ரமளான் நோன்பு.

நோன்பின் அவசியம்

ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள்மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் விதிக்கப்பட்டுள்ளது. (அதன்மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்.(அல்குர்ஆன் 2:183)

ரமழான் மாதம் எத்தகையதென்றால் அதில்தான் மனிதர்களுக்கு வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும் (நன்மை-தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல்குர்ஆன் இறக்கியருளப் பெற்றது. ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும். (2:185)

நோன்பின் நோக்கம்

யார் பொய்யான பேச்சுக்களையும், பொய்யான நடவடிக்கைகளையும் விட்டு விடவில்லையோ அவர் உண்ணுவதையும் பருகுவதையும் விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை. அறிவிப்பவர்: அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்:புகாரி, அஹ்மத், அபூதாவூத், திர்மிதீ, இப்னுமாஜா

உங்களில் ஒருவர் நோன்பு நோற்றிருக்கும்போது யாரேனும் அவரிடம் முட்டாள் தனமாக நடந்து கொண்டால் ‘நான் நோன்பாளி’ என்று அவர் கூறி விடட்டும். அறிவிப்பவர்: அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: திர்மிதீ

நோன்பின் சிறப்பு

ஒவ்வொரு நன்மையான காரியத்துக்கும் பத்து முதல் நூறு மடங்குவரை கூலி கொடுக்கப்படுகின்றது. ‘நோன்பு எனக்குரியது. அதற்கு நானே கூலி கொடுப்பேன்’ என்று அல்லாஹ் கூறுகிறான். நோன்பு நரகத்திலிருந்து காக்கும் கேடயமாகும். நோன்பாளியின் வாய் நாற்றம், அல்லாஹ்விடம் கஸ்தூரியின் நறு மணத்தை விட சிறந்ததாகும். அறிவிப்பவர்: அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: திர்மிதீ

சுவர்க்கத்தில் ‘ரய்யான்’ என்றொரு வாசல் உள்ளது. அவ்வழியாக நோன்பாளிகள் (மட்டும்) அழைக்கப்படுவார்கள். நோன்பு நோற்றவர்கள் அவ்வழியாக நுழைவார்கள். யார் அதில் நுழைகிறாரோ அவருக்கு ஒரு போதும் தாகம் ஏற்படாது. அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஃது رَضِيَ اللَّهُ عَنْهُ  நூல்கள்: புகாரி, முஸ்லிம், திர்மிதீ

நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. ஒன்று நோன்பு துறக்கும்போது ஏற்படும் மகிழ்ச்சியாகும். மற்றொன்று தனது இறவனை சந்திக்கும்போது ஏற்படும் மகிழ்ச்சியாகும். அறிவிப்பவர்: அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: திர்மிதீ

காலம் முழுவதும் நோற்றாலும் ஈடாகாது

அல்லாஹ் அனுமதித்த காரணங்களின்றி எவர் வேண்டுமென்றே ரமழானின் ஒரு நோன்பை விட்டாலும் அதற்குப் பகரமாக காலம் முழுதும் நோன்பு நோற்றாலும் அதற்கு ஈடாகாது. ஆதாரங்கள்: அபூதாவூத், திர்மிதி, இப்னுமாஜ்ஜா

நோன்பு நோற்க கடமைபட்டவர்கள்,
நோன்பிலிருந்து விலக்களிக்கப்பட்டவர்கள்

எனினும் எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கிறாரோ (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பை) பின்வரும் நாட்களில் நோற்கவேண்டும். அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை (அல்குர்ஆன் 2:185)

பயணம் மேற்கொண்டதும் அவர் நோன்பை விட்டுவிடும் சலுகையைப் பெறுகிறார்.

பழைய மிஸ்ர் எனும் நகரில் நான் அபூபுஸ்ரா رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்களுடன் கப்பலில் ஏறினேன். அவர்கள் புறப்படலானார்கள். பிறகு காலை உணவைக் கொண்டு வரச் செய்து ‘அருகில் வாரும்’ என்றார்கள். அபோது நான் நீங்கள் ஊருக்குள்ளே தானே இருக்கிறீர்கள்? என்று கேட்டேன். அதற்கவர்கள் நபி صلى الله عليه وسلمஅவர்களின் சுன்னத்தை (வழிமுறையை) நீர் புறக்கணிக்க போகிறீரா என்று திருப்பிக் கேட்டார்கள் என உபைத் பின் ஜப்ர் என்பார் அறிவிக்கிறார்கள். நூல்கள்:அஹமது, அபூதாவூத்

மக்கா  மாநகரம்  வெற்றிக்  கொள்ளப்பட்ட  ஆண்டு  ரமழான் மாதத்தில் நபி صلى الله عليه وسلم அவர்கள் அங்கு புறப்பட்டனர், குராவுல் கமீம்  என்ற  இடத்திற்குச் செல்லும் வரை அவர்கள் நோன்போடு சென்றார்கள். மக்களும் நோன்போடு  இருந்தனர்.  பின்னர்  நபி صلى الله عليه وسلم  அவர்கள்  ஒரு  கோப்பையில் நீர் கொணரச் செய்து மக்கள் அனைவரும் பார்க்கும் அளவுக்கு கோப்பையை உயர்த்தி, மக்கள் அதனைப்பார்த்த பின்னர்   அதனைப்  பருகினார்.   இதன்    பின் மக்களில்  சிலர்   நோன்போடு இருப்பதாக  நபி صلى الله عليه وسلم அவர்களிடம்  கூறப்பட்டது. அதற்கு  நபி صلى الله عليه وسلم   அவர்கள்  “அத்தகையோர்  பாவிகளே! அத்தகையோர் பாவிகளே!” என்று கூறினர்.     (ஜாபிர்رَضِيَ اللَّهُ عَنْهُ முஸ்லிம், திர்மிதீ)

“இதன் பிறகு நாங்கள் நபி صلى الله عليه وسلم அவர்களுடன் பிரயாணத்தில் நோன்பு நோற்றிருக்கிறோம்” என்று அபூஸயீத் அல் குத்ரீُ அறிவிக்கும் ஹதீஸ் நூல்கள்: முஸ்லிம், அஹமது, அபூதாவூத்

மக்கா வெற்றிக்கு பின்னர் மேற்கொண்ட பிரயாணத்தில் நபி صلى الله عليه وسلم அவர்களுடன் நோன்பு நோற்றதாக அபூஸயீத் அல் குத்ரீ رَضِيَ اللَّهُ عَنْهُ குறிப்பிடுவதால் பிரயாணத்தில் நோன்பு வைக்கத் தடையில்லை என்பதையும் பிரயாணத்திற்குரிய சலுகையே இது என்பதையும் அறியலாம்.

மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்கள்

நாங்கள் நபி صلى الله عليه وسلم அவர்களுடன் இருக்கும்போது எங்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டு தூய்மையடைவோம். அப்போது விடுபட்ட நோன்பைக் களா செய்யுமாறு நபி صلى الله عليه وسلم அவர்கள் எங்களுக்கு கட்டளையிடுவார்கள். விடுபட்ட தொழுகைகளைக் களாச் செய்யுமாறு கட்டளையிடமாட்டார்கள். அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ  நூல்கள்: புகாரி, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ, இப்னுமாஜ்ஜா

கர்ப்பிணிகள், பாலூட்டும் அன்னையர்

கர்ப்பிணிகளுக்கும் பாலூட்டுவோருக்கும் நோன்பிலிருந்து நபி صلى الله عليه وسلم அவர்கள் சலுகையளித்தனர். அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: அபூதாவூத், நஸயீ, அஹமது, இப்னுமாஜ்ஜா

சலுகை என்பது ரமளானில் விட்டு விட்டு வேறு நாட்களில் நோற்க வேண்டும் என்பதே இதன் பொருள்.

நோயாளிகள், முதியவர்கள்

நோன்பு நோற்க இயலாத நோயாளிகளும் நோன்பை விட்டுவிட சலுகை வழங்கப்பட்டுள்ளர். முதியவர்களும் நோன்பை விட்டு விட சலுகை பெற்றுள்ளனர். நோன்பு நோற்க சக்தி பெற்றவர்கள் மீது ஒரு ஏழைக்கு உணவளிப்பது அவசியம் என்ற வசனம் பற்றி இப்னு அப்பாஸ் رَضِيَ اللَّهُ عَنْهُ கூறும்போது, இது மாற்றப்படவில்லை. நோன்பு நோற்க சக்தியிழந்த முதிய கிழவரும், கிழவியும் ஒவ்வொரு நாளுக்கு ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும் என்று விளக்கம் அளித்துள்ளனர். நூல்: புகாரி

நோன்பின் நேரம்

சுப்ஹு நேரம் வந்தது முதல் சூரியன் மறையும் வரை நோன்பின் நேரமாகும். அதாவது சுப்ஹு நேரம் வந்தது முதல் சூரியன் மறையும் வரை உண்ணாமல், பருகாமல், உடலுறவு கொள்ளாமல் இருக்க வேண்டும்.

ஃபஜ்ரு (அதிகாலை) நேரம் என்ற வெள்ளை நூல் (இரவு என்ற) கருப்பு நூலிலிருந்து தெளிவாகத் தெரியும்வரை உண்ணுங்கள், பருகுங்கள், பின்னர் இரவு வரும் வரை நோன்பைப் பூர்த்தி செய்யுங்கள். (2:187)

ஸஹர் உணவு

நீங்கள் ஸஹர் உணவு உண்ணுங்கள், ஏனெனில் ஸஹர் உணவில் நிச்சயமாக பரகத் உள்ளது என்பது நபிமொழி. அறிவிப்பவர்:அனஸ் பின் மாலிக் رَضِيَ اللَّهُ عَنْهُ  நூல்கள்: புகாரி, முஸ்லிம், நஸயீ, திர்மிதீ

நாங்கள் நபி صلى الله عليه وسلم அவர்களுடன் ஸஹர் செய்து விட்டு பிறகு (சுப்ஹு) தொழுகைக்கு ஆயத்தமாவோம் என்று ஸைத் பின் ஸாபித் رَضِيَ اللَّهُ عَنْهُ கூறினார்கள். (ஸஹர் முடித்து சுப்ஹு வரை) எவ்வளவு நேரம் இருக்கும் என்று அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கவர்கள் ஐம்பது வசனங்கள் ஓதும் அளவு (நேரம்) என்று விடையளித்தார்கள். அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் رَضِيَ اللَّهُ عَنْهُ  நூல்கள்: புகாரி, திர்மிதீ

(ஐம்பது வசனங்களை நிறுத்தி நிதானமாக ஓத பத்து நிமிடங்களுக்கு மேல் செல்லாது.)

ஸஹருக்காக அறிவிப்புச் செய்தல்

மக்கள்  உறக்கத்திலிருந்து விழித்து ஸஹர் செய்ய வேண்டியுள்ளதால் மக்களுக்கு இது பற்றி அறிவிப்புச் செய்து விழிக்கச் செய்வது நபி வழியாகும்.

நபி صلى الله عليه وسلم அவர்கள் பிலால் رَضِيَ اللَّهُ عَنْهُ, அப்துல்லாஹ் பின் உம்மி மக்தும் رَضِيَ اللَّهُ عَنْهُ ஆகிய இரண்டு முஅத்தின்களை நியமனம் செய்திருந்தார்கள். பிலால் அவர்கள் ஸஹரின் கடைசி நேரத்தில் பாங்கு சொல்வார். இது பஜ்ரு தொழுகைக்கானது அல்ல. மக்கள் ஸஹர் செய்வதற்கான அறிவிப்பாகும். அதன் பின்னர் பஜ்ரு நேரம் வந்ததும் அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் மற்றொரு பாங்கு சொல்வார். இது பஜ்ரு தொழுகைக்கான அழைப்பாகும்.

பிலாலின் பாங்கு உங்களை ஸஹர் செய்வதிலிருந்து தடுக்காது. அவர் நின்று வணங்கியவர் இல்லம் திரும்புவதற்காகவும், உறங்குபவர் விழிப்பதற்காகவுமே இரவில் பாங்கு சொல்வார். நபிமொழி அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, முஸ்லிம், அபூதாவூத்

பிலால் இரவில் பாங்கு சொல்வார். இப்னு உம்மி மக்தூம் பாங்கு சொல்வது வரை நீங்கள் உண்ணுங்கள்! பருகுங்கள்!. ஆயிஷா வழியாகவும், இப்னு உமர் வழியாகவும் அறிவிக்கப்படுகிறது. நூல்கள்: புகாரி, முஸ்லிம், நஸயீ

பாங்கு மூலம் மக்களை விழித்தெழச் செய்யும் இந்த சுன்னத் இன்று நடமுறையில் இல்லை. முஸ்லிம்கள் இந்த சுன்னத்தை நடைமுறைப்படுத்த முன்வரவேண்டும்.

விடி ஸஹர்

விடி ஷஹர் என்ற பெயரில் சிலர் உறங்கிவிட்டு சுப்ஹு நேரம் வந்ததும் விழித்ததும் அவசர அவசரமாக எதையாவது சாப்பிட்டு நோன்பு நோற்கிறார்கள். இது நோன்பாகாது. இந்தப் பழக்கம் தவறானதாகும். ஏனெனில் பஜ்ரு நேரம் வந்து விட்டால் எதையுமே சாப்பிடக்கூடாது என்று குர்ஆனில் கட்டளை உள்ளது. எனவே தாமதமாக விழிப்பவர்கள் எதையுமே உண்ணாமல், பருகாமல் நோன்பைத் தொடர வேண்டும்.

பசி முன்னிற்கும்போது

உங்களில் ஒருவர் உணவில் இருக்கும்போது தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டாலும் உணவுத் தேவையை முடிக்கும் வரை தொழுகைக்கு விரையவேண்டாம். என்பது நபிமொழி அறிவிப்பவர்: இப்னு உமர் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: புகாரி

மலஜலத்தை அடக்கிய நிலையிலும் உணவு முன்னே இருக்கும்போதும் எந்தத் தொழுகையும் இல்லை என்பது நபிமொழி அறிவிப்பவர்: ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத்

மறதியாக உண்பதும், பருகுவதும்

ஒருவர் நோன்பாளியாக இருக்கும்போது மறந்து சாப்பிட்டாலோ, பருகினாலோ அவர் தனது நோன்பை முழுமையாக்கட்டும். ஏனெனில் அவருக்கு அல்லாஹ்வே உண்ணவும், பருகவும் அளித்துள்ளான். நபிமொழி அறிவிப்பவர்: அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, முஸ்லிம், நஸயீ, திர்மிதீ, அஹ்மத், இப்னுமாஜ்ஜா

வேண்டுமென்றே நோன்பை முறிப்பவர்

வேண்டுமென்றே நோன்பை முறிப்பவர்கள் அந்த நோன்புக்கு ஈடாக ஒரு அடிமையை விடுதலை செய்யவேண்டும். இயலாதவர்கள் தொடர்ந்து இரண்டு மாதங்கள் நோன்பு நோற்கவேண்டும். அதற்கும் இயலாதவர்கள் அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும்.

ஒரு மனிதர் صلى الله عليه وسلم அவர்களிடம் வந்து “அல்லாஹ்வின் தூதரே! நான் அழிந்து விட்டேன்” என்றார். என்ன அழிந்து விட்டீர்? என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் அவரிடம் கேட்டார்கள். “ரமலானில் என் மனைவியுடன் உறவு கொண்டு விட்டேன்” என்று அவர் கூறினார். ஒரு அடிமையை விடுதலை செய்ய இயலுமா? என்று அவரிடம்  நபி صلى الله عليه وسلم கேட்டார்கள். அவர் ‘இயலாது’ என்றார். அப்படியானால் தொடர்ந்து இரண்டு மாதங்கள் நோன்பு நோற்க இயலுமா? என்று கேட்டார்கள். அவர் இயலாது என்றார். அப்படியானால் அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க இயலுமா? என்று கேட்டார்கள். அதற்கும் இயலாது என்றார்.

பின்னர் அவர் (அங்கேயே) அமர்ந்துவிட்டார். அப்போது நபி صلى الله عليه وسلم அவர்களிடம் பேரிச்சம் பழம் நிரம்பிய சாக்கு ஒன்று கொண்டு வரப்பட்டது. நபி صلى الله عليه وسلم அவர்கள் அதை அவரிடம் வழங்கி ‘இதை தர்மம் செய்வீராக’ என்றனர். அதற்கவர் “எங்களைவிட ஏழைகளுக்கா? இந்த மதீனாவுக்குள் எங்களைவிட ஏழைகள் எவருமில்லையே” என்றார். அதை கேட்ட நபி صلى الله عليه وسلم அவர்கள் தமது கடைவாய்ப் பற்கள் தெரியும் அளவு சிரித்தார்கள். நீர் சென்று உமது குடும்பத்தாருக்கு இதை வழங்குவீராக எனவும் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா  நூல்கள்: புகாரி, முஸ்லிம், நஸயீ, திர்மிதீ, அஹ்மத், இப்னுமாஜ்ஜா

குளிப்பு கடமையானவர் நோன்பு நோற்பது

நபி صلى الله عليه وسلم அவர்கள் இல்லறத்தில் ஈடுபட்டுவிட்டு குளிக்காமலே நோன்பு நோற்பார்கள். சுபுஹ் வேளை வந்ததும் தொழுகைக்காக குளிப்பார்கள்; என்று கூறும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் பல உள்ளன.

நபி صلى الله عليه وسلم அவர்கள் உடலுறவின் மூலம் குளிப்புக் கடமையானவர்களாக சுப்ஹூ நேரத்தை அடைவார்கள். ரமழானில் நோன்பு நோற்பார்கள். அறிவிப்பவர்கள்: ஆயிஸா رَضِيَ اللَّهُ عَنْهُ, உம்முஸலமா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத்

நோன்பாளி குளிக்கலாம், பல் துலக்கலாம்

நபி صلى الله عليه وسلم அவர்கள் நோன்பு நோற்றிருக்கும்போது வெப்பத்தின் காரணமாக தமது தலையில் தண்ணீர் ஊற்றிக்கொண்டதை நான் பார்த்திருக்கிறேன் என்று நபித்தோழர் ஒருவர் அறிவிக்கும் ஹதீஸ் அஹ்மத், அபூதாவூத், நஸயீ ஆகிய நூல்களில் இடம்பெற்றுள்ளது.

நபி صلى الله عليه وسلم அவர்கள் நோன்பு நோற்றிருக்கும்போது என்னால் எண்ணிச் சொல்ல முடியாத அளவு பல் துலக்கியதை நான் பார்த்துள்ளேன். அறிவிப்பவர்: அமீர் பின் ரபிஆ رَضِيَ اللَّهُ عَنْهُ  நூல்கள்: அபூதாவூத், திர்மிதீ

இரத்தம் குத்தி எடுத்தல்

ஆரம்பத்தில் ஜஃபர் பின் அபீதாலிப் رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் இரத்தம் கொடுத்துக் கொண்டிருந்த போது அவரைக் கடந்து சென்ற நபி صلى الله عليه وسلم அவர்கள் இரத்தம் கொடுத்தவரும், எடுத்தவரும் நோன்பை விட்டுவிட்டனர் என்றார்கள். பிறகு நோன்பாளி இரத்தம் கொடுப்பதை அனுமதியளித்தார்கள். அறிவிப்பவர்: அனஸ் رَضِيَ اللَّهُ عَنْهُ  நூல்கள்: தாரகுத்னீ

நபி صلى الله عليه وسلم அவர்கள் காலத்தில் நோன்பாளி இரத்தம் கொடுப்பதை நீங்கள் வெறுப்பவர்களாக இருந்தீர்களா? என்று அனஸ் رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள் “பலவீனம் ஏற்படும் என்பதனாலேயே அதனை வெறுத்தோம்” என்று விடையளித்தார்கள். அறிவிப்பவர்: ஸாபித் அல் புன்னாளி  நூல்கள்: புகாரி

மருத்துவ போன்ற காரனங்களுக்காக நோன்பாளி இரத்தம் கொடுத்தால் நோன்பு முறியாது என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

நோன்பு துறத்தல்

நோன்பு துறத்தலை (தாமதமின்றி) விரைந்து செய்யும்வரை மக்கள் நன்மையைச் செய்பவர்களாகிறார்கள் என நபி صلى الله عليه وسلم கூறினார்கள். அறிவிப்பவர்: ஸஹ்ல் இப்னு ஸஃது رَضِيَ اللَّهُ عَنْهُ  நூல்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத்

உங்களில் ஒருவர் நோன்பு துறக்கும்போது பேரித்தம் பழத்தின் மூலம் நோன்பு துறக்கவும்! அது கிடைக்காவிட்டால் தண்ணீர் மூலம் நோன்பு துறக்கவும்! ஏனெனில் தண்ணீர் தூய்மைப்படுத்தக் கூடியதாகும் என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஸல்மான் பின் ஆமிர் رَضِيَ اللَّهُ عَنْهُ  நூல்கள்: அபூதாவூத், திர்மிதீ, இப்னுமாஜ்ஜா, முஸ்னத் அஹ்மத்.

———————————————————————————————–

 

Advertisements

2 Responses

 1. Subject: Re: [K-Tic] Fw: “வணக்கம்” குழப்பம் வேண்டாம் ஸலாத்தினை பரப்புவோம்

  சகோதரர் தமிம் அவர்களே அஸ்ஸலாமு அலைக்கும்.

  வணக்கம், நமஸ்காரம்,நமஸ்தே இந்த சொற்கள் அறிமுக வார்தைகளாக பயன் படுத்தப் படுகின்றது
  இதை சிறிது நண்றாக சிந்தித்து பாருங்கள்,ஏன் ஒரு மனிதன் அவனைபோல உள்ள இண்னொரு மனிதனை வனங்க வேண்டும், (படைத்தவனை மட்டும் வணங்குவோம்,படைபினங்களை அல்ல)
  இஸ்லாம் தெளிவாக கூறுகின்றது வணக்கத்திற்கு உறியவன் அல்லாஹ் ஒருவனே,

  நன்மையிலும் பயபக்தியிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள். பாவத்திலும், பகைமையிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள வேண்டாம். அல்லாஹ்வுக்கே பயப்படுங்கள் – நிச்சயமாக அல்லாஹ் கடுமையாக தண்டிப்பவன். (திருக்குர்ஆன் 5:2)

  தனக்கு இணை கற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்கமாட்டான். அதற்குக் கீழ் நிலையில் உள்ள (பாவத்)தை தான் நாடியோருக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் மிகப்பெரிய பாவத்தையே கற்பனை செய்தார்.’ (அல்குர்ஆன் 4:48)

  நமது சகோதர சகோதிரிகளுக்கு தெளிவாக புரியவையுங்கள் அஸ்ஸலாமு அலைக்கும் என்ற அறிமுக வார்தையின் அர்தம் உங்களின் மீது இறைவனின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக.

  இது எல்லாகால கட்ட்ங்களூக்கும் பொருந்தும், நமக்கு முழுமையாக்கப்பட்ட மார்கத்தில் அறிமுக வார்த்தை நமக்கு இறைவனால் வழங்கப்பட்டுள்ளது, குழப்பம் வேண்டாம் ஸலாத்தினை பரப்புவோம்

  நம்பிக்கை கொண்டோரே! பொறுமையுடனும், தொழுகையுடனும்(அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கிறான்.

  யா அல்லாஹ் ! என் பாவங்களில் சிறியது, பெரியது, முதலாவது, கடைசியானது, பகிரங்கமானது, மறைவானது ஆகியவற்றை எனக்காகப் பொருத்தருள்வாயாக.(முஸ்லிம்)

  Mujeeb(@)Fazhuludeen,
  Alghat,KSA

  ——————————————————————————–
  From: mohamed thameem
  To: K-Tic-group-owner@yahoogroups.com
  Cc: k-tic-group@yahoogroups.com
  Sent: Sun, 24 July, 2011 12:45:27 PM
  Subject: [K-Tic] Fw: “வணக்கம்”

  — On Sun, 6/19/11, mohamed thameem wrote:

  From: mohamed thameem
  Subject: “வணக்கம்”
  To: quraaninkural@gmail.com, quraaninkural@sancharnet.in, ahamedshafeer61@rocketmail.com
  Date: Sunday, June 19, 2011, 5:29 AM

  அஸ்ஸலாமு அலைக்கும்.

  சிங்கப்பூரில் 4 தேசிய மொழிகள்.
  ஒவ்வொரு மொழிக்கும் ஒரு வானொலி நிலையம் இருக்கிறது.
  தமிழ் மொழிக்கு எ‌ன்று ஒலி 96.8 எ‌ன தமிழ் வானொலி இருக்கிறது.

  அந்த வானொலியில், முஹம்மது ரஃபி, பாத்திமா மரியம், யாஸ்மீன் அரிபா, பஷீரா எ‌ன பல முஸ்லிம்கள் வேலை செய்கிறார்கள்.
  ஒவ்வொரு நிகழ்ச்சி தொடங்கும் போதும் “வணக்கம்” எ‌ன்று சொல்லித்தான் ஆரம்பிக்கிறார்கள்.

  அது மட்டும் அல்ல.
  முஸ்லிம்கள் சம்பந்தமான நிகழ்ச்சிகள் எதுவும் நடந்தால், அந்த நிகழ்ச்சி சம்பந்தப்பட்டவர்களிடம் பேட்டி எடுத்தால் கூட, “வணக்கம்” சொல்லித்தான் ஆரம்பிக்கிறார்கள். பதிலுக்கு அந்த பிரமுகர்களும் “வணக்கம்” சொல்லி விட்டுத்தான் பேச ஆரம்பிக்கிறார்கள்.
  சமீபத்தில் “கடையநல்லூர் முஸ்லிம் சங்கம்” தன்னுடைய 75வது ஆ‌ண்டு விழாவை கொண்டாடியது.
  அதன் மறு நாளே “நாகூர் தர்கா”வை முஸ்லிம்கள் பொதுவுடைமை நினைவு இடமாக ஜநாதிபதி தலைமையில் மாற்றிய நிகழ்ச்சியும் நடந்தது.
  இந்த இரண்டு நிகழ்ச்சிகளின் பொறுப்பாளர்களும் “வணக்கம்” சொல்லித்தான் தங்களது பேட்டியைத் தொடங்கிநார்கள்.
  இஸ்லாம் நிச்சயமாக “வணக்கம்” எ‌ன்ற சொல்லை தடை செய்கிறதா?
  இங்கு சிங்கப்பூரில், “வணக்கம்” எ‌ன்ற வார்த்தை தமிழர்களின் மரியாதை செலுத்தும் வார்த்தையாகத்தான் பார்க்கப்படுகிறது.
  மற்ற இனம், மொழி பேசும் நண்பர்களும் நமக்கு “வணக்கம்” சொல்லுகிறார்கள்.
  இதை எப்படி எதிர் கொள்வது…..?

  சையது முஹம்மது தமீம்
  2/151 ஜாஹிர் ஹுஸைன் தெரு
  திருமங்கலக்குடி – 612 102

 2. LIFE SKETCH OF PROPHET MUHAMMAD (SAW) (V.V. IMP)

  1. HOLY NAMES

  Muhammad

  Ahmed

  Hamid

  Mahmood

  Mahi

  Hashir

  Aaqib

  2. HOLY BIRTH

  Islamic Dates/Day/Time/Place

  12th or 9th Rabbi-ul-awal, Monday, Early in the morning (before sun rise) at Holy MAKKAH

  or

  English date/year

  17th June 569. A.D

  or

  Hindi date date/year

  1st of jaaith 3672 kul jug

  or

  Other Dates

  1st year of elephant. (on40thday after elephant event) 2675th year to Prophet Noah’s flood 2585th year to Prophet Ibrahimi year

  3. DEATH

  12th Rabbi-ul-awwal 11 hijrah, 23 Nabvi, 8th June, 632 A.D, At the time of chast (after sun rise) In Madina munawwarah

  In the house of Bibi Ayesha R.A. Burried in the house of bibi Aysha R.A

  Grave exactly where died in the room

  4. LIFE SPAN Total Life Span

  63 years +0 month+4days+6 hours or

  total 22330 days or total 535924 hours

  Stay in Holy Makkah – 53 years

  Stay in Holy Madina – 10 years

  5. UNCLES

  Total uncles – 9

  Only 2 Accepted ISLAM – Syedna Hamza R.A & Syedna Abbas R.A

  7. Uncles Did not become Muslim –

  Aabu Talib, Abu Lahab, Zubair, Maqoom, Zarrar, Haris & Mugheera

  6. AUNTS

  Total Aunts – 6

  Only one Accepted ISLAM; Syeda Safia R.A

  5 Aunts didnot accept ISLAM –

  Um-e-Hakeem Baiza (Grandmother of Syedna Usman R.A), Aroohi (Some says perhaps she accepted Islam but not confirmed), Ateka (Some says perhaps she accepted Islam but not confirmed), Barrah, Amemmah

  7. EVENTS BEFORE VAHEE

  a) Death of Father Abdullah Bin Mutalib————Before Holy Birth

  b) Death of Mother Bibi Amena———————– 6th year after Birth

  c) Death of Grand Father Abu Mutalib———– 8th year after Birth

  d) First business trip towards Syria————- 13th year after Birth

  e) Participation- Harb-e-Fajar (battle for Kabba hurmat )15th year Birth

  f) Second business trip (with Mehsraslave of Bibi Khateeja R. A) 23rd year Birth

  g) Wedding with Syeda Khateeja R.A —————25th year after Birth

  h) Resolved tribe conflicts (fixing of Hajr-e-Asvad) 35th year after Birth

  i) Starting to go to Cave Hira ————————–36th year after Birth

  j) Beginning to ascend Vahee————————40th year after Birth

  8. WIVES – AZWAJ-E-MUTAHERAT

  Wife Name

  Nikkah Age

  Wife’s

  Year

  Wife age

  Prophet’s age

  Death

  Burried

  Before Nikkah

  Status

  Khateeja R.A.

  15 B.N

  40

  25

  10A.N

  Makkah

  widow twice

  ——–

  Sudah R.A

  10 A.N

  50

  50

  23 hijra

  Madina

  widow

  ——–

  Ayesha R.A

  02 hijra

  10

  55

  57 hijra

  Madina

  virgin

  ——–

  Hafsa R.A

  03 hijra

  56

  45 hijra

  Madina

  widow

  husb died in badar

  Zanab hazima

  04 hijra

  57

  Madina

  widow

  husb died in uhad

  umm-e-salma

  04 hijra

  57

  63 hijra

  Madina

  widow

  husb died in uhad

  Zanab hajash

  04 hijra

  57

  20 hijra

  Madina

  Divorced

  Jvaria

  05 hijra

  15

  58

  50 hijra

  Madina

  Divorced

  Umm-e-Habiba

  05 hijra

  58

  44 hijra

  Madina

  seperated

  husb left islam

  Memoona R.A

  06 hijra

  59

  51 hijra

  sarif

  widow twice

  Safia R.A.

  05 hijra

  15

  58

  50 hijra

  Madina

  Divorced

  Maria Qubtia

  16 hijra

  Madina

  IMPORTANT TO NOTE

  a) Syeda Ayesha R.A was the daughter of sydna abu baker siddiq R.A

  b) Syeda hafza was the daughter of syedna umer R.A

  c) Syeda umm-e-habiba was the daughter of abu sufiyan

  d) Only syeda khateeja and syeda zainab hazima died in prophet’s life

  e) 9 wives were alived when Prophet S. A. W Passed away.

  9. SONS

  Total Sons – 3

  1. Syedna QASIM from Khateeja.R.A

  2. Syedna Abdullah (Tayab, Tahir) from Khateeja R.A

  3. Syedna Ibraheem from Maria Qubtia R.A All the sons died in their child hood, first 2 are burried in Jannat-ul-Moalla Makkah and Last one is in Jannat-ul-Baqqi Madina.

  10. DAUGHTERS – 4 Daughters

  1.. Syeda Zainab R.A. married with Abual Bin Aas Bin Rabbi

  2. Syeda Ruqayyia R.A married with Syedna Usman Bin Affan

  3. Syeda Um-e-Kulsoom married with Syedna Usman bin Affan

  4. Syeda Fatima ZUHRA married with Syedna Ali Bin Abi Talib All daughters were from Um-ul-Momeneen Syeda Khatija R. A. All daughters except Syeda Fatima died in Prophets’ life. All daughters burried in Jannat-ul-Baqi Madina.

  11. FAMILY TREE OF PROPHET MUHAMMAD

  image001 (3)

  12. TREE OF PROPHETS OF ALLAH

  image002

  13. S0ME MAJOR PROPHETS Names of Major Prophets in descending order

  image003

  14. BATTLES

  Battles in which Prophet took part physically, called GHAZWAT. Battles in which Prophet not command physically, called SARAYAS GHAZWAT – 27

  1. WADAN

  2. BAWAT

  3. SAFWAN

  4. ZU-ALASHEERA

  5. BADAR KURA

  6. QANEEQAH

  7. AL-SAWEEQ

  8. QAR-QARA lekaarmd

  9. UZFAN

  10. UHAD

  11. HMRA-O-ASAD

  12. BANU NASEER

  13. BADAR-AKHIR

  14. DOMTA JANDOL

  15. BANU MUTLAQ

  16. AHZAB/TRENCH

  17. BANU QAREEZA

  18. BANU LAHYAN

  19. ZE-FARDA

  20. HUDABIYA

  21. KHYBER

  22. VADI-E-ANQRA

  23. ZAT- UL- RAQA

  24.. MAKKAH

  25. HUNNAIN

  26. TAIF

  27. TUBOOK

  15. The Prophet’s Last Sermon

  In the Name of Allah, the Most Gracious, the Most Merciful This sermon was delivered on the ninth day of Dhul Hijah, 10 A.H. (632 A.D.) in the valley of Mount Arafat . The contents of the message were collected from different narrations, and there are other parts to it that are not mentioned here. This sermon still needs the authenticity of all of its parts to be checked.

  “O People, lend me an attentive ear, for I know not whether, after this year, I shall ever be amongst you again. Therefore, listen to what I am saying to you very carefully and take these words to those who could not be present today.

  O People, just as you regard this month, this day, this city as sacred, so regard the life and property of every Muslim as a sacred trust. Return the goods entrusted to you to their rightful owners. Hurt no one so that no one may hurt you. Remember that you will indeed meet your Lord, and that He will indeed reckon your deeds. Allah has forbidden you to take interest, therefore, all interest obligations shall henceforth be waived. Your capital, however, is yours to keep. You will neither inflict nor suffer inequity. Allah has judged that there shall be no interest and that all interest due to Abbas bin Abdul-Muttalib (the prophet’s uncle) shall henceforth be waived.

  Every right arising out of homicide in pre-Islamic days is henceforth waived and the first such right I waive is that arising from the murder of Rabiyah bin Al-Harith (relative of the prophet). O Men, the unbelievers indulge in tampering with the calendar in order to make permissible that which Allah forbade, and to forbid that which Allah had made permissible. With Allah the months are twelve; four of them are holy; three of these are successive and one occurs singly between the months of Jumadah and Shaaban.. Beware of Satan, for the safety of your religion. He has lost all hope that he will ever be able to lead you astray in big things, so beware of following him in small things.

  O People, it is true that you have certain right with regard to your women, but they also have rights over you. If they abide by your right then to them belongs the right to be fed and clothed in kindness. Do treat your women well and be kind to them for they are your partners and committed helpers. And it is your right that they do not make friends with any one of whom you do not approve, as well as never commit adultery.

  O People, listen to me in earnest, worship Allah, say your five daily prayers, fast during the month of Ramadhan, and give your wealth in zakat. Perform Hajj if you can afford to. All mankind is from Adam and Eve, an Arab has no superiority over a non-Arab, nor a non-Arab has any superiority over an Arab; also a white has no superiority over a black, nor a black has any superiority over white except by piety and good action. Learn that every Muslim is the brother of another Muslim, and that Muslims constitute one brotherhood. Nothing shall be legitimate to a Muslim which belongs to a fellow Muslim unless it was given freely and willingly. Do not, therefore, do injustice to your selves.

  Remember, one day you will appear before Allah and answer for your deeds. So beware, do not stray from the path of righteousness after I am gone.

  O People, no prophet or apostle will come after me and no new faith will be born. Reason well, therefore, O People, and understand my words which I convey to you. I leave behind me two things, the Quran and my example, the Sunnah, and if you follow these you will never go astray.

  All those who listen to me shall pass on my words to others, and those to others again; and may the last ones understand my words better that those who listen to me directly. Be my witness O Allah, that I have conveyed Your message to Your people.”

  Alahumma infa`ni bima `allamtani wa `allamni ma yanfa`uni!

  OH ALLAH! Make useful for me what You taught me
  and teach me knowledge that will be useful to me! (Aameen)

  Guiding one soul to knowledge and faith is a momentous achievement.
  It is what will earn us great blessings…
  (Insha Allah)

  Please keep forwarding this “Hadith” to all … Because
  the Prophet (sallallaahu alayhi wa sallam) said:
  “Pass on knowledge from me even if it is only one Verse”.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: