உடல் சூட்டைத் தணிக்கும் வெந்தயம்.

வெந்தய விதைகளில் புரதம், மாவுச்சத்து, சர்க்கரை பிசின், வைட்டமின் உலோகச் சத்து, செரிமானப் பொருள்வகை முதலியன அடங்கியுள்ளன. இந்த விதையில் சத்துள்ள அமினோ அமிலங்களும் அடங்கியுள்ளன. செடியின் இலைகளிலும், தண்டுகளிலும், கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, அஸ்கார்பிக் அமிலம் ஆகியன அடங்கியிருக்கின்றன.
உடல் சூடு, மலச்சிக்கலை போக்க
இரவில் தூங்குவதற்கு முன் ஒரு சிட்டிகை அளவு சுத்தமான வெந்தயத்தை எடுத்து, 200 மி.லி. அளவு தண்ணீரில் போட்டு மூடி வைத்து விடவும்.

காலையில் எழுந்ததும் வாய் கொப்பளித்த பின் தண்ணீரில் ஊறிய வெந்தயத்தை சாப்பிடுங்கள். பின் வெந்தயத் தண்ணீரை குடியுங்கள். தேவைப்பட்டால் கூடுதலாக குளிர்ந்த நீரினையும் குடிக்கலாம்.

வாரம் ஒருமுறை இதுபோன்ற வெந்தயத் தண்ணீர் குடித்து வர, உடல் சூடு, மலச்சிக்கல் என எந்த நோயும் உங்களை அண்டவே அண்டாது.


வயிற்றுக்கோளாறு நீங்க
ஒரு தேக்கரண்டியளவு வெந்தயத்தை எடுத்துக் கொண்டு, வாணலியில் போட்டு வறுத்து, ஆற வைத்த பின் மிக்ஸியில் பொடி செய்து கொள்ளுங்கள். வெந்தயப் பொடியை ஆறிய பின் பாட்டிலில் போட்டு தேவைப்படும் போது தண்ணீரிலோ/மோரிலோ கலந்து பயன்படுத்தலாம்.

வெந்தயத்துடன், சிறிதளவு பெருங்காயத்தையும் போட்டு வறுத்து பொடி செய்த பின் ஒரு டம்ளர் வெந்நீரிலோ அல்லது மோரிலோ போட்டு பருகி வர வயிற்றுக் கோளாறுகள், அஜீரணம் போன்றவை ஏற்படாது.

வயிற்றுப்போக்கு ஏற்படும் பட்சத்தில், வெந்தயம் – பெருங்காயப் பொடியை ஒருமணி நேரத்திற்கு ஒருமுறை என 3 முறை குடிக்க வயிற்றுப்போக்கு கட்டுப்படுத்தப்படும்.
மோரில் ஊற வைத்த வெந்தயத்தை தினமும் காலையில் சாப்பிட்டால், நீரிழிவு, வயிற்றுப்புண், வாய் துர்நாற்றம் உட்பட பல நோய்கள் குணமாகும்.
சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைக்க
சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் இந்த பொடியை தண்ணீர்/மோரில் கலந்து குடித்தால் சர்க்கரை நோய் கட்டுபாட்டில் இருக்கும். வெறும் வயிற்றில் இதனைக் குடிக்க வேண்டும்.
வெந்தயத்தை நன்றாக வறுத்து பொடிசெய்து காபி பொடியுடன் கலந்து காபி போட்டு் குடித்தால், சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.
அழகுக்கு
பெண்களுக்கு முடியழகுதான் முதன்மையானது. முடி கொட்டாமல் செழித்து வளரவும், தலைக்கு குளுமையளிக்கவும் வெந்தயத்தை சீயாக்காயோடு சேர்த்து அரைத்து வைத்துக் கொண்டு தலைக்குக் குளித்து வருவது கைமேல் பலந்தரும்.
அளவுக்கு மிஞ்சி நிறைய முடி உதிர்ந்து என்ன செய்வது என்று கவலைப் படுபவர்களுக்கு உதவுவதும் வெந்தயம்தான். வெந்தயத்தைத் தண்ணீரில் ஊற வைத்து வெண்ணெய் போன்று அரைத்து தலையில் தேய்த்து வைத்து அரைமணிநேரம் ஊறியதும் குளிக்க வேண்டும். ஓரிரு முறையிலேயே உடனடி பலனை எதிர்பாராமல் தொடர்ந்து சில மாதங்களுக்கு வாரம் ஓரிரு முறை வீதம் பின்பற்றவேண்டும்.
பருவ வயதில் முகத்தில் நிறைய பருக்கள் வந்து தாங்கமுடியாத எரிச்சலிருந்தால் வெந்தயத்தை அரைத்து அப்பேஸ்ட்டை அப்பி வைத்து வந்தால் எரிச்சல் அடங்குவதோடு பருக்களும் காணாமல் போய்விடும். பருவ வயது தாண்டிய பிறகு உடல் உஷ்ணத்தால் பருக்கள் வந்தால் ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை ஒரு கப் தயிரில் ஊறவைத்து குறைந்தது மூன்று நான்கு நாட்களுக்காவது அதிகாலையில் எழுந்ததும் குடித்து வரவேண்டும்.
தினமும் காலையில் வெறும் வயிற்றில் முதல் நாள் [வெந்தயம் + கொழுந்தாக இருக்கும் கறிவேப்பிலையை தயிரில்+ துளி கல் உப்பு கலந்து ]ஊற வைத்து சாப்பிட தோலில் மினுமினுப்பு வரும்.
மேலும் பல பயன்கள்
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தலை வழுக்கையைத் தடுக்கும் மருந்தாகவும் பயன்பட்டு வந்தது. வெந்தயத்தை உணவில் சேர்க்க, உடல் செழுமையாக இருக்கும். உடல் வலியும் தீரும். கல்லீரல் நோய்களை நீக்கும்.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தலை வழுக்கையைத் தடுக்கும் மருந்தாகவும் பயன்பட்டு வந்தது. வெந்தயத்தை உணவில் சேர்க்க, உடல் செழுமையாக இருக்கும். உடல் வலியும் தீரும். கல்லீரல் நோய்களை நீக்கும்.
நமது அன்றாட உணவின் அங்கமாகவும், நறுமணப் பொருள் என்ற வகையில் உணவு வகைகளில் ஊட்டச்சக்தியையும், சுவையையும் அதிகரிக்கின்றது. நீரிழிவு நோய்க்கு நல்ல பலன் அளிக்கும் என நம்பப்படுகிறது.
குளிர்ச்சித் தன்மையளிப்பதால் பெரியம்மை நோய் கண்டவர்க்கு பானமாகவும், உடலுரமுண்டாக்குவதற்கும், ஆண்மை பெருக்குவதற்கும் பயன்படுகிறது.
கூந்தல் தைலத்திலும் வாசனைப் பொருள்களிலும், சாயம் தயாரிக்கவும் பயன்படுகிறது.
ரிக்கெட்ஸ், இரத்த சோகை, நீரிழிவு ஆகிய துன்பந்தரும் நோய்களை குணப்படுத்தும் குணமும், திறனும் இதற்குண்டு. இலைகள் உடலுக்கு குளிர்ச்சியூட்டும். மிதமான பேதி மருந்து, புறவீக்கம், தீக்காயங்கள் இவற்றைக் குணப்படுத்த உதவுகின்றன.
வறுத்த வெந்தயப் பொடி மெலிந்த உடலைப் பெருக்கச் செய்யும்.
பச்சை பயறுடன் வெந்தயம் சேர்த்து வெந்நீரில் குழைத்து உடல், முகம், கை, கால்களால் தடவி வர தோல் பளபளப்பாகும்.
ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யவும் வெந்தயம் பயன்படுகிறது. பிரசவமான பெண்களுக்கு கஞ்சியில் வெந்தயத்தைச் சேர்த்து காய்ச்சிக் கொடுக்க பால் சுரக்கும்.
Advertisements

10 Responses

 1. ABOVE THE TIPS IS VERY SIMPLE METHOD @MATERIAL TO USE.THANK U

 2. ok i would like

 3. very good

 4. ABOVE THE TIPS IS VERY SIMPLE METHOD @MATERIAL TO USE.THANK U,very good.

 5. Thanks for Your Information, It is very helpful to me

 6. Amazing information and very useful also.

 7. உலக சுகாதார நிறுவனம், அளவுக்கதிகமாக கைபேசி உபயோகிப்பவர்களுக்கு மூளையில் கட்டி ஏற்படக்கூடும் என்று சமீபத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளது.

  2000-லிருந்து 2004 வரை 5 வருடங்களில் 13 நாடுகளில் கைபேசி உபயோகிக்கும் 12 ஆயிரத்து 800 நபர்களிடம் 8 வித ஆய்வுகள் மேற்கொண்டதில் 6 ஆய்வுகள் அளவுக் கதிகமாக அலைபேசி உபயோகிப்பதற்கும் மூளையில் கட்டி ஏற்படுவதற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக தெரிவிக்கிறது.

  அளவுக்கு அதிகமாக அலைபேசியை உப யோகிப்பவர்களில் நூற்றுக்கு 39 பேர் `கிலி யோமா’ என்கிற மூளைக்கட்டி நோயால் அவதிப் படுவதாகக் கண்டு பிடித்துள்ளனர், ஆய்வா ளர்கள்.

  10 வருடங்களுக்கு மேல் அலைபேசி உபயோ கிப்பவர்களின் மூளைக்கும் காதிற்கும் இடையி லான மிருதுவான `அகோஸ்டிக் நியூரினோமா’ எனப்படும் காதொலி நரம்பு அதிகஅளவில் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது என்று மற்று மோர் ஆய்வு குறிப்பிடுகிறது. அலைபேசி வெளிவிடும் மின்காந்த கதிர்வீச்சினால் புத்தி பேதலிக்கும் மூளைக்காய்ச்சல், காது செவிடா கும் தன்மை, உமிழ்நீர் சுரப்பிகளில் கட்டி, விந்து உற்பத்தி குறைதல், இயல்பிற்கு மாறான இருதயத்துடிப்பு, புற்றுநோய் போன்றவை ஏற் படுவதற்கான வாய்ப்பு அதிகம் என்பதையும் இந்த ஆய்வு வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது.

  டில்லியிலுள்ள மூல்சந்த் மருத்துவ நிறுவனத்தின் நரம்பியல் அறுவைசிகிச்சை நிபுணர் டாக்டர் விக்ரம் சிங் இதுபற்றி கூறும்போது, `நமது மூளையில் மின்சார ஓட்டம் உள்ளது. அலைபேசியில் இருந்து வெளியாகும் மின்காந்த கதிர்வீச்சு மூளையின் மின்னோட்டத்தைப் பாதிக்கிறது” தொடர்ந்து 20 நிமிடம் செல்போனில் பேசினாலே நமது உடம்பின் வெப்பநிலை 1 டிகிரி அதிகரிக்கும் அபாயம் உள்ளது!” என்கிறார்,

  “2003-ல் தான் அலைபேசி சாம்ராஜ்யம் உருவானது. தற்போது என்னிடம் வரும் குழந்தையில்லா மலட்டுத்தன்மையுள்ள தம்பதியர்களை ஆய்வுசெய்ததில் நூற்றுக்கு 40 பேர்ஆண்களே மலட்டுத்தன்மையுடன் காணப்படுகின்றனர். இதற்கு அலைபேசி வெளி விடும் மின்காந்த கதிர்வீச்சும் முக்கியக் காரணியாக அமைந்துள்ளது..!” என்கிறார் டில்லியிலுள்ள குழந்தையின்மை மற்றும் கருத்தரிப்பு ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் டாக்டர் வானி சச்தேவ் கவுர்.

  2004-ல் அலைபேசி உபயோகிக்கும் ஆண்களை ஆய்வு செய்தபோது அடிக்கடி அலைபேசியை உபயோகிக்கும் ஆண்களுக்கு 30 சதவீதம் விந்தணு உற்பத்தி குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது.

  அதுமாதிரி அலைபேசி கோபுரங்கள் வெளியிடும் மின்காந்த கதிர்வீச்சினால் புற்றுநோய் பாதிப்பு, தூக்கமின்மை, கை-கால்கள் மரத்துப்போதல், மறதி, எரிந்து விழுதல், எரிச்ச லடைதல், ஒற்றைத்தலைவலி போன்ற நோய்கள் அப்பகுதியில் உள்ள பொதுமக்களை பாதிக்கின்றன என்பதும் ஆய்வில் உறுதிப்படுத்தப் பட்டிருக்கிறது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: