மைக்ரோசாப்ட் ஆன்லைன் ஆபீஸ் (Online Office) அப்ளிக்கேஷன்.

மைக்ரோசாப்ட் இணையவெளியில் தன் வாடிக்கையாளர்கள் பயன்படுத்த ஆபீஸ் தொகுப்பினை, அதிகாரபூர்வமாக சென்ற வாரம் வெளியிட்டுள்ளது. கூகுள் மற்றும் ஸோஹோ நிறுவனங்கள் இந்த வகையில் வெகு காலமாக முன்னேறி வருவதால், தான் பின் தங்கிவிடக் கூடாது என்ற எண்ணத்தில் மிக வேகமாக, ஆபீஸ் தொகுப்பு இணையத்தில், கிளவுட் கம்ப்யூட்டிங் முறையில், மைக்ரோசாப்ட் வெளியிட்டுள்ளது.

வேர்ட், எக்ஸெல், பவர்பாய்ண்ட் மற்றும் ஒன் நோட் ஆகிய தொகுப்புகள் பயன்பாட்டிற்குக் கிடைக்கின்றன. விண்டோஸ் லைவ் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் யாவரும் இதனை அணுகிப் பயன்படுத்தலாம். இந்த இணைய தொகுப்பு பிரிட்டன், அமெரிக்கா, அயர்லாந்து மற்றும் கனடா நாட்டில் உள்ளவர்களுக்கு மட்டும் என அறிவிக்கப்பட்டாலும், மற்ற நாட்டில் உள்ளவர்களும் பயன்படுத்தும் வகையில் இது கிடைக்கிறது.

இந்த தொகுப்புகளைப் பயன்படுத்த அனுமதி பெறுவதுடன், 25 ஜிபி ஆன்லைன் ஸ்பேஸ் ஒவ்வொருவருக்கும் தரப்படுகிறது. ஆபீஸ் 2010 தொகுப்பிற்கு இணையான ஒரு சாதனம் இது என்றும், கம்ப்யூட்டர், போன் மற்றும் பிரவுசர் வழியாக யாரும் இதனைப் பயன்படுத்தலாம் என்றும் மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது.

ஆபீஸ் தொகுப்புகளில் ஒன்றில் உருவாக்கப்பட்ட பைல்கள் எதனையும், இந்த இணைய தொகுப்பிலும் எடிட் செய்து சேவ் செய்து பயன்படுத்தலாம். நம் கம்ப்யூட்டர்களிலும் பதிந்து வைத்துக் கொள்ளலாம். உங்களுடைய பைல் பழைய ஆபீஸ் பதிப்புகளில் உருவாக்கப் பட்டிருந்தாலும், அந்த பதிப்புக்கான எடிட்டிங் வசதியை, இந்த ஆன்லைன் ஆபீஸ் தொகுப்பு தருகிறது. இணையத்தில் இவ்வாறு செயல்படுவதால், ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவர், டாகுமெண்ட் அல்லது பைல் ஒன்றை எடிட் செய்திடலாம்.

இதன் யூசர் இன்டர்பேஸ் மிகவும் எளிமையாகவும், நம் பெர்சனல் கம்ப்யூட்டரில் செயல்படுவது போல அனுபவத்தினைத் தருவதாகவும் உள்ளது. இந்த இணைய ஆபீஸ் தொகுப்பு, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரில் மட்டும் இயங்கும் என எண்ண வேண்டாம். குரோம், பயர்பாக்ஸ் மற்றும் ஆப்பரா பிரவுசர்களிலும் மிக நன்றாக இது இயங்குகிறது. ஆனால் ஒரே ஒரு குறை. ஆபீஸ் புரோகிராமில் எடிட் பட்டன், இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் மட்டுமே செயல்படுகிறது. புதிதாக வந்திருக்கும் ஆபீஸ் 2010 தொகுப்புடன் முழுமையாக இணைந்து செயல்படும் வகையில், இந்த இணைய தொகுப்பும் இருக்கின்றது.

இனி, என் கம்ப்யூட்டரில் ஆபீஸ் தொகுப்பு இல்லை என்று யாரும் கவலைப்பட வேண்டியது இல்லை. இணையத் தொடர்பு மட்டும் இருந்தால் போதும். இணைய வெளியிலேயே, ஆபீஸ் தொகுப்பினைப் பெற்று இயக்கலாம். பைல்களை உருவாக்கலாம். மற்றவர்களுடன் சேர்ந்து எடிட் செய்து சீர் படுத்தலாம்.

முதலில் உங்களுக்கு விண்டோஸ் லைவ் அக்கவுண்ட் இருப்பதனை உறுதிப்படுத்திக் கொள்ளவும். இல்லையேல் உடனே உருவாக்கிக் கொண்டு பின் இதற்குச் செல்லவும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: