பான பிரசவம் முடியாத போதோ அல்லது ஆபத்தாக இருக்கும்போதோ சிசேரியன் செய்யப்படும். இதைத் திட்டமிட்ட சிசேரியன்’ அல்லது தேர்ந்தெடுத்த சிசேரியன் முறை’ என்று சொல்லுவார்கள்.

அவசர சிசேரியன் முறை

பிரசவ வலி ஆரம்பிக்கும் போதோ அல்லது பிரசவ வலியின் போதோ சில பிரச்சினைகள் உருவானால், உடனடியாக சிசேரியன் செய்யப்படுகிறது. பொதுவாக பின்வரும் சூழல்களில் தான் சிசேரியன் செய்யப்படுகிறது.

o பிரசவத்தின்போது, குழந்தையின் கீழிருக் கும் பாகம் தலையாக இல்லாமல் குழந்தையின் பின்புறமாகவோ, முகமாகவோ, நெற்றியோ அல்லது தோளாகவோ இருந்தால் சிசேரியன் அவசியப்படும்.
o பல பெண்களுக்கு பிரசவ வலியின் போது, செர்விக்ஸ் (கர்ப்பப்பையின் வாய்ப் பகுதி) விரிவடையத் தொடங்கும். ஆனால், முழுவதும் விரிவதற்கு முன்பு விரிவடைவது நின்றுவிடும். இதற்காக ஆக்ஸிடாசின் என்ற மருந்து கொடுக்கப்படுகிறது. ஆனால், அந்த மருந்து கொடுத்தும் சில பெண்களால் முழுமையாக செர்விக்ஸை விரிக்க இயலாது. அதனால், அவரால் பெண்ணுறுப்பு வழியே பிரசவிக்க முடியாது.

o வேறு சில பெண்களுக்கு செர்விக்ஸ் முழுமையாக விரிவடையும். ஆனால், முக்கி குழந்தையை பிறப்புக் குழாய் வழியே வெளியில் தள்ள இயலாது. பிறப்புக் குழாயை விட குழந்தை மிகப்பெரிதாக இருந்தால், இந்த நிலை உருவாகும்.
o பிரசவ வலியின்போது எந்த நேரத்திலும், பிரச்சினைகள் உருவாகி குழந்தையின் இதயத்துடிப்புகள் குறையத் தொடங்கலாம். குழந்தையால் நோர்மல் பிரசவத்தை இதற்கு மேல் தாங்க முடியாது என்பதற்கு இது அறிகுறி. அதனால், உடனடியாக சிசேரியன் செய்யப்படும்.

சிசேரியன் செய்யும் முறை என்ன?

சிசேரியனில் தாய்க்கு முழுமையான மயக்கத்துக்கு மருந்து கொடுக்கப்படுகிறது அல்லது குறிப்பிட்ட இடம் மட்டும் மரத்துப்போகவும் மருந்து கொடுக்கிறார்கள். குறிப்பிட்ட இடத்துக்கு மட்டும் மயக்க மருந்து தரப்படும்போது, அந்த இடம் மட்டும் மரத்துப்போய் வலி தெரியாது. ஆனால் தாய்க்கு நினைவிருக்கும்.

பொதுவான மயக்கத்தில் தசைகள் இலகுவாகி தூக்கம் வந்துவிடும். வலி தெரியாது. நினைவும் இருக்காது. கர்ப்பப்பையிலிருந்து குழந்தையை வெளியே எடுப்பதற்காக, தொப்புளுக்குக் கீழே அடிவயிற்றை வெட்டுவார் மருத்துவர். பிறகு குழந்தை, நஞ்சுக்கொடி, பிரசவப்பை எல்லாவற்றையும் வெளியில் எடுத்து வெட்டப்பட்ட கர்ப்பப்பையையும் அடிவயிற்றையும் தைத்து விடுவார்.

சிசேரியனுக்குப் பிறகு எப்படி நடந்து கொள்ள வேண்டும்?

o தாயின் உடல் நிலையைப் பொறுத்து நான்கிலிருந்து ஆறு நாட்கள் வரை மருத்து வமனையில் இருக்க வேண்டும். மருத்து வமனையிலிருந்து வீடு திரும்பியதும் மெல்ல உங்கள் வழக்கமான எளிய பணிகளைத் தொடக்கலாம்.
o சிசேரியன் அறுவை சிகிச்சை முடிந்து ஒரு மாதத்திற்குள்ளேயே உங்களுடைய எல்லா வேலைகளையுமே செய்ய இயலும்.

o ஆபரேஷன் முடிந்து ஓரிரு நாட்களில், நீங்கள் சாதாரண உணவை உட்கொள்ளலாம். சிசேரியனுக்கு உணவுக் கட்டுப்பாடுகள் கிடையாது. சமச்சீரான உணவு வகைகளைச் சாப்பிடுவது நல்லது. உணவில் புரதச்சத்து கொஞ்சம் அதிகம் இருக்கட்டும்.

o நெய் போன்ற கொழுப்புச்சத்து நிறைந்த பொருட்களைத் தவிர்க்கவும். காரணம், கர்ப்ப காலத்தின்போது உடல் எடை கூடியிருக்கும். அதைக் குறைப்பதற்கு இந்தக் கொழுப்பு உணவுகள் எந்தவகையிலும் உதவாது.

o ஆறு வாரங்களுக்கு அதிக எடையுள்ள பொருட்களைத் தூக்குவதைத் தவிர்க்கவும். அதே போல் தாம்பத்திய உறவையும் ஆறு வாரங்களுக்குத் தவிர்த்து விடுங்கள்.

o நான்கிலிருந்து ஆறுவாரங்களுக்குப் பிறகு, அடிவயிற்றுத் தசைகளுக்கான உடற் பயிற்சிகளைத் தொடக்கலாம். தவிர சிசேரியனுக்குப் பிறகு வேறென்ன செய்ய வேண்டும்… எப்போதெல்லாம் பரிசோதனைக்கு வரவேண் டும் என்பதையெல்லாம் உங்கள் மருத்துவரிடம் கேட்டுக் கொள்ளுங்கள். சிசேரியனால் ஆபத்து உண்டா?

பொதுவாக, சிசேரியன் அறுவை சிகிச்சை ஆபத்தில்லாதவை. மிகச் சில சமயங்களில் பிரச்சினைகள் வருவதுண்டு. ஆனால் எல்லா அறுவை சிகிச்சைகளிலும் அந்த ஆபத்து உண்டு. ஏதாவது தொற்றுநோயோ அல்லது இரத்தக்கசிவோ ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

மிக அரிதாக கர்ப்பப்பையை வெட்டிய இடம் மிகப் பலவீனமாக மாற வாய்ப்பிருக்கிறது. இது குடலிறக்கத்துக்கு வழி வகுத்து விடுகிறது. முதல் பிரசவம் சிசேரியன் என்பதால், அடுத்த பிரசவமும் சிசேரியனாக இருக்கும் என்ற கவலை வேண்டாம். உங்களது அடுத்த பிரசவம் இயல்பாக பெண்ணுறுப்பின் வழியே நிகழ வாய்ப்பிருக்கிறது.
ஆனால், உங்களுக்கு சிசேரியன் எந்தக் காரணங்களுக்காகச் செய்யப்பட்டது என்பதைப் பொறுத்து, அடுத்த பிரசவமும் சிசேரியனாக அமையும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.

source: http://ammathamil.com

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: