ஈத்ப் பெருநள் விளையட்டுப் போட்டி நம்ம ஊர்ல…………………….

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தும் ஈத்ப் பெருநள் விளையட்டுப் போட்டி ,


அல்லாஹ்வின் மாபெரும் உதவியால் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா  சார்பாக கடந்த வருடம் தமிழகமெங்கும் விளையட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது ,அதையொட்டி நமதூரில் விளையட்டுப் போட்டி நடதப்பட்டது . அதில் நமதூர் சிறுவர் சிறுமிகள் மற்றும் நமதூர் இளைஞர்கள் கலந்துக்கொண்டனர். இந்த போட்டியில் வெற்றிப்பெற்றவர்களுக்கு பரிசுகள்த் தரப்பட்டது, நமதூரில் பல வருடங்கள் கழித்து இதுப் போன்ற விளையாட்டுபோட்டிகள் நடைப்பெற்றது நமதூர் மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்தது , ஏனென்றால் நமதூரில் இதுப் போன்ற நிகழ்ச்சிகள் நடைப்பெறாததால் சிறுவர் சிறுமிகள் இளைஞர்கள் ஆகியோர் வீட்டிலேயே இருந்தனர் சிலர் சினிமாப் போன்ற அனாவசிய விசயங்களில் ஈடுப்பட்டு தீமையை ஏற்படுத்திக் கொள்கின்றனர். அவர்களுக்கு இது புதுமையான புத்துணர்ச்சியை தந்தது.

இன்ஷாஅல்லாஹ் இது மேலும்த் தொடர இந்த வருடமும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தும் ஈத்ப் பெருநள் விளையட்டுப் போட்டி நடைப்பெறவுள்ளது, அதற்கு கடந்த வருடம் போன்றே இந்த வருடமும் நமதூர்ப் பெரியவர்களும் இளைஞர்களும் ஆதரவுத் தருமாறுக் கேட்டுக்கொள்கிறோம்.  போட்டிகளை நடத்த நிதிவுதவி அவசியமான ஒன்றாக உள்ளது.

நிதிவுதவி செய்ய விரும்புவோர்

contact for;

9894148520;

9894918318;

9698562812

Advertisements

One Response

 1. சுயபரிசோதனை

  Source: http://www.ottrumai.net/TArticles/37-DiscoverYourself.htm

  உங்கள் கணக்குகள் கேட்கப்படுமுன் நீங்களே உங்கள் சரிபார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் செயல்கள் எடை போடப்படுமுன் நீங்களே எடை போட்டுப் பாருங்கள். உமர் இப்னு கத்தாப் (ரலி).

  இது ஒரு சுய மதிப்பீட்டுப் படிவம். நிகழ்காலத்தில் உங்கள் வாழ்க்கையின் பல பகுதிகளையும் மதிப்பீடு செய்து, உங்கள் திசைகளை மாற்றிக்கொள்வதற்கும், இன்னும் மேன்மைப்படுத்திக் கொள்வதற்கும் உதவும். இன்ஷா அல்லாஹ்..

  உங்கள் இஸ்லாமியப் பணி:

  1. நற்கரியங்களுக்காக எத்தனை நேரம் ஒதுக்குகிறீர்கள்?

  2. உங்கள் நேரத்தை பள்ளிவாசலுக்காகவோ முஸ்லிம் கல்விக் கூடத்திற்காகவோ செலவழித்திருக்கிறீர்களா?

  3. களப்பணியில் ஈடுபட்டிருக்கிறீர்களா?

  4. இஸ்லாமிய செய்தியை மற்றவர்களிடம் எத்தி வைப்பதற்கு எத்தனை நேரம் செலவழித்திருக்கிறீர்கள்?

  5. இஸ்லாத்திலிருந்து வெகு தூரத்தில் உள்ள உறவினர்கள், நண்பர்களைப் போய்ச் சந்தித்தீர்களா?

  6. நீங்களும் உங்கள் அக்கம் பக்கத்தினரும் ஒருவர் மற்றவருடைய இன்ப, துன்பங்களில் பங்கேற்றீர்களா?

  7. ஒரு முஸ்லிம் நிறுவனம் உபயோகிக்கக் கூடிய திறமைகள் எவற்றையாவது வளர்த்துள்ளீர்களா?

  உங்கள் தொழில்:

  1. உங்கள் வேலையில் திசையையும் கவனத்தையும் தவற விட்டு விட்டீர்களா?

  2. உங்கள் வேலை உங்களுக்குப் பிடித்திருக்கிறதா?

  3. உங்கள் வேலை இஸ்லாம் அனுமதிக்கக் கூடியதாக இருக்கிறதா?

  4. இல்லையென்றால், எவ்வித வேலை மாற்றம் உங்களுக்கு ஹலாலான வருவாயைத்தருவதுடன், உங்கள் திறமைகளை அல்லாஹ்விற்காகப் பயன்படுத்த உதவும்?

  5. இதைப் பற்றி ஒரு தகுதியான மனிதரிடம் கலந்தாலோசித்திருக்கிறீர்களா?

  6. உங்கள் தொழில் ஹலாலானதாக இருந்தால், அதன் திறனையும், கவனத்தையும் முன்னேற்ற முயன்றிருக்கறீர்களா?

  7. அல்லாஹ்விடம் உங்களுக்கு உள்ள உறவை முன்னேற்ற, உம்மத்திற்கும், சமுதாயத்திற்கும் நன்மை புரிய, என்னென்ன புது வழிகள் மூலம் உங்கள் தொழிலை உபயோகிக்கலாம்?

  8. தொழில் அல்லாஹ்வின் பொருத்தத்தின் பிரகாரம் இருக்க வேண்டும் என்ற விஷயத்தை பிறருக்கும் எத்தி வைத்துள்ளீர்களா..?

  உங்கள் வாழ்க்கைத் துணை:

  1. உங்கள் வாழ்க்கைத் துணையுடன் உங்கள் உறவு எப்படி இருக்கிறது?

  2. தினசரி அடிப்படையில் அவர்களுடன் அடிக்கடி அர்த்தமுள்ள உரையாடல்களில் ஈடுபடுகிறீர்களா?

  3. இஸ்லாமிய வகுப்புகளுக்குத் தொடர்ச்சியாக இருவரும் சேர்ந்து செல்வதன் மூலம் இஸ்லாத்தைப் பற்றி அறிந்து கொண்டீர்களா?

  4. நீங்கள் இருவராகவும், குடும்பமாகவும் இஸ்லாத்தை உங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக ஆக்குவதற்கு எப்படி முயன்றீர்கள்?

  5. பேசிக் தீர்த்துக் கொள்ள வேண்டிய மௌனமான வருத்தங்கள் ஏதாவது மனதளவில் இருக்கிறதா?

  6. கடந்த வருடத்தில் எத்தனை முறை நீங்கள் இருவரும் சேர்ந்து மறுமை சிந்தனை குறித்து பேசியிருக்கிறீர்கள்?

  7. உங்கள் உறவில் சொல், உணர்வு அல்லது உடல் ரீதியாக செய்யப்பட்ட கொடுமை அல்லது அநீதி ஏதாவது உள்ளதா? அப்படியிருந்தால், ஏன் அது நடந்தது? அதற்கு என்ன செய்யலாம்?

  8. கடந்த வருடத்தில் உங்கள் உறவினால் அல்லாஹ்வின் மேலும், இஸ்லாத்தின் மேலும் உள்ள ஈமான் வளர்ந்திருக்கிறதா?

  9. உங்கள் வாழ்க்கைத் துணையின் இடத்தில் நீங்கள் இருந்தால் எப்படி உணர்வீர்கள்?

  உங்கள் பிள்ளைகள்:

  1. உங்கள் பிள்ளைகளுடன் உங்கள் உறவு எப்படி இருக்கிறது?

  2. அவர்களுடைய பள்ளி, பகுதி நேர, சமூக நடவடிக்கைகள், இவற்றில் என்ன நடக்கிறது என்று தெரியுமா?

  3. அவர்களுடைய நண்பர்கள் யார் என்று தெரியுமா?

  4. தினசரி அடிப்படையில் அவர்களுடன் அடிக்கடி அர்த்தமுள்ள உரையாடல்களில் ஈடுபடுகிறீர்களா?

  5. அவர்களுடன் ஓய்வு நேரத்தைக் கழிக்கிறீர்களா?

  6. அல்லாஹ்வுடன் பிள்ளைகளுக்கு நெருக்கத்தை ஏற்படுத்த நீங்கள் எடுத்த ஏதாவது 5 செயல்கள்.

  7. உங்கள் உறவில் சொல், உணர்வு அல்லது உடல் ரீதியாக செய்யப்பட்ட கொடுமை அல்லது அநீதி ஏதாவது உள்ளதா? அப்படியிருந்தால், ஏன் அது நடந்தது? அதற்கு என்ன செய்யலாம்?

  8. அவர்களுக்கு முன்னால் வாழும் இஸ்லாமிய எடுத்துக்காட்டாக நீங்கள் இருந்திருக்கிறீர்களா?

  9. எதன் மூலம் அவர்களுடன் நீங்கள் அதிக நேரம் செலவழிக்கலாம்?

  10. அவர்கள் எப்படிப்பட்ட சூழ்நிலைகளில் வளர்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா?

  11. அவர்களுக்குப் பிடித்த தொலைக்காட்சி நிகழ்ச்சி, எழுத்தாளர்கள், வீடியோ விளையாட்டுகள், விளையாட்டுப்பொருட்கள் போன்றவை என்ன என்று தெரியுமா?

  12. எத்தனை முறை பள்ளிவாயிலில் ஜும்மா தொழுதிருக்கிறார்கள்?

  13. உங்களைப் பற்றிய மதிப்பீடு அவர்களிடம் எப்படி இருக்கிறது என்று நினைக்கிறீர்கள்?

  14. அவர்கள் எதாவது சொல்ல நினைத்தால் உங்களிடம் பேசுவார்களா? அல்லது உங்கள் துணைவருடன் பேசுவார்களா?

  15. உங்கள் உறவினர்களுடன் (உடன் பிறப்புகள், மற்றவர்கள்) உங்கள் உறவு எப்படி இருக்கிறது?

  16. எத்தனை முறை அவர்களுடன் தொடர்பு கொள்கிறீர்கள்?

  17. அவர்களுக்கு பெருநாள் வாழ்த்து-பரிசு ஏதாவது கொடுத்தீர்களா அல்லது பெருநாளுக்கு தொலைபேசியிலாவது பேசினீர்களா?

  18. அவர்கள் அருகில் வசிக்கவில்லை என்றால் வருடத்திற்கு ஒருமுறையாவது அவர்களைப் போய்ப் பார்க்கிறீர்களா?

  19. தீர்க்க வேண்டிய மனஸ்தாபங்கள் ஏதாவது இருக்கிறதா?

  20. அவர்கள் அல்லாஹ்வை நெருங்க ஏதாவது முயற்சி செய்தீர்களா?

  21. அவர்களுடைய ஹலாலான தேவைகளை (அதாவது பண உதவி) நிறைவேற்ற உதவியிருக்கிறீர்களா?

  22. உங்களுடைய பிள்ளைகள் உங்கள் உடன்பிறப்புகளை அறிவார்களா?

  அல்லாஹ்வுடன் உங்களுடைய தனிப்பட்ட உறவு:

  1. சந்தோஷமான, மகிழ்ச்சியான நேரங்களில் எத்தனை முறை அல்லாஹ்வை நினைவு கூர்ந்து அவனுக்கு நன்றி செலுத்தினீர்கள்?

  2. இவ்வாண்டு, நீங்கள் பெற்ற கல்வியினாலும், செயல்பாடுகளினாலும் அல்லாஹ்வைப் பற்றிய ஞானமும் அவனுடன் உங்களுக்குள்ள கடமையுணர்ச்சியும் ஆழமானதா?

  3. அல்லாஹ்வுடன் உள்ள தொடர்புகளில் சோம்பேறித்தனமாக இருந்தீர்களா?

  4. உங்களுக்கு ஏதாவது தேவை இருந்த சமயம் தவிர, எத்தனை முறை அல்லாஹ்வுடன் துவா மூலம் பேசினீர்கள்?

  5. எத்தனை முறை அல்லாஹ்வுடைய வழிகாட்டலை கேட்டிருக்கிறீர்கள்?

  6. கவலை, தேவை, சிரமம் போன்ற சமயங்களில் எத்தனை முறை அல்லாஹ்விடம் கையேந்தியிருக்கிறீர்கள்?

  7. அல்லாஹ்வின் நினைவையும், அவனுடனுள்ள உங்களுடைய கடமையுணர்ச்சியையும் அதிகரிப்பதற்கு தினசரி, வாராந்திர அடிப்படையில் நீங்கள் என்ன செய்யலாம்?

  8. அல்லாஹ்வை எந்நேரமும் நினைவில் நிறுத்த, குர்ஆன், நபிமொழிகளிலுள்ள துவாக்களை எப்படி மனப்பாடம் செய்யலாம்?

  9. அல்லாஹ்வுடன் தொடர்பு கொள்ளும்படி சகமனிதர்களை அழைத்திருக்கிறீர்களா?

  To continue reading …. : http://www.ottrumai.net/TArticles/37-DiscoverYourself.htm

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: