மன்னிக்கப்படாத பாவத்திற்கு ஆளாக நேரிடும் நமதூர் சின்ன தர்ஹா வழிபாடு

ஓரே இறைவனை ஏற்றுக்கொண்டிருக்கிறோம் என்று சொல்லக்கூடிய முஸ்லிம்கள் மத்தியில் அந்த ஓரிறைக்
கொள்கைக்கு மாற்றமாக எப்படிப்பட்ட சிந்தனைகள் எப்படிப்பட்ட
கருத்தோட்டங்கள் இருக்கின்றன என்பதை முஸ்லிம்கள் அறிந்து கொள்வது அவசியமாக
இருக்கின்றது.

அதாவது சிலைகள் மீதோ அல்லது அவதாரங்கள் மீதோ நம்பிக்கை இல்லாத முஸ்லிம்கள் இறந்து போன பெரியார்களை அதாவது அவ்லியாக்களை இறைவனுடைய
நல்லடியார்கள் என்ற
அடிப்படையிலே இறைவனை அவர்கள்
நெருங்கச் செய்வார்கள் இறைவனிடம்
தங்களுக்காக சிபாரிசு செய்வார்கள், எனவே அவர்களுக்கு உரிய
மரியாதையைக் கொடுப்பதும்
அவர்களுக்குறிய சடங்குகள் செய்வதும் இஸ்லாத்தில்
உள்ளவைதான் என்ற
நம்பிக்கை முஸ்லிம்களிடம்
இருக்கிறது.

அல்லாஹ்வுக்கு மட்டுமே செய்ய
வேண்டிய வழிபாட்டை அல்லாஹ்
அல்லாதவர்களுக்கு
” தர்ஹாக்களை ” கட்டி வைத்துக்கொண்டு சமாதி வழிபாடு செய்கின்றனர்.

ஆனால் அல்குர்ஆன் இறைவனுடய இறுதி வேதம் இதனை தெளிவாக மறுக்கிறது.

தங்களுக்கு (யாதொரு)
நன்மையோ தீமையோ செய்ய இயலாத அல்லாஹ் அல்லாதவற்றை (முஷ்ரிக்குகள்)
வணங்குகிறார்கள்; இன்னும் அவர்கள்,
”இவை எங்களுக்கு அல்லாஹ்விடம்
மன்றாட்டம் செய்பவை” என்றும் கூறுகிறார்கள்; அதற்கு நீர்; ”வானங்களிலோ, பூமியிலோ அல்லாஹ்
அறியாதவை (இருக்கின்றன என
எண்ணிக் கொண்டு) நீங்கள் அவனுக்கு அறிவிக்கின்றீர்களா? அவன் மிகவும் பரிசத்தமானவன். அவர்கள்
இணைவைப்பவற்றை விட மிகவும்
உயர்ந்தவன்” என்று கூறும்.
அல்குர்ஆன் 10:18.

அறிந்து கொள்வீராக! களங்கமற்ற மார்க்க (வழபாடு யாவு)ம்
அல்லாஹ்வுக்கே உரியது இன்னும்,
அவனையன்றிப்
பாதுகாப்பாளர்களை எடுத்துக்
கொண்டிருப்பவர்கள், ”அவர்கள் எங்களை அல்லாஹ்வின் அருகே சமீபமாகக் கொண்டு செல்வார்கள்
என்பதற்காகவே யன்றி நாங்கள் அவர்களை
வணங்கவில்லை”” (என்கின்றனர்).
அவர்கள் எதில் வேறுபட்டுக்
கொண்டிருக்கிறார்களோ அதைப்பற்றி நிச்சயமாக
அல்லாஹ்
அவர்களுக்கிடையே தீர்ப்பளிப்பான்;
பொய்யனாக நிராகரித்துக்
கொண்டிருப்பவனை நிச்சயமாக அல்லாஹ் நேர்வழியில் செலுத்த
மாட்டான்.
அல்குர்ஆன் 39:3

குர்ஆனில் அல்லாஹ்
மிகத்தெளிவாக இறைவனுடைய
அடியார்களை தங்களுக்கு சிபாரிசு செய்யக்கூடியவர்களாக
தங்களை அல்லாஹ்வின்பால்
நெருங்கக் செய்யக்கூடியவர்களாக
யார் நம்புகிறார்களே அவர்களை அல்லாஹ்
காஃபிர் எனக் கூறுகிறான்.

நிராகரிப்பவர்கள் என்னையன்றி என்
அடியார்களை(த் தம்)
பாதுகாவலர்களாக எடுத்துக்கொள்ளலாம் என்றுஎண்ணுகிறார்களா?
நிச்சயமாக இக்காஃபிர்கள் (விருந்துக்கு)
இறங்குமிடமாக
நரகத்தையே சித்தப்படுத்தி வைத்திருக்கின்றோம்.
(தம்) செயல்களில் மிகப் பெரும் நஷ்டவாளிகள் யார் என்பதை நான்
உங்களுக்கு அறிவிக்கட்டுமா?
என்று (நபியே!) நீர் கேட்பீராக. யாருடைய முயற்சி இவ்வுலக
வாழ்வில் பயனற்றுப் போயிருக்க தாங்கள் மெய்யாகவே அழகான
காரியங்களையே செய்வதாக எண்ணிக்
கொண்டிருக்கிறார்களோ அவர்கள் தான்.
அல்குர்ஆன் 18:102-104

நன்றாக நாம் புரிந்துகொள்ள
வேண்டும் எந்த ஒரு கஷ்டத்திலும்
பிரச்னையிலும் நாம் அல்லாஹ்விடம்
தான் நாம் பிரார்த்தனை செய்ய வேண்டும் இறைவனும் அவனிடமே மட்டுமே உதவி தேடச்
சொல்கிறான்.

மேலும் நிச்சயமாக நாம் மனிதனைப்படைத்தோம் அவன் மனம் அவனிடம்
என்ன பேசுகிறது என்பதையும் நாம்
அறிவோம்; அன்றியும் (அவன்)
பிடரி(யிலுள்ள உயிர்) நரம்பை விட நாம்
அவனுக்கு சமீபமாகவே இருக்கின்றோம்.
அவன்தான் தன் அடியார்களின்
தவ்பாவை பாவ மன்னிப்புக் கோறுதலை ஏற்றுக் கொள்கிறான்;
(அவர்களின்)
குற்றங்களை மன்னிக்கிறான். இன்னும்
நீங்கள் செய்வதை அவன்
நன்கறிகிறான்.

இதிலிருந்து நாம்
தெரிந்து கொள்வது என்னவென்றால்
இறைவனுடைய
அடியார்களை தங்களுக்கு இறைவனிடம்
பரிந்துரை செய்யக்கூடியவர்களாக
அல்லாஹ்விடம்
நெருங்கச்செய்வார்கள் என்ற அடிப்படையில்
இறந்து போனவர்களை அவ்லியாக்களாக
எடுத்துக்கொண்டு அவர்களுக்கு சடங்கு சம்பிரதாயங்கள்
செய்வது அவர்களுடைய
அடக்கஸ்தலங்களுக்குச்
சென்று எங்களுக்கு குழந்தை பேற்றைத்
தாருங்கள், நோய்களை குணமாக்குங்கள்
என்று வேண்டுவது அல்லது அவர்களை அல்லாஹ்விடம்
எங்களுக்கு கேட்டுப்
பெற்றுத்தாருங்கள் எங்களுக்காக
முறையிடுங்கள்
அல்லது அவர்களுடைய பொருட்டால்
அல்லாஹ் எங்களுக்கு அதனை நிரைவேற்றித்தா என்று கேட்பது,
கப்ருகளை சுற்றி வலம் வருவது, அங்குள்ள
படிக்கட்டுகளை முத்தமிடுவது இன்னும்
கூடு, கொடியேற்றம், சந்தனம் பூசுதல்,
மேளதாளமங்கள்

இன்னும் ஏராளமான
இணைவைப்பு காரியங்கள் செய்து வழிகேட்டின்பால்
சென்று மன்னிக்கப்படாத
பாவத்திற்கு ஆளாக நேரிடும் என்பதை நினைவில் கொள்வோமாக!

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: