மாபெரும் இரத்த தான முகாம்: ரியாத் TNTJ வின் உயிர் காக்கும் மனித நேயப் பணி.

தமிழகத்தை தலைமையிடமாகக் கொண்டு உலகம் முழுவதும் ஏகத்துவக் கொள்கையை எத்திவைத்துக் கொண்டிருக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், பாதிக்கப்பட்டோருக்கு உதவுதல், நலிந்தோருக்கு உதவிக்கரம் நீட்டுதல், மாணவக் கண்மணிகளுக்கு உதவுதல், இறைதிருப்தியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு இன, மத, மொழி வேறுபாடின்றி அவசர சிகிச்சைகளுக்காக இரத்த தானம் செய்தல், முன்னேற்பாட்டிற்காக உயிர்காக்கும் இரத்ததான முகாம்கள் நடத்துதல் போன்ற பல்வேறு மனித நேயப்பணிகளை செய்து வருகின்றது.

சவூதி அரேபியாவில், அதன் தலைநகரான ரியாத் மாநகரில், பல்வேறு மனிதநேயப் பணிகளை தொடர்ந்து செய்து வரும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டலம், தனது 8 வது மெகா இரத்ததான முகாமை கடந்த 23-04-2010 வெள்ளிக்கிழமையன்று கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டி மருத்துவமனையில் நடத்தியது. காலை 11 மணிக்கு முகாம் ஆரம்பமாகும் என அறிவித்திருந்த போதும் 8.30 மணிக்கே குருதிக் கொடையளிக்க மக்கள் வந்து விட்டனர்.

இதன் மூலம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் செய்யும் மனித நேய பணிகளில் தங்களை இணைத்துக் கொள்ள மக்கள் கொண்டிருந்த ஆர்வம் வெளிப்பட்டது.

பல்வேறு வாகனங்களில் மக்களை அழைத்து வருவதாகட்டும்; மருத்துவமனையின் இரத்த வங்கிக்கு வழி சொல்வதாகட்டும், கொடையாளிகளுக்கு உதவிகள் செய்வதாகட்டும்; ரியாத் மண்டலத்தின் தொண்டர் அணியினர் பம்பரமாகச் சுழன்று மிகச்சிறப்பாக பணியாற்றினர். TNTJ என்ற முத்திரையுடன் கூடிய தொப்பியும், டீ-ஷர்ட்டும் அணிந்து மிடுக்குடன் நின்ற தொண்டர் அணியின் செயல்களை பாராட்டிய கொடையாளிகள், தங்களையும் அந்த அணியில் இணைத்துக் கொண்டது பல சிறப்புகளில் ஒரு அம்சம்.

காலையில் பரபரப்புடனும், அதே நேரம் சீரான ஒழுங்குடனும் துவங்கிய முகாம், ஜூம்மா தொழுகைக்காக சற்று நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது. தொழுகைக்குப் பின் மீண்டும் துவங்கப்பட்ட முகாமில் அதிக எண்ணிக்கையில் மக்கள் வந்துவிட, உடனடியாக களமிறங்கிய தொண்டர் அணியினர் அந்த கொடையாளிகளுக்கு விஷயத்தைக் எடுத்துக்கூறி பொறுமை காக்கும்படி செய்து அன்போடு கட்டுப்படுத்தினர்.

ஆண் கொடையாளிகளால் மருத்துவமனை நிரம்பி வழிந்து கொண்டிருக்கையில் பெண்களும் வந்து விட அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. இலங்கை, பங்களாதேஷ், சிரியா நாட்டைச் சேர்ந்தவர்களும், கேரளா, ஆந்திராவைச் சேர்ந்த பிற மாநில சகோதரர்களும் பங்கேற்றனர். TNTJவின் சேவையில் பங்குபெறும் வண்ணமாக பிற மத சகோதரர்களும் இரத்த தானம் செய்தனர். ரியாத் மண்டலத்தின் கிளை நிர்வாகிகளும் கொடையாளிகளை அயராது மருத்துவமனைக்கு கொண்டு வந்த வண்ணம் இருந்தனர். கொடையாளிகளுக்காக சிறப்பு மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த முகாமில் 217 பேர் குருதிக் கொடையளித்தனர். கிட்டத்தட்ட சுமார் 100 லிட்டர் இரத்தம் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பலரும் கம்பெனியில் வேலை இருந்ததால் தங்களால் முகாமுக்கு வர இயலவில்லை. அடுத்த முகாம் எப்போது நடத்துவீர்கள் என்று பலர் தொலைபேசியில் கேட்டபோது பணிகளுக்கிடையில் நிர்வாகிகளால் பதில் சொல்லவும் முடியவில்லை. இன்ஷா அல்லாஹ், விரைவில் அவர்களுக்கான இரத்ததான முகாம் நடத்தப்படும்.

மாலை 5.30 மணிக்கு இரத்த தான முகாம் முடிவடைந்தது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில், கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டியில் தொடர்ந்து இரத்த தான முகாம்கள் நடத்தி வரும் “ரியாத் TNTJ” வின் சேவையை பாராட்டி, இந்த உயிர்காக்கும் சமுதாயப்பணியை அங்கீகரிக்கும் விதமாக, அரபியிலும் ஆங்கிலத்திலுமாக இரு கேடயங்களை கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டியின் இரத்த தான பிரிவு தலைமை அதிகாரி Dr. ஃபத்தூஹ் அல் ஆலம் ரியாத் நிர்வாகிகளிடம் வழங்கினார்.

மேலும் அவரது நன்றி உரையில் “ரியாத் TNTJ வின் தொடர்ச்சியான இரத்த தான முகாம்களினால் பலரும் விழிப்புணர்வு பெற்று, இரத்தக் கொடையளித்து வருகின்றனர். இருப்பினும், ரியாத் TNTJ வின் முகாம் என்றால் எந்த வித டென்ஷனும் இல்லாமல், தான் ரிலாக்ஸாக இருக்க முடியும்; ஏனெனில், அனைத்து ஒருங்கிணைப்பு பொறுப்புகளையும் ரியாத் நிர்வாகிகளே சிறப்பாக வடிவமைத்து செய்து விடுகிறீர்கள்; கொடையாளிகளை மருத்துவமனைக்கு அழைத்து வருவது, ஒழுங்குபடுத்துவது; எவ்வளவு பேர் வந்தாலும் டோக்கன் சிஸ்டம் மூலம் அமைதியாக நிகழ்ச்சி நடத்துவது, இரத்த தானத்திற்காக பதிவு செய்வது, ஃபார்ம்களை நிரப்புவது; சீரான உணவு/ஜூஸ்/தண்ணீர் விநியோகம், மீண்டும் கொடையாளிகளை அவர்களது இருப்பிடத்திற்கு கொண்டு போய் சேர்ப்பது என்று அடுக்கிக்கொண்டே போகலாம் என பாராட்டினார். அல்ஹம்துலில்லாஹ்!

மேலும், கிங் ஃபஹத் மருத்துவமனை மட்டும் இல்லாமல், ரியாத், தம்மாம், ஜெத்தா, மக்கா, மதீனா வின் உள்ள மற்ற மருத்துவமனைகளுக்கும் தங்களால் இரத்ததை விநியோகிக்க முடிகின்றது. எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் ரியாத் TNTJ செய்யும் பணிகளுக்கு அல்லாஹ் நற்கூலி வழங்குவனாக என பிரார்த்திப்பதாக கூறி நெகிழ்ச்சியோடு தனது உரையை முடித்துக் கொண்டார்.

ஏற்கனவே ஹஜ்ஜூ பயணிகளுக்காக வருடந்தோறும் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொள்ளும் இரத்ததான முகாம்களை நடத்தி வரும் TNTJ ரியாத் மண்டலம், தற்போது தனது 8 வது இரத்ததான முகாமை நடத்தி இருக்கின்றது. பல ஆயிரம் கொடுத்து இரத்தத்தை தானமாக பெறும் நிலையை மாற்றிய ரியாத் TNTJ உயிர் காக்கும் இரத்த தானத்திற்கு பிரதிபலனை இறைவனிடம் மட்டுமே எதிர்பார்க்கின்றது.

சவூதி அரேபியாவிலேயே அதிகமானோர் இரத்ததானம் செய்தவர்கள் என்ற பெருமையை இன்றளவும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே!

இந்த செய்தி சவுதியில் வெளியாகும் அரப் நியுஸ் பத்திரிக்கையில் வெளியானது:



Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: