திருமங்கலக்குடியில் 06/02/2011 அன்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மஹல்லா ஜமாஅத் யாத்திரை சந்திப்பு கூட்டம் மாநிலத் தலைவர் பேரா. முனீருல் மில்லத்.கே. எம். காதர் மொகிதீன் மற்றும் மாநில செயலாளர் காயல் மகபூப் பங்கேற்பு

 

 

 

 

 

    

    

                       தமிழ்நாடு தழுவிய அளவில் மஹல்லா ஜமாஅத் யாத்திரையை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மேற்கொண்டுள்ளது. இதன் முதற்கட்டமாக தஞ்சை மாவட்டத்தில் இரண்டு தினங்களில் அதிராம்பட்டிணம், அய்யம்பேட்டை, திருமங்கலக்குடி ஆகிய ஊர்களில் சந்திப்பு நடைபெற்றது.

         திருமங்கலக்குடியில் 06/02/2011 அன்று மாலை 4 மணி முதல் 8.30 மணி வரை ரியாஸ் மஹாலில் மஹல்லா ஜமாஅத் நிர்வாகிகள் சந்திப்பு நடைபெற்றது. இதில் திருவிடைமருதூர் மற்றும் திருப்பனந்தாள் ஒன்றியத்திற்குள் அடங்கிய அனைத்து ஊர் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

        திருமங்கலக்குடிக்கு வருகை தந்த தலைவர் பேரா.கே.எம். காதர் மொகிதீன் & செயலாளர் காயல் மகபூப் இவர்களுக்கு நகர எல்லையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதன் பின்னர் மூன்று இடங்களில் மாவட்டத் துணைத்தலைவர் ஹாஜி. எம். முஹம்மது சுல்தான் தலைமையில் பச்சிளம் பிறைக் கொடியை தலைவர் ஏற்றி வைத்தார்.

        அஸர் தொழுகைக்குப் பின் நடைபெற்ற மஹல்லா ஜமாஅத் சந்திப்பு நிகழ்ச்சிக்கு மதார் பள்ளிவாசல் நாட்டாண்மை ஹாஜி. ஏ.கே. சேக் அலாவுதீன் தலைமை தாங்கினார். மாவட்டத் துணைத்தலைவர் ஹாஜி. எம். முஹம்மது சுல்தான் வரவேற்புரை ஆற்றினார். மாவட்டத் தலைவர் (பொறுப்பு) வி.ஏ. முஹம்மது பாட்ஷா, மாவட்ட  செயலாளர் ஏ. பஷீர் அஹமது மாநில பிரதிநிதி எம்.ஜைனுல் ஆபிதீன், மாவட்ட துணைச்செயலளார் ஆடுதுறை ஹஜ் முஹம்மது அதிரை நஸ்ருத்தீன், மாவட்டத் துணைத் தலைவர் சர்புதீன், எம். ஏ. லியாகத் அலி, நகர தலைவர் மெளலவி  எம். சாகுல் ஹமீத் ரஷாதி ஆகியோர் உரையார்றினர்.

     இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைவர் பேரா. முனீருல் மில்லத். கே.எம். காதர் மொகிதீன், மாநில செயலாளர் காயல் மகபூப், பதிப்பக அறக்கட்டளை செயலாளர் மில்லத் எஸ்.பி. முஹம்மது இஸ்மாயில் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

         இந்த நிகழ்ச்சியில் அஸ்ஸலாம் காலேஜ் செயலாளரும், மாவட்ட கல்வி மேம்பாட்டு அணி அமைப்பாளர் ஏ.எம் ஷாஜஹான் நன்றியுரை ஆற்றினார்.  திருமங்கலக்குடி நகர நிர்வாகிகளும் அஸ்ஸலாம் காலேஜ் தலைவர் ஜமால் முஹம்மது இப்ராஹிம் பொருளாளர் முஹம்மது உசேன் ஆகியோர் இணைந்து நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தனர்.

Advertisements

One Response

  1. முஸ்லிம்களை காட்டி கட்சி நடத்தும் முஸ்லிம் அரசியல்வாதிகளே, அதற்கு பலியாகும் எனது சமுதாய சொந்தங்களே..! ஒட்டுமொத்த முஸ்லிம்களும் சேர்ந்து உங்களுக்கே ஓட்டு போட்டாலும், ஒரு இடத்தில் கூட உங்களால் பெரும்பான்மை கட்சிகளுடன் கூட்டணி இல்லாமல் ஜெயிக்க முடியாது. நீங்கள் மட்டுமல்ல, முஸ்லிம் சமுதாயத்தின் அரசியல் தலைகளாக புதிது புதிதாய் முளைத்திருக்கும் கட்சிகள் அனைத்திற்கும் இதுதான் நிலைமை. சாதி மத பெயரை சொல்லி உங்களுக்கு கிடைக்க இருக்கும் ஒரு இரு சீட்டுக்காக சமுதாயத்தை மீண்டும் அடகு வைக்காதீர்கள். எல்லா பிரிவிலும் இட ஒதுக்கீடு நம் சமுதாயத்திற்கு நமது சதவீத அடிப்படையில் உரிய முறையில் கிடைக்க போராடினாலே தவிர முஸ்லிம்களுக்கு இதுபோன்ற யாத்திரைகளால் எந்த பயனும் இல்லை. அதுமட்டுமின்றி நீங்கள் செய்யும் இந்த வேலை, இதுவரை நியாய அநியாயம் பார்த்து ஓட்டு போடும் பிற சமுதாய மக்களை, தான் சார்ந்திருக்கும் மதத்தை பார்த்து ஓட்டு போடும் நிலைக்குதான் கொண்டு செல்லும். திமுக, அதிமுக,காங்கிரஸ் போன்ற பிரதான கட்சிகளில் எல்லா முஸ்லிம்களும் இணைந்து தேர்தலை சந்தித்தாலே, நற்பெயர் அடிப்படையிலும், ரிசர்வ் தொகுதி அடிப்படையிலும், கட்சி வெறி அடிப்படையிலும், சமூக நல்லிணக்க அடிப்படையிலும் அதிகப்படியான முஸ்லிம் MP MLA க்களை பெற முடியும். மட்டுமின்றி நமது கோரிக்கைகள், உரிமைகள் விரைவாக அரசினால் பரிசீலிக்கப்படும். அப்படி பரிசீலிக்கப்படாவிட்டால்,எதிர்கட்சியிலும் நாம் அங்கம் வகிப்பதால் அதைக்கொண்டு நாம் போராட முடியும். இன்னும் சமூக பாதுகாப்பும் இதில் உள்ளடக்கம். உங்களது சுயநலத்திற்காக சமுதாயத்தை பலியாக்காதீர்கள். சுயநலமின்றி மறுமை லாபத்தையே இலக்காக கொண்டு சமுதாய நலனுக்காக பாடுபடும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்திற்கே நமது சமுதாயம் செவிசாய்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: