செம்மொழி மாநாடு…வீணடிக்கப்பட்ட கோடிகள்!

செம்மையாக நடந்து முடித்திருக்கிறது, செம்மொழி மாநாடு… கிட்டத்தட்ட முன்னூத்தி ஐம்பது கொடிகள் இதற்காக செலவிடப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மாநாட்டுக்காக பல்லாயிரம் மரங்கள், கோவை நகரில் வெட்டப்பட்டுள்ளன.பல லட்சக்கணக்கான மக்கள் இந்த மாநாட்டுக்கு வந்து ‘தமிழை வளர்த்துள்ளனர்’.

எதற்காக இந்த மாநாடு? இந்த மாநாட்டினால் என்ன பயன்? கவியரங்குகளும் பட்டிமன்றங்களும் ‘தலைவனை’ துதிபாடியே துவங்குகின்றன… மாநாடு செம்மொழிக்கா? அல்லது செந்தலைவனுக்கா..? மூத்த குடும்பத்தின் பணத்தில் செம்மொழி மாநாட்டை ஒட்டி கொடிகளில்கோவையில் சொத்துகள் வாங்கி குவிக்கப்பட்டுள்ளன என்பது உடன்பிறப்புகளுக்கு தெரியாமல் போனதோ?

தலைவன் தனது தமிழ் தாகத்தை முன்னூற்றைம்பது கோடி கொடுத்து தீர்த்து கொண்டிருக்கிறார். மூன்று வேளை சோறில்லாமல் பட்டினி கிடக்கிறது தமிழனின் குடும்பம்.

எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற முழக்கம் இருக்கட்டும். தமிழிலேயே பெயர் பலகைகள் வைக்கவேண்டும் என்ற அதிகாரம் இருக்கட்டும். முதலில் தனது பேரன்களின் ‘ரெட் ஜெயின்ட் மூவீஸ்’ மற்றும் ‘கிளௌட் நயன் மூவீஸ்’ என்ற ஆங்கில கம்பெனி பெயர்கள் மாறட்டும். தலைவன் தமிழை தனது வீட்டிலிருந்து முதலில் வளர்க்கட்டும்.

Advertisements

One Response

  1. for world tamil conference the budget in not 50 crores its 400 crores officially

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: