அப்படி என்ன தான் நடந்தது -மயிலாடுதுறையில் !!!

”யாரேனும் ஒரு தீமையைக் கண்டால் அதைக் கையால் தடுக்கட்டும், அதற்கு சக்தி பெறாதவர் தமது நாவால் தடுக்கட்டும், அதற்கும் இயலாதவர் தமது உள்ளத்தால் அதை வெறுக்கட்டும். இதுவே ஈமானின் கடைசி நிலையாகும்” (முஸ்லிம், திர்மிதீ)

மயிலாடுதுறையில் நடந்த சம்பவத்தின் உண்மை நிலையை நாம் ஆய்வின் பிறகு உங்களுக்கு தருகிறோம்.

அப்படி என்ன நடந்தது?

குத்தாலத்தில் வியாழக் கிழமை அன்று காலை 11 மணியளவில் நம்மை தொலைபேசியில் தொடர்பு கொண்ட நபர் குத்தாலத்தில் இருந்து வேனில் விபசாரம் செய்த பெண்களை அடித்து மயிலாடுதுறை நோக்கி இழுத்து வருகின்றனர் நாம் உடனடியாக சில நபர்களிடம் தொடர்பு கொண்டு கெட்ட போது அப்படி எல்லாம் இல்லை என்று போனை துண்டித்து சுவிட்ச் ஆப் செய்து விட்டனர்.

குத்தாலத்தில் சகோதரர்கள் நான்கு பேர் பல நாட்களாக கண்காணித்துள்ளனர், பெண்கள் சிலர் வந்து கீழ விதி அருகில் உள்ள கல்யாண மண்டபம் அருகில் நிற்பதும் சில நபர்கள் அழைத்து செல்வதும் தொடர்ந்து நடந்துக் கொண்டு இருக்கிறது. ஆனால் ,இவை அரசியல்வாதிகள் பின்னணியிலும் காவல் துறை உதவியுடன் நடப்பதை அறியாத இளைஞர்கள் கீழ விதியில் உள்ள பானு வீட்டில் அதிரடியாக நுழைய அங்கு இவர்களுடைய மாமா தேரிழந்தூரை சேர்ந்த அப்துல் ஹமீத் என்பவனுடன் சுமார் 10 பெண்களுடன் கையும் களவுமாக மாட்டினார்கள் . பின்னர்,மயிலாடுதுறைகல் உள்ள நண்பர்களுக்கு தகவல் தெரிவிக்கின்றனர்.இங்கிருந்து ஒரு வாகனத்தில்(வேன்) சென்று அழைத்து வருகின்றனர்.அங்கிருந்த மாற்று மத சகோதரிகளை நான்கு பேரை இனிமேல் தவறு செய்ய மாட்டோம் என்று எழுதி வாங்கி அனுப்பி விடுகின்றனர்.அவர்களில் ஒரு பெண் அய்யம்பேட்டை சக்கரா பள்ளி அருகில் இந்து கிராமத்தை சேர்ந்தவள்.அவளிடம் கூட காவல் துறை சென்று விசாரித்ததில் தவறுதலாக எதுவும் கூறவில்லை.ஆனால் காவல் துறை என்ன எழுதி வாங்கிக் கொண்டது என்பது தெரிய வில்லை.
மயிலாடுதுறை அழைத்து வந்து மன்சூர் கைலி சென்டரில் வைத்து மாமா அப்துல் ஹமீதை(பெண் புரோக்கர்) முறையாக விசாரிக்க ஆரம்பிக்கின்றனர் தோண்ட தோண்ட பூதம் என்பது போல் அவன் மேலும் மேலும் கூறிய உண்மைகள் நம்மை ஆசிரியப் பட வைத்தன.ஆனால் இதே போல் இந்த பணியை இந்த இஸ்லாமிய இளைஞர்கள் சில வருடங்களாக பிடித்து அவர்களிடம் முறையாக எடுத்துச் சொல்லி எதற்காக விபசாரம் செய்கிறீர்கள் என்று கேட்டு அந்த ஊர் ஜமாத்திற்கு முறையாக தெரிவித்து அவர்கள் வந்து அழைத்துச் செல்வார்கள் ஆனால் இவர்கள் அப்படி அல்ல. இவைகள் சாக்கடைகள் என்பது தான் காரணம். இவர்கள் உண்மையான முகவரியில் கண்டிப்பாக இருக்க மாட்டார்கள் இதனால் தான் இரவு எட்டு மணியானது இதற்க்கு பிறகு இவர்களை எங்கு தங்க வைப்பது என்பதை முடிவு எடுப்பதற்குள், குத்தாலத்தில் உள்ள இவர்களின் ஆதரவாளர்கள் கண்டிப்பாக சும்மா இருந்திருக்க மாட்டார்கள் அவர்கள் தான் காவல் துறைக்கு தகவல் தெரிவித்து இருக்க வேண்டும். காவல் துறையினர் மன்சூர் கைலி சென்டருக்கு வந்து நான்கு இளைஞர்களையும் மூன்று பெண்களையும் மாமா அப்துல் ஹமீதுடன் கைது செய்து அழைத்து செல்கின்றனர்.ஆனால் கைது செய்து அழைத்து சென்ற காவல் துறை ஆய்வாளர்   அப்துல் ரவூபை கைது செய்து மிகவும் கேவலமான முறையில் அவரை பெரிய மனிதர் என்றும் பாராமல் மிகவும் கேவலப் படுத்தி டேய் துளுக்கா நீதான் கார்க்குரே புக்கை(தாஜ் ஹோட்டல் வழக்கில் சுட்டு கொள்ள பட்ட ராணுவ அதிகரி காக்ரேபோர் அனுபவம் குறித்த புத்தகம்) வெளியிட்டியாமே என்று கூறி திட்டியும் அடித்து உதைதுள்ளார் ஆனால் வெளியில் இவர் தன்னை நல்லவர் போல் காட்டிக் கொண்டு நான் வந்து சாதாரண வழக்கில் கைது செய்து விடலாம் என்று நினைத்தேன் ஆனால் மேலிடத்திற்கு தெரிந்துவிட்டதால் நான் எதுவும் செய்ய முடியாது என்று காலை வாரி விட்டதாக நமக்கு தகவல்.மறுபடியும் இரவு 10 மணியளவில் மன்சூர் கைலி சென்டரை சோதித்து பார்க்க வேண்டும் கூறி அது மீறி உள்ளே சென்று முழுவதுமாக ஒரு மணிநேரம் தேடிவிட்டு சென்று விடுகின்றனர். மறுனால் காலை 3:35-ந்திற்கு போனில் தகவல் வந்ததாகவும் என்னை அடைத்து வைத்திருக்கிறார்கள் என்று ஒரு பெண் போன் செய்ததாக மன்சூர் கைலி சென்டரின் பூட்டை உடைத்து ஒரு பெண் மற்றும் மூன்று நபர்களை அழைத்து வருகின்றனர். அன்று 1 ஆம் தேதி காவல் துறை நினைத்த பிரிவுகளில் பதினாறு பேர் மீது பொய்வழக்கு பதிவு செய்து 7 பேரை கைது செய்து சிறையில் அடைத்ததோடு எந்த துலுக்கன் துல்லினாலும் மற்றும் பலர் என்று வழக்கு பதிவு செய்துள்ளதால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்வதாக மிரட்டி வருவதாக அறிந்து மிகவும் அதிர்ச்சி அடைந்தோம்.இன்று வரை இவர்களுக்கு ஜாமீன் வழங்க காவல் துறை மறைமுகமாக எதிர்ப்பதை நாம் அறிவோம்.இன்னும் மருத்துவமனையில் உள்ள நபர்களை சிகிச்சை செய்வது போல் அவர்களை மயிலாடுதுறை மருத்துவமனையில் தங்க வைத்துள்ளது காவல் துறை. நம்மில் ஏற்படும் சந்தேகங்கள்

இஸ்லாமியர்களை கைது செய்த காவல்துறை, முஸ்லிம்களை ஓட ஓட விரட்டி கொலைவெறி தாக்குதல் நடத்திய தள்ளுவண்டி காரர்களையும் , காவி கும்பலின் மீதும் வழக்கு பதிவுசெய்து ஏன் நடவடிக்கை இல்லை காவல்துறைக்கு ஆதரவாக நடந்ததலா ? விசாரணையில் பெண்களை அடித்ததால் பெண்கள் அலறினார்கள் இதை கேட்ட தல்லுவண்டிக்காரர்கள் போன் செய்ததாக காவல் துறை கூறியதில் உண்மை இல்லை.காவல் துறை இந்த வழக்கை முஸ்லிம்களுக்கு எதிராக தூண்டி விட்ட காரணம் என்ன?தூண்டிய கருப்பு ஆடுகள் யார்?அப்துல் ஹமீதி மிரட்டி காவல் துறை தான் புகார் செய்ய சொல்லி வர்புரிதினார்கள் என்று அப்துல் ஹமீதே தன் சகாக்களிடம் கூறியுள்ளான். பழக்கடைக்காரர்கள் காவல்துறைக்கு மாமூல் வழங்குவதை வழக்கமாக கொண்டவர்கள் இவர்கள் காவல் துறை சொல்லி தான் கண்டிப்பாக செய்திருப்பார்கள்.அதிலும் பாஸிச சக்திகள் ஒன்று கூடியதாக அறிகிறோம்.மயிலாடுதுறையில் முஸ்லிம்களும் ஹிந்துக்களும் மாமன் மச்சான்கலாக வாழ்ந்து வருகிறார்கள் இந்த விஷ விதையை தூவியவர்கள் யார்?உளவு துறை உடனடியாக தலையிட்டு இதற்க்கு காரணமானவர்களை சும்மா விட்டு விடக் கூடாது.

பத்திரிக்கைகள் இவ்வளவு கீழ தரமாக எழுதுவதற்கு காரணம் என்ன ?அதிலும் குறிப்பாக மாலை முரசு நிருபர் செல்வம் , தமிழக அரசியல் ராகவன் விஷக் கருத்துகளை விதித்துள்ளனர். இதை நடுநிலையாளர்கள் வேண்டுமானால் தெரிந்திருப்பார்கள் ஆனால் பாமரர்கள் என்ன நினைப்பார்கள்.இவர்களுக்கும் குடும்பங்கள் உண்டுதானே? தமிழக அரசியல் மஞ்சப் பத்திரிக்கையாக மாற்றிய பெருமை நல்லடையை சேர்ந்த இதன் நிருபர்ராகவன். இவர் மீது குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப் பட்டதால் ஜூவியிலிருந்து தூக்கி எறியப்பட்டவர். குறிப்பாக ஜூனியர் விகடனில் உண்மையை மிக அழகாக எழுதி இருந்தார் அதன் நிருபர் கரு.முத்து-வை மனதார பாராட்டுகிறோம்.பத்திரிக்கை செய்தியை படிதிரூப்பீர்கள்.போலீஸ் சொல்வதை மட்டும் நம்பி அப்படியே எழுதுவதை விட்டு விடுங்கள் விசாரித்து எழுதுங்கள்.அப்துல் ரவூப் தவறு செய்திருந்தால் கண்டிப்பாக தண்டிக்கப் பட வேண்டியவர் அதில் யாருக்கும் இம்மி அளவும் சந்தேகம் இல்லை.அவர்கள் அதிகாரத்தை கையில் எடுத்தது தவறு அவர்கள் வார்த்தைகளால் திருத்த முற்பட்டிருப்பார்கள் இந்த மூதேவிகள் எங்கே கேட்கப் போகிறார்கள்.

மேலே சொன்ன ஹதீஸ் முதலில் கையால் தடுப்பது என்பது நம் குடும்பத்தினருக்கு இரண்டாவது வாயால் தடுப்பது மற்றவர்களுக்கு மனம் வெறுத்து தவிர்ப்பது இந்த வழியில் வந்த நாம் இதன் வழியில் நடக்க முயற்சி செய்வோம்.மற்ற பத்திரிக்கைகளையும் இணையதளங்களிலும் செய்திகள் முழுமையாக வந்ததால் நாம் முழுமையாக அந்த விஷயங்களை ஆராயாமால் மக்களிடம் தவறான செய்தியை கொண்டு சென்ற பத்திரிக்கை நிருபர்களும் காவல் துறையில் உள்ள கருப்பாடுகள் அரசியவாதிகள் இவர்களை தமிழக அரசு யார் எண்று கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவேண்டியனில் மயிலாடுதுறையில் சில நிகழ்வுகள் தவிர்க்க முடியாமல் தொடரும் என்பதில் சந்தேகம் இல்லை.

இன்னும் ஆளும் கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகரும் தான் காரணம் என்கின்றனர்.இவர் குத்தாலத்தை சேர்ந்தவர்.பானுவுக்கு இவர் தான் வலது கரமாம்.முன்னாள் MLA யும் நகைக் கடை அதிபரும் பானுவுக்கு மிகவும் நெருங்கியவர்கலாம். கைதானவர்கள் வெளியில் வந்தவுடன் அவர்களிடம் நேரில் விசாரித்து உண்மையை உங்களுக்கு தருகிறோம் …

 

நன்றி கிளியனூர்.நெட்

Advertisements

One Response

 1. அன்புச்சகோதரர்களே அஸ்ஸலாமு அலைக்கும்.

  எங்கள் ஊர் பகுதியில் சமீபத்தில் நடைபெற்ற திடுக்கிடும் சம்பவம் ஒன்றை உங்கள்

  அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு.

  சில தினங்களுக்கு முன் ஒரு நாள். நாகப்பட்டினத்திற்கு அருகில் உள்ள மஞ்சக்கொல்லை

  என்ற கிராமத்தில் இருந்து முஸ்லிம் பெண்கள் இருவர் தஞ்சாவூர் புறப்பட்டுச் சென்றனர்.

  இருவரும் சம வயது உடையவர்கள். சுமார் 25 வயது இருக்கும். அவர்களுள் ஒருவர்

  உடல் சுகவீனமானவர். இன்னொரு பெண்மணி அவரது தோழி. அந்த நோயாளிப் பெண்

  அவ்வப்பொழுது தஞ்சாவூர் சென்று அங்குள்ள நரம்பியல் மருத்துவ நிபுணரிடம் உடல்

  பரிசோதனை செய்து கொண்டு, மருந்து மாத்திரைகள் வாங்கி வருவது வழக்கம்.

  அதுபோலத்தான் அன்றும் நடந்தது.

  இருவரும் தஞ்சாவூர் சென்று மருத்துவரிடம் பரிசோதனைகளை முடித்துக்கொண்டு

  மருந்து மாத்திரைகள் வாங்கி வருவதற்குள் மக்ரிப் நேரமும் முடிந்து விட்டது.

  உடனடியாக தஞ்சையில் பேருந்தில் ஏறினால்தான் இரவு 10 மணி வாக்கில் மஞ்சக்

  கொல்லை போய்ச் சேரமுடியும் என்பதால் மருத்துவமனையில் இருந்து தஞ்சை

  பழைய பேருந்து நிலயத்திற்குச் செல்ல ஏதாவது ஆட்டோ கிடைக்காதா என்ற

  பரபரப்பில் இருந்தனர். அப்போதுதான், தேடிச்சென்ற மூலிகை காலடியில் கிடைத்தது

  போல அவர்கள் முன் ஒரு ஆட்டோ வந்து நின்றது. அந்த ஆட்டோவில் ஏற்கனவே

  ஒரு ஆணும் பெண்ணும் அமர்ந்திருந்தனர். இருவருக்கும் நடுத்தர வயதிருக்கும்.

  கணவன் மனைவி போலத் தோன்றியது. ஒரு வேளை அது ஷேர் ஆட்டோவாக

  இருக்குமோ என்று அந்த முஸ்லிம் பெண்கள் இருவரும் மனதிற்குள் எண்ணிக்

  கொண்டிருக்கையில் அந்த ஆட்டோ ஓட்டுனர் முஸ்லிம் பெண்களைப் பார்த்து “நீங்கள்

  எங்கே செல்ல வேண்டும்” என்று கேட்க, அதற்கு அவர்கள் “பழைய பேருந்து நிலையம்

  செல்ல வேண்டும்” என்று சொன்னவுடன், “சரி ஏறுங்கள்” என்று ஓட்டுனர் சொல்ல,

  ஏற்கனவே அந்த ஆட்டோவில் உட்கார்ந்திருந்த கண்வன் மனைவி ஜோடி அந்த

  முஸ்லிம் பெண்களைப் பார்த்து “வாங்க, வாங்க நாங்களும் அங்குதான் செல்கிறோம்”

  என்று அவர்கள் இருவரும் நெருங்கி அமர்ந்து கொண்டு இவர்களுக்கு இடம் கொடுக்க,

  அடுத்த சில வினாடிகளில் தங்களுக்கு ஏற்படவிருக்கும் ஆபத்தைச் சிறிதும் முன்கூட்டி

  உணரச் சக்தியற்ற அந்த அப்பாவி முஸ்லிம் பெண்கள் ஆட்டோ ஓட்டுனரின் கனிவையும்

  உள்ளே அமர்ந்திருந்த கணவன் மனைவியின் பெருந்தன்மையையும் வெறும் நடிப்பென

  அறியாது ஆட்டோ உள்ளே சென்று அமர்ந்தனர். ஆட்டோவும் சிட்டெனப் பறந்தது.

  மருத்துவமனையில் இருந்து பழைய பேருந்து நிலையத்திற்கு ஆட்டோவில் செல்ல

  5 நிமிடம் கூட ஆகாது. ஆனால், அந்த ஆட்டோவோ கிட்டத்தட்ட 10 நிமிடங்களாகியும்

  நிற்காமல் போய்க்கொண்டே இருப்பதையும், பேருந்து நிலையம் செல்லாமல் வேறு

  எங்கோ செல்வதையும் அறிந்த முஸ்லிம் பெண்கள் தாங்கள் ஏதோ ஆபத்தில்

  சிக்கிக் கொண்டோம் என்பதை உணர்வதற்குள் ஆட்டோ தஞ்சை நகரைத் தாண்டி வெகு

  தூரம் சென்று ஆள் அரவமற்ற பகுதியை நோக்கி சென்று கொண்டே இருந்தது. என்ன

  செய்வதென்று அறியாத அந்த அப்பாவிப் பெண்கள் “காப்பாற்றுங்கள்! காப்பாற்றுங்கள்!”

  என்று கதறியழ ஆரம்பித்தனர். உடனே, உள்ளே அமர்ந்திருந்த கணவன் தன் உடம்பில்

  மறைத்து வைத்திருந்த கத்தியை வெளியே எடுத்து அந்த முஸ்லிம் பெண்ணின் கழுத்தில்

  வைத்து “சத்தம் போட்டால் இங்கேயே உங்கள் இருவரையும் கொன்று விடுவேன்” என்று

  மிரட்ட, அவன் கூட வந்த பெண் முஸ்லிம் பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த தங்கக்

  கரியமணியைப் பறிக்க ஆரம்பித்தாள். முஸ்லிம் பெண் அதனை எதிர்க்க முயற்ச்சிக்க

  முகத்தில் சரமாரியாக அடியும் குத்துக்களும் விழவே, முஸ்லிம் பெண் நிலை குலைந்து

  போனாள். உடனே அந்த கணவன் மனைவி ஜோடி முஸ்லிம் பெண்கள் இருவரிடமிருந்தும்

  செய்ன்கள், தோடுகள், வளையள்கள் அனைத்தையும் பிடுங்கிக்கொண்டு, இருவரையும்

  ஓடும் ஆட்டோவிலிருந்து தள்ளிவிட்டுச்சென்று மாயமாய் மறைந்து விட்டனர். அந்த

  அதிர்ச்சியை தாங்கச் சக்தியற்ற முஸ்லிம் நோயாளிப்பெண் மூர்ச்சையுற்று விழ, உடன்

  சென்ற தோழி முதல் உதவி செய்து அந்தப் பெண்ணைக் காப்பாற்றியிருக்கிறாள்.

  அல்ஹம்துலில்லாஹ். பின்பு, இருவரும் ஒருவாறு சுதாரித்துக்கொண்டு நெடுஞ்சாலையை

  அடைந்து அந்த சாலை வழியே வந்த பேருந்தை கையைக் காட்டி நிறுத்தி தங்களுக்கு

  ஏற்பட்ட ஆபத்தை எடுத்துச் சொல்ல, அந்த பேருந்தில் இருந்த நல்ல மனிதர் ஒருவர்

  அவர்கள் இருவரையும் ஆசுவாசப்படுத்தி, தைரியமூட்டி, குளிர்பானம் வாங்கிக் கொடுத்து

  அவர்களிடம் ரூ. 100ம் கொடுத்து நாகை செல்லும் பேருந்தில் ஏற்றி விட்டிருக்கிறார்.

  மேற்படி சம்பவத்தில் அந்த முஸ்லிம் பெண்ணின் கைப்பையையும் அந்த ஜோடி பறித்துக்

  கொண்டது. அதில் சில ஆயிரம் ரூபாய்களும், செல்போனும், ஏடிஎம் கார்டும் இருந்தன.

  நல்ல வேளையாக அந்தத் தோழிப் பெண் கவரிங் நகைகள் அணிந்திருந்தாள்.

  இதிலிருந்து நாம் கற்க வேண்டிய பாடங்கள் நிறைய இருக்கின்றன.

  1. ஆண் துணையின்றி வெளியூர் செல்வதை இயன்றவரை தவிர்க்க வேண்டும்.

  2. வேறு வழியின்றி பெண்கள் மட்டும் செல்ல வேண்டியிருந்தால் இரவுப்

  பயணத்தைத் தவிர்க்க முயற்சியுங்கள்.

  3. தங்க ஆபரணங்களைத் தவிர்த்து கவரிங் நகைகளை அணிந்து செல்லவும்.

  4. செல்போன், ஏடிஎம் கார்டு, பணம் இவற்றை கைப்பையில் வைக்காமல் தங்களின்

  மறைவிடங்களில் வைத்துக் கொள்ளவும். ( உ-ம் ப்ளவ்ஸ் உள்ளே)

  5. ஆட்டோ அல்லது டாக்ஸி போன்ற வாகனங்களில் ஏறும் முன் அந்த வாகனங்களின்

  எண்ணை குறித்து வைத்துக் கொள்ள மறவாதீர்கள்.

  6. அறிமுகமில்லாத எந்த நபரையும் எளிதில் நம்பி ஏமாறாதீர்கள். அவர்களைக்

  கொஞ்சம் சந்தேகக்கண்கொண்டு பார்ப்பதில் தவறில்லை.

  7. தைரியம் உள்ள பெண்கள் கொஞ்சம் மிளகாய்த் தூள் போன்றவற்றைத் தங்கள்

  கை வசம் வைத்துக் கொள்ளவும். ( இது தைரியமான பெண்களுக்கு மட்டும் தான்.)

  அன்புடன்,

  அ.பஷீர் அஹமது,

  ஓய்வு பெற்ற அகில இந்திய வானொலி இஞ்சினீயர்,

  மஞ்சக்கொல்லை.

  செல்: 9442014288.

  ( தயவு செய்து இந்தச் செய்தியை தங்கள் நண்பர்களுக்கும் அனுப்பி வைகக மறவாதீர்கள்)

  Basheer Ahmed


  36:68 நாம் யாருக்கு வாழ் நாள் அளித்தோமோ அவரைப் படைப்பில் இறங்குமுகமாக்குகிறோம். (இதை) அவர்கள் விளங்க மாட்டார்களா?மனிதன் பிறந்தது முதல் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து கொண்டே செல்கிறான். ஒரு குறிப்பிட்ட கட்டத் திற்குப் பின் திரும்பவும் தேய்ந்து கொண்டே வந்து பற்களை இழந்து நடையை இழந்து படுக்கையில் கிடக்கிறான். குழந்தை போன்ற நிலைக்கே வந்து நடக்க முடியாமல், பேச முடியாமல், சிறு குழந்தை போன்று ஆகி விடுகிறான். இது தான் இவ்வசனத்தில் (36:68) படைப் பில் இறங்கு முகம் என்று கூறப்படுகிறது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: