(14/04/10) அன்று TNTJ கிளைக்கூட்டம்

அல்லாஹ்வின் உதவியால்….. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருமங்கலக்குடி கிளையின் அலுவலகத்தில்  14/04/10அன்று மாலை 7:00 மணியளவில் கிளைக்கூட்டம் நடைபெற்றது . இதில் உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் கலந்துக் கொண்டனர்.

* வழுத்தூரில் இன்ஷா அல்லாஹ்…(15/04/10) அன்று  நடைபெற இருக்கும் நபிவழி திருமணத்திற்கு கிளை சார்பாக 15 நபர்கள் செல்வதாக தீர்மானிக்கப்பட்டது.

* இந்த ஆண்டு பத்தாவது மற்றும் பண்ணிரெண்டாவது தேர்ச்சி பெறும் மாண வர்களை தஞ்சாவூர் அழைத்துக்கொண்டு “வேலைவாய்ப்பு மையத்தில்” அவர்களுடைய கல்வித் தகுதியை பதிய வைக்கச் செய்வது என்று தீர்மானிக்கப்பட்டது.

* மேலும் ரங்னாத் மிஸ்ரா பரிந்துரைப்படி முஸ்லிம் சமுதாயத்திற்கு 10% இட ஒதுக்கீட்டை பெற்றிட வேண்டி இன்ஷா அல்லாஹ்…வருகின்ற  ஜூலை 04 அன்று சென்னை தீவுத்திடலில் நடைபெற இருக்கின்ற மாநில மாநாடு செயல்பாட்டிற்கான ஆயத்தங்களைப் பற்றி ஆலோசனை செய்யப்பட்டது.

இட ஒதுக்கீட்டின் பயன்ப்பாட்டைப் பற்றி நாம் சரியே அறியாதவர்களாக இருக்கிறோம். கண்டிப்பாக… படித்த ஒவ்வருவரும் அங்கே சென்று பதிவு செய்தால் இன்ஷா அல்லாஹ்…. நாம்  நம்  நாட்டிலேயே பணிசெய்யலாம்.

ஒரு சகோதரர் 15 ஆண்டுகளுக்கு முன்பு தனது படிப்பை MSc (Physics) முடித்த உடன் தனது கல்வித் தகுதியை வேலைவாய்ப்பு மையத்தில் பதிவு செய்திருக்கிறார். இத்தனை வருடங்களாக வெளிநாட்டில் வேலை செய்து வந்துள்ளார். ஆனால் தற்பொழுது 3.5% இட ஒதுக்கீட்டின் படி அவருக்கு நம் நாட்டிலேயே ஆசிரியர் பணி கிடைத்துள்ளது. (அல்ஹம்துலில்லாஹ்…)

மென்மேலும் இப்பணி சிறந்து விளங்க வல்ல ரஹ்மானாகிய அல்லாஹ்விடம் துஆ செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: