ரேஷன் கார்டு: முஸ்லிம்களை அலைக்கழிக்கும் அதிகாரிகள்! – முஸ்லிம் பெண்ணின் (மாற்றுதிறனாளி) கதறல்!

படத்தில் இருப்பது ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளத்தில் வசித்து வரும் முஸ்லிம் தம்பதியினர் (மாற்று திறனாளிகள் பெண் இஸ்லாத்தை ஏற்றவர்) . இவர்கள் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு குடும்ப அட்டைக்காக விண்ணப்பித்துள்ளனர். அதிகாரிகள் அவர்களுக்கு குடும்ப அட்டை வழங்காமல் இது வரையிலும் இழுத்தடித்து வருகின்றனர்.

சரி கலக்ட்டரிடம் இது பற்றி மனு கொடுக்கலாம் என்று இருவரும் முடிவு செய்து குறை தீர்க்கும் நாள் அன்று கலக்ட்டர் அலுவலகத்திற்கு தனது பெண் குழந்தையுடன் இருவரும் தவழ்ந்து சென்றுள்ளனர்.

ஆனால் அங்கும் அவர்களுக்கு ஏமாற்றமே.. கலக்ட்டர் அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள் இவர்களுக்கு சரியாக பதில் அளிக்கவில்லை!

எனவே கோபமடைந்த இருவரும் அங்கேயே கதறி அழுது அதிகாரிகளுக்கு சாபம் கொடுத்துள்ளனர். (பாவம் .. மாற்றுதிறனாளிகளால் வேறு என்ன செய்ய முடியும்)

இவர்களை பார்த்தால் யாருக்கும் பரிதாபம் வரும் ஆனால் ஏன் இந்த அதிகாரிகளுக்கு வரவில்லை? இவர்கள் முஸ்லிமாக இருப்பதாலா?

2 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் 2 நாளில் ரேஷன் கார்டு தருவதாக கூறுகின்றனர். இவர்களுக்கு மனிதாபிமானமே இல்ல எனக் கணவர்  அப்துர் ரஹீம் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த செய்தி பத்திரிக்கையில் வெளியானது. தேர்தல் நேரத்தில் அரசிற்கு கெட்ட பெயர் வந்துவிடக் கூடாது என்பதற்காக சம்பந்தப்பட்ட கலக்ட்டரை உயர் அதிகாரிகள் தொடர்பு கொண்டு அவர்களுக்கு குடும்ப அட்டை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது


ரேஷன் கார்டுகள் வழங்குவதில் அதிகாரிகள் பகல் கொள்ளையடிக்கின்றனர். மேலும் லஞ்சம் தரவில்லை எனில் பொதுமக்களை குறிப்பாக முஸ்லிம்களை பெரிதும் அலைக்கழிக்கின்றனர்.

”உணவுப் பொருள் வழங்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புதுறை” தொடர்பாக பின் வரும் தமிழ அரசின் இணையதளம் மூலம் ஆன்லைனில் புகார் அளிக்கலாம்:

http://wserver1.tn.nic.in:9022/ccs_consumers/complaint.jsp

லஞ்சம் வாங்குவோரை மாட்டி விட மத்திய அரசின் புதிய ஆன்லைன் திட்டம்:

http://www.tntj.net/உங்கள்-பகுதி/செய்திகள்/central-vigilance-commission-vigeye/

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: