ஹஜ் பயணிகளுக்காக ரியாதில் மாபெரும் இரத்த தான முகாம்.

ஹஜ் பயணிகளுக்காக ரியாதில் மாபெரும் இரத்த தான முகாம்! 120 லிட்டருக்கு மேல் இரத்தம் கொடை!!

(அரப் நியூஸ், சவூதி கெஸட், தினமலர் பத்திரிகைச் செய்திகள் கீழே)

இரத்த தானங்கள் செய்து உயிர்களைக் காப்பதில் தொடர்ந்து மூன்று வருடங்களாக தமிழகத்தில் முதலிடத்தில் இருந்து வரும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், 46 கேடயங்களையும் பாராட்டுக்களையும் கடந்த வாரம் பெற்றதை அனைவரும் அறிவர். தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் இந்த இரத்ததான சேவையை அது செய்து வருகின்றது.  இவ்வருடம் ஹஜ் செய்வதற்காக வரும் பயணிகளில் தேவைப்படுவோருக்கு இரத்தம் வழங்குவதற்காக ஒரு முகாமை ஏற்பாடு செய்ய வேண்டுமென கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டி மருத்துவமனையினர் (KFMC) ரியாத் TNTJ-விடம் வேண்டுகோள் விடுத்தனர். அதனை ஏற்ற ரியாத் TNTJ, கடந்த 05-11-2010 வெள்ளிக்கிழமையன்று மாபெரும் 10 ஆவது இரத்த தான முகாமை நடத்தியது. இது ஹஜ் பயணிகளுக்காக நடத்தப்பெறும் 4 ஆவது முகாம் ஆகும்.

இந்த முகாமில் 325 க்கும் மேற்பட்ட சகோதர-சகோதரிகள் கலந்து கொண்டனர். காலை 10 மணிக்கு துவங்கும் என அறிவிக்கப்பட்ட முகாம், மக்கள் கூட்டம் அலை மோதியதால், காலை 9 மணிக்கே துவங்கியது. இம்முகாமில் பெண்கள் உட்பட 277 பேரிடம் மட்டும் இரத்தம் பெறப்பட்டது. இரத்த அழுத்தம் அதிகம், ஹீமோகுளோபின் குறைவு, ஹஜ்ஜூக்காக தடுப்பூசி  போன்ற காரணங்களுக்காக பல சகோதரர்களால் இரத்தம் வழங்க முடியவில்லை. மாலை 5 மணிக்கு பிறகும் கொடையாளிகள் தொடர்ந்து வந்து கொண்டே இருந்த நிலையில், காலையிலிருந்து தொடர்ச்சியாக பணியாற்றும் இரத்த வங்கி ஊழியர்கள் களைப்புற்ற காரணத்தால், இத்துடன் முடித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ள, முகாமில் 302 பேர்களோடு பதிவு செய்வது நிறுத்தப்பட்டது. 120 லிட்டர் இரத்ததிற்கு மேல் பெறப்பட்டது இதுவே முதல் முறை.

இரத்த வங்கி பொறுப்பாளர்கள் டாக்டர். ஃபத்தூஹ் அல் ஆலம், சவூதியைச் சேர்ந்த சகோ. அப்துல் மஜீத் ஆகியோர் குருதிக் கொடையளித்தவர்களுக்கும் ரியாத் TNTJ – யினருக்கும் நன்றி தெரிவித்தனர். ரியாத் மண்டலத்தின் மருத்துவ அணி பொறுப்பாளர், இணைச் செயலாளர் சகோ. அப்துர்ரஹ்மான் நவ்லக், தலைமையில் சிறப்பாக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.. தொண்டர் அணி பொறுப்பாளர், துணைச் செயலாளர் சகோ. (சாகுல்) ஹமீது தலைமையில், தொண்டர் அணியின் கடுமையான உழைப்பும் ஒத்துழைப்பும் இம்முகாம் சிறப்புடன் நடைபெற முக்கிய காரணமாகும். மண்டல – கிளை நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் பம்பரமாக சுழன்று பணியாற்றி கொடையாளிகளை முகாமுக்கு அழைத்து வந்திருந்தனர்.

இரத்தம் வழங்கும் கொடையாளிகள், முந்தைய இரவு நன்றாக குறைந்தது 5-6 மணி நேரமாவது உறங்கியிருக்க வேண்டும் என்றும், திரவ உணவுகளை சாப்பிட்டிருக்க வேண்டும் எனவும் கொடையாளிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. முஸ்லிமல்லாத தமிழ் சகோதரர்களும் கலந்து கொண்டு, TNTJவின் பணியை பாராட்டினர்.

இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஏமன், சவூதி நாட்டைச் சேர்ந்தவர்களும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மஹாராஹ்டிரா, சட்டீஸ்கர் மாநிலங்களைச் சேர்ந்த சகோதரர்களும் இம்முகாமில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. ரியாத் மண்டலம் தொடர்ச்சியாக KFMC -யில் முகாம்கள் நடத்துவதால், மருத்துவமனை அதிகாரிகளே ரியாத் TNTJ பெயரில் பேனர்கள் தயாரித்து மருத்துவமனையில் பல இடங்களில் வைத்திருந்தனர்.

வெளிநாடுகளிலேயே அதிகமாக இரத்ததானம் செய்த மண்டலம் என்ற இடத்தை தொடர்ந்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ரியாத் மண்டலம் தக்க வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நடைபெற்ற சிறப்புற்குரிய இரத்த தான முகாம் குறித்து, சவூதி  அரேபியாவின் இரு பெரிய ஆங்கில பத்திரிகைகளான “அரப் நியூஸ்”, “சவூதி கெஸட்” – களிலும், தினமலர் பத்திரிகையிலும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: