பயனுள்ள தகவல்கள்:

1. தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் அறிவிப்பு.

2. தேர்வுகளை எழுத விரும்புவோர் இம்மாதம் 28-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

3. புற்றுநோயால் ஆண்டுக்கு 10 லட்சம் பேர் பாதிக்கப்படுகிறார்கள் ஏன் ?

4. சுற்றுச்சூழல் பாதிப்புகளை தடுக்க போதிய விழிப்புணர்வை அனைத்து தரப்பு மக்களுக்கும் தேவை.

5. உலக சுகாதார ஆராய்ச்சி நிறுவனத்தின் எச்சரிக்கை.

1. துபையில் பணிபுரிய கட்டடத் தொழிலாளர்களுக்கு (கொத்தனார்) வாய்ப்பு உள்ளதாக தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. பணியில் சேர விருப்பம் உள்ளவர்கள் 40வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். இவர்களுக்கான நேர்முகக் தேர்வு வரும் பிப்ரவரி 11, 12-ம் தேதி தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

இதில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் தங்களது சுய விவரத்துடன் (பயோ-டேட்டா), உண்மையான அனுபவம், வெள்ளை நிற பின்னணியில் எடுக்கப்பட்ட 5 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், பாஸ்போர்ட், அதன் நகல் ஆகிவற்றுடன் நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்களில் காலை 9மணிக்கு வரவேண்டும்.

மேலும் விவரங்களுக்கு www.omcmanpower.com என்ற இணைய தள முகவரியிலோ, 044- 2446 4268, 2446 4269 என்ற தொலைபேசி எண்களிலோ, 99403 93617, 99529 40460 என்ற செல்போன் எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என்று அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சந்தோஷ் கே. மிஸ்ரா அறிவித்துள்ளார்.

2. தேசிய திறந்த வெளிப் பள்ளியின் மூலம் வரும் அக்டோபர் மாதத்தில் தேர்வுகளை எழுத விரும்புவோர் இம்மாதம் 28-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அதன் மண்டல இயக்குநர் ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.

தேசிய திறந்தவெளிப் பள்ளியில் உயர்நிலை, மற்றும் மேல்நிலைக் கல்வி படிப்புகளுக்கான சேர்கைக ஆண்டு முழுவதும் நடைபெறுகிறது. ஆண்டுதோறும் அக்டோபர் – நவம்பர், ஏப்ரல் – மே என இரண்டு பொதுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

இந்த ஆண்டு அக்டோபர் நவம்பரில் தேர்வு எழுத பிப்ரவரி 28-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

உயர்நிலைப் பள்ளி படிப்பை முடித்தவர்கள் உடனடியாக மேல்நிலைப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். இப்போது விண்ணாப்பித்தால் இந்த படிப்பை அவர்கள் ஏப்ரல் 2013-ல் நிறைவு செய்யலாம்.

அதே போல பாலிடெக்னிக், ஐ.டி.ஐ. முடித்தவர்களும் தேசிய திறந்த வெளிப்பள்ளியில் மேல்நிலைக் கலவிப் படிப்பில் சேரலாம்.

3. புற்றுநோயால் ஆண்டுக்கு 10 லட்சம் பேர் பாதிக்கப்படுவதாக புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் டாக்டர் வி. சாந்தா தெரிவித்தார்.

ஆரம்ப நிலையிலேயே புற்றுநோயைக் கண்டறிந்து அதற்கான தீர்வு காண போதிய விழிப்புணர்வு வேண்டும் என்றும் அவர் கூறினார்.புற்றுநோய் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் பிப்ரவரி 4-ம் தேதி உலக புற்றுநோய் தினமாக அனுசரிக்கப்டுகிறது. இதனையொட்டி, சென்னை அடையாறில் உள்ள புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் வெள்ளிக்கிழமை புற்றுநோய் குறித்த கருத்தரங்கம் நடந்தது.

இதில் டாக்டர் வி. சாந்தா பேசியது: இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தியாவில் 1984-ம் ஆண்டு கணக்குப்படி ஆண்டுக்கு 4 லட்சத்து 93ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர். அது இப்போது 10 லட்சமாக உயர்ந்துள்ளது.

புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களில் பெரும்பாலோனோர் நோய் முற்றிய நிலையில்தான் சிகிச்சைக்கு வருகின்றனர். புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் முழுமையாக குணப்படுத்த முடியும்.

மார்பகம், கர்ப்பப்பைவாய் புற்றுநோயால் பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர்.

குறிப்பாக நகர்ப்புற பெண்கள் மார்பக புற்றுநோயாலும், கிராமப்புற பெண்கள் கர்ப்பப்பைவாய் புற்றுநோயால் அதிக அளவில் பாதிக்கப்படுவதும் தெரிய

வருகிறது. இது குறித்து பிரசவத்துக்கு வரும் தாய்மார்களிடம் பிரசவ டாக்டர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

மேலும் அவர்களுக்கு முழுமையான புற்றுநோய் பரிசோதனையை டாக்டர்கள் மேற்கொள்ள வேண்டும்.

புற்றுநோயால் பாதிக்கப்படும் ஆண்களில் 50 சதவீதம் பேர் புகை பிடிக்கும் பழக்கத்துக்கு அடிமையானவர்கள் என்பது தெரியவருகிறது.புகைப் பிடிப்பவர்களும், அவர்கள் அருகில் இருக்கும் புகைபிடிக்காதவர்களையும் அதிகம் பாதிக்கிறதாம்.

அரசும் புற்றுநோய் குறித்து அதிக அளவில் விளம்பரம் செய்து வருகிறது. அதை மக்களிடையே முழுமையாக கொண்டு செல்ல வேண்டியது டாக்டர்களின் கடமையாகும் என்றார்  புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு  மக்களிடம் முழுமையாகச் சென்றடையவில்லை. புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயை கண்டுபிடித்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

முற்றிய நிலையில் கண்டுபிடிக்கும் போது “கீமோதெரப்பி’ உள்ளிட்ட சிகிச்சை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.

இதற்கு அறுவை சிகிச்சைக்கு ஆகும் செலவை விட அதிகமாகிறது. இதனால் பலர் சிகிச்சை பெறவே தயங்குகின்றனர். எனவே உயிரிழப்பு அதிகரிக்கிறது என்றார்.

4 . சுற்றுச்சூழல் பாதிப்புகளை தடுக்க போதிய விழிப்புணர்வை அனைத்து தரப்பு மக்களுக்கும் ஏற்படுத்த வேண்டும். சுற்றுச்சூழல் பாதிப்புகளால் ஏற்படும் மரபணு மாற்றங்களால் உணவு, தண்ணீர் மற்றும் காற்று மாசுபடுவதால் மனித சமுதாயத்துக்கு பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன.

சுற்றுச்சூழல் பாதிப்புகளை தடுக்க தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்த, சர்வதேச நிதியுதவி நிறுவனங்கள் அதிக நிதியுதவி அளிக்க வேண்டும். சுற்றுச்சூழல் பாதிப்புகளை கட்டுப்படுத்துவதற்கான ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும் அவை உதவ வேண்டும்..

மதுரையில் பாலிதீன் பை கழிவுகளை சாலை போடும் பணியில் பயன்படுத்தி வருவதாக அறிந்தேன். அவை சாலையின் தரத்தை மேம்படுத்த உதவுவதாக சொல்லப்படுகிறது. இதுபற்றிய ஆய்வை விஐடி போன்ற கல்வி நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டும். ரசாயனப் பொருள்கள் ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் பாதிப்பை தவிர்க்க உலக அளவில் அவசர தேவை ஏற்பட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: