வெளிநாட்டு பல்கலைக்கழகத்தில் சேர்வதற்கான வழிமுறை

அஸ்ஸலாமு அலைக்கும்,,,

ஒரு வெளிநாட்டு பல்கலைக்கழகத்தில் நீங்கள் சேர்வதற்கான வழிமுறைகளில் ஆலோசனை மையங்களின் உதவி தவிர்க்க முடியாததாக உள்ளது.
மூன்று வகையான ஆலோசகர்கள் இந்த நோக்கங்களுக்காக வகைப்படுத்தப்படுகிறார்கள். அவற்றில் எதோ ஒரு வகையினரின் உதவி நமக்கு தேவைப்படுகிறது. அதன் மூலம் நமது பணத்தை சேமிக்கலாம், பல்கலைக்கழக துறைகளைப் பற்றி அறிந்துகொள்ளலாம்.

தொழில் ஆலோசகர்கள்:
இந்த வகையினர் உளவியல் ரீதியாக நன்கு பயிற்சி எடுத்தவர்கள். படிக்கும் பாடத்தை தேர்வு செய்தல், பல்கலைக்கழகத்தி தேர்வு செய்தல் மற்றும் எதிர்கால தொழிலை தேர்வு செய்தல் போன்ற விஷயங்களில் உதவுகிறார்கள். இது ஒரு கட்டண சேவை, அதேசமயம் தனித்திறன் தேர்வுகளை உள்ளடக்கியோ அல்லது உள்ளடக்காமலோ இருக்கலாம். சர்வதேச சேர்க்கை ஆலோசகர்களை விட, இந்த வகை ஆலோசகர்களிடம் அதிக வழிகாட்டுதல்களைப் பெறலாம்.

பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ கல்வி பிரதிநிதி:
அமெரிக்க, பிரிட்டன், ஆஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலுள்ள பல்கலைக்கழகங்கள்,தங்கள் பல்கலைக்கழகங்களின் மாணவர் சேர்க்கைப் பற்றிய விவரங்களை மாணவ சமூகத்திற்கு விளக்க இந்த வகையான ஆலோசகர்களை பயிற்சி கொடுத்து உருவாக்குகின்றன. இந்த வகையில் பெரும்பாலான சேவைகள் இலவசமாகவும் நல்ல தரமுடனும் வழங்கப்படுகின்றன.

சர்வதேச சேர்க்கை ஆலோசகர்கள்:
இந்த வகையில் பல்கலைக்கழகங்களோடு சம்பந்தப்படாத, அதேசமயம் கட்டணத்திற்கு ஆலோசனை வழங்கும் பல ஆலோசகர்கள் இருக்கிறார்கள். சில சமயங்களில் கட்டணம் வசூலித்து சர்வதேச தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளை நடத்துகிறார்கள், அதேசமயத்தில் கூடுதல் கட்டணம் வசூலித்து சேர்க்கை சம்பந்தமான ஆலோசனைகளையும் வழங்குகிறார்கள். நீங்கள் எந்த ஆலோசகரை தேர்ந்தெடுத்தாலும், உங்கள் முயற்சி வெற்றி பெறுவதற்கான சில உதவிக்குறிப்புகளை இங்கே வழங்குகிறோம்.

ஆலோசகரின் படிப்பு மற்றும் பயிற்சி:
ஆலோசகரின் கல்வித் தரம் வலுவானதா?, புகழ்பெற்ற கல்வி நிறுவனத்திலிருந்து பட்டம் பெற்றுள்ளார்களா? மற்றும் வெளிநாட்டில் படித்துள்ளார்களா? என்பதை முதலில் உறுதிசெய்து கொள்ள வேண்டும். மேலும் அவர்கள் ஒரு குறிப்பிட்ட பல்கலைக்கழகத்தின் பிரதிநிதிகள் என்று கேள்விப்பட்டால் பல்கலைக்கழக வலைத்தளத்தில் சென்று சரிபார்த்து நிச்சயம் செய்துகொள்ள வேண்டும்.

சர்வதேச அனுபவம்:
ஆலோசகர் ஏதேனும் வெளிநாட்டு பல்கலைக்கழகத்தால் நேரடியாக பயிற்சியளிக்கப்பட்டவரா அல்லது கல்வித்தகுதியுடன் வெளிநாட்டில் வேலை செய்தவரா? என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். மேலும் அவரிடம், நீங்கள் வெளிநாட்டில் கல்வித்துறையில் வேலை செய்த அனுபவம் உடையவரா? என்று கேட்க வேண்டும். ஏனெனில் சிலர் வெளிநாட்டில் வேறு ஏதேனும் தொழில் சம்பந்தமாக இருந்திருந்திருக்கலாம்.

அதற்கும் கல்வித்துறைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை நாம் நிச்சயம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் நாம் இந்தியாவில் வாழ்ந்தாலும், கல்வித்துறை அல்லாத பணிகளில் இருந்தால் ஒரு ஐஐடி அல்லது ஐஐஎம் -களில் சேர்வதற்கான சரியான விவரங்கள் தெரியாதல்லவா?

கடந்தகால அனுபவம்:
இந்த துறையில் அவர்கள் எவ்வளவு காலமாக பணியாற்றுகிறார்கள் என்பதைப் பார்க்க வேண்டும். சிலர் மாணவர்களுக்கு முறையான ஆலோசனை வழங்கி வந்தால், வருடா வருடம் அவர்களின் பணித்தரம் கூடும். அதேசமயம் சிலர் புதிதாக ஆலோசனை துறைக்குள் வந்திருந்தால், அவர்களைப் பற்றி நன்கு விசாரிக்க வேண்டும். மேலும் நாம் செல்லும் ஆலோசனை மையங்களில் நமக்கு முன்னதாக ஆலோசனை பெற்ற மாணவர்களின் அனுபவம் நமக்கு பெரிய உதவியாக இருக்கும்.

அவர்கள் தொடர்பில் இருக்கும் பல்கலைக்கழகங்களின் தரம்:
பொதுவாக உயர்தரமிக்க மற்றும் பெரிய அங்கீகாரமிக்க ஆலோசகர்கள், புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களுடன் மட்டுமே தொடர்பில் இருப்பார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

சேவைகள் மற்றும் கட்டணங்கள்:
உயர்தர சேவைகளுக்கு கட்டணம் எப்போதும் அதிகம் என்பதற்கு விளக்கம் தேவையில்லை என்பது உங்களுக்கே தெரியும்.

நீங்கள் ஒரு ஆலோசகரை தேர்வு செய்தப்பிறகு, விண்ணப்பம் செய்கையில் சில முக்கிய ஆலோசனைகளையும் நிச்சயம் கவனத்தில் கொள்ளவும்.

*  சில ஆலோசகர்கள் தாங்கள் ஒப்பந்தம் செய்துள்ள கல்வி நிறுவனத்தில் உங்களை சேர்க்கும்பொருட்டு, உங்களிடம் மூளைச்சலவையில் ஈடுபடலாம். அப்போது நீங்கள் அந்தக் குறிப்பிட்ட கல்வி நிறுவனம் தரமானதா, அங்கீகரிக்கப்பட்டதா, உங்களின் விருப்ப படிப்பிற்கும், பொருளாதார நிலைக்கும் ஏற்றதா? என்று நன்கு ஆராய வேண்டும். இந்த அம்சங்கள் ஒத்துவரவில்லை எனில், யோசிக்காமல் அந்த ஆலோசகருக்கு விடை கொடுத்துவிட வேண்டும்.

*  கல்விக்கான கட்டணத்தை எப்போதும் சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகத்திற்கு, அதன் சொந்த கணக்கில், அது அமைந்துள்ள நாட்டிற்கே மின்னணு முறையில் மாற்றம் செய்ய வேண்டும். எக்காரணம் கொண்டும், உரிமைகோரும் எந்த நபரின் கணக்கிலும் மாற்றுவதோ அல்லது அது போன்றவர்களிடம் பணமாக வழங்குவதோ கூடாது.

*  கல்விக்கட்டணம் முழுமையான சேர்க்கை அனுமதி கிடைத்தப் பிறகுதான் செலுத்தப்பட வேண்டும். ஏனெனில் சில சமயங்களில் உங்களின் சர்வதேச ஆங்கில மொழித்திறன் தேர்வு மதிப்பெண்கள் அல்லது இறுதி வருட தேர்வு மதிப்பெண்கள் சேர்க்கை அனுமதிக்கு முன்பாக சரிபார்க்கப்பட வேண்டியிருக்கலாம். எனவே அதன்பிறகே நீங்கள் கட்டணம் செலுத்த வேண்டும்.

விவேகமாக செயல்பட்டால் எக்காலத்திலும் ஏமாறாமல் வெற்றிபெறலாம்!

Dear group members,

The main aim is to help Muslim brothers and sisters,  kindly  send the messages to the known people in your surroundings..

The messages regarding job opportunities are forwarded messages. If any enquiries  regarding such messages please contact the concerned / person / company…

Advertisements

One Response

  1. Aslam alaikum…

    This is nasar(kurichimalai) from london, Pls contact me on my email mike12ae@yahoo.com or my mobile 00447424136632
    If any students interested to study and work in London..
    We provide UK student visa cum work permit at very reasonable fee..
    For further details pls contact us…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: