கூகுள் வாய்ஸ் 1 ரூபாயில் இந்தியாவிற்கு பேச

இந்தியாவிற்கு பேச 1 ரூபாய்,அமெரிக்கா, கனடாவிற்கு வெறும் 50பைசா மட்டுமே.
எதையும் டவுன்லோட் செய்ய வேண்டியதில்லை.
ஜிமெயிலிலிருந்து நேரடியாக உலகின் எந்த மூலைக்கும் தொடர்பு கொள்ளலாம்.
மிக மிக தெளிவான நெட்வொர்க்.(கணினியில் WINDOWS, LINUX, MAC)
மொபைலில் ANDROID, IPHONE, IPAD, IPOD, BLACKBERRY ஆகிய மாடல்களிலும் வேலை செய்கிறது.
தெருக்களில் விற்கும் சில மொக்கையான இன்டர்நேஷனல் காலிங் கார்டுகளை வாங்கி அரைமணி நேரம் டவுன்லோட் செய்து மூன்று மணிநேரம் தொடர்பு கொள்ள முயற்சித்து, ஒன்று இந்தப்பக்கம் கேட்கும், அல்லது அந்தப்பக்கம் மட்டும் கேட்கும். ஒரு நண்பர் இந்தியாவிலிருந்து எனக்கு போன் செய்து சொன்னார் – தயவு செய்து உன் லேப்டாப்பில் இருந்து கூப்பிடாதே!!(என்னே வெறி!)
ஆனால் கூகிள் வாய்ஸ் அப்படியல்ல! கீழுள்ள முகவரிக்குச் சென்று உங்கள் கூகிள் கணக்கில் நுழைந்து குறித்த பட்ச தொகை 10 டாலர் ரீசார்ஜ் (Any Credit card or Debit card பயன்படுத்தி) செய்ய வேண்டும். உங்களுக்கு உறுதிப்படுத்த மெயில் ஒன்று வரும், அதை கிளிக் செய்தால் ஒரு நாளைக்குள் உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும்.
எப்படி கால் செய்வது??
ஜிமெயில் கணக்கில் நுழைந்து இடதுபுறம் உள்ள Call Phone கிளிக் செய்தால் போதும் – உலகின் எந்த என்னையும் தொடர்பு கொள்ளலாம்.
சிறப்புகள்:-

 • ஐந்தே நொடிகளில் அழைக்கும் நபருடன் பேசலாம்
 • மிக மிகத் தெளிவான வாய்ஸ்.
 • ஒரே நேரத்தில் பல நபர்களை அழைக்கலாம் (மற்றதை ஹோல்டில் வைத்து)
 • ஸ்கைப்பை விட குறைந்த கட்டணம் – 1 RUPEE/MIN (0.02 USD)
 • 50 INTERNATIONAL SMS இலவசம்
 • பேசுவதை ரெகார்ட் செய்து கொள்ளலாம்.
 • எவ்வளவு நாள் வேண்டுமானாலும் உபயோகிக்கலாம் (தீர்ர வரைக்கும்தானுங்கோ)
 • PHONEBOOK சேமிக்கும் வசதி.
 • அமெரிக்கா மற்றும் கனடாவில் வசிப்போர்களுக்கு அவர்களுக்குள் இலவசம்,
 • மேலும் பல சேவைகள், VOICE MESSAGE & MORE
மற்ற நாடுகளுக்கான கட்டண விபரம் மற்றும் இதர விபரங்களுக்கு :-

 

Advertisements

2 Responses

 1. (பெற்றோர்களே கவனம் –உஷார்)

  My Respected Parents .. Plz take care your children’s

  Brothers and Sisters : FYI

  Please Forward this Mail to YR contact circle,

  Thanks to brother sikkander anas and Tafareg@yahoogroups.com

  http://www.maalaimalar.com/2011/10/25120839/internet-friendship-girl-stude.html

  மார்க்கம் அறியாத பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளுக்கும் மார்க்கத்தை கற்றுக்கொடுக்காமல். வீட்டிலும் மார்க்கத்தை பேணாமல். தங்களின் பொறுப்பை மறந்து..,. தங்களது பிள்ளைகளுக்கு ”செல்லம்” “பாசம்” ஃபேஷன்”என்ற பெயரில் சுதந்திரம் கொடுத்து. பிள்ளைகளின் ஆசைகளை பூர்த்தி செய்வதாக கருதி அவர்கள் வழிகெட காரணமாகிறார்கள்.

  SUBJECT # 01

  இன்டர்நெட் நட்பால் சீரழியும் மாணவிகள்: செக்ஸ் காட்சிகளை தயாரித்து பணம் பறிக்கும் கும்பல்

  http://www.maalaimalar.com/

  சென்னை, அக். 25-

  இ-மெயில் மூலம் நட்பு வலைவிரித்து இளம் பெண்களை வீழ்த்தி பணம் பறிக்கும் இ-பயங்கர வாதம் அதிகரித்து விட்டது. உலகளாவிய தொடர்புகளால் குற்றவாளிகளை பிடிப்பது சைபர் கிரைம் போலீசாருக்கு சவாலாக உள்ளது.

  எளிய நகரங்களில் மட்டும் அல்லாது, சிறிய ஊர்களில் கூட இன்று இன்டர்நெட் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. தவிர, வசதி படைத்தவர்கள் வீடுகளிலேயே இன்டர்நெட் இணைப்பை வைத்துள்ளனர். இன்டர்நெட் கலாச்சாரம் பெருகி விட்டது. இன்டர்நெட் நல்ல விஷயங்களுக்கு பயன்பட்டது போக,இன்று பல்வேறு குற்றங்களுக்கு ஊற்றுக் கண்ணாக மாறிப் போய் விட்டது.

  சமூக விரோதிகள் விரிக்கும் வலையில் சிக்கி இளம் பெண்களும், குடும்ப பெண்ணும் வெளியில் சொல்ல முடியாத துன்பத்தை அனுபவிக்கின்றனர். குடும்ப கவுரவம், சமூக அந்தஸ்து இவற்றை கருதி பிளாக் மெயில் பேர் வழிகள் கேட்கும் பணத்தை, பொருளை கொடுத்து, வெளியில் தெரியாமல் மறைத்து விடுகின்றனர். இதுவே பிளாக்மெயில் பேர் வழிகளுக்கு உரமிட்டது போல் ஆகி விடுகிறது. இப்படி பல விஷயங்ககள் அமுக்கப்படுவதால், இன்டர்நெட் குற்றவாளிகளை பிடிப்பது சைபர்கிரைம் போலீசாருக்கு சவாலாக உள்ளது.

  சமீபத்தில் சென்னையை சேர்ந்த 10 வயது பள்ளிச்சிறுமி இன்டர்நெட் மூலம் கிடைத்த நட்பு வலையில் சிக்கி, பல்வேறு அவஸ்தைகளை அனுபவித்த சம்பவம் இப்போது வெளியாகி உள்ளது. சென்னையை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவரின் மகள் அபி (பெயர் மாற்றப்பட்டுள்ளது), 10 வயதான இவள் நகரில் உள்ள பிரபல பள்ளியில் 5-ஆம் வகுப்பு படிக்கிறாள். இந்த வயதிலேயே இன்டர் நெட்டில் இவள் புகுந்து விளையாடுவதை பார்த்து இவளது பெற்றோர் பூரித்துப் போனார்கள்.

  இவளது இ.மெயில் முகவரிக்கு தினமும் நிறைய மெசேஜ்கள் வந்தன. அந்த முகவரிக்கு இவளும் பதில் அனுப்புவாள். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு இவளது இ-மெயிலுக்கு உனது நட்பு தேவை என்று மெசேஜ் வந்தது. அதனுடன் அதை அனுப்பி இருந்தவர், தானும் ஒரு பள்ளி மாணவி என்றும், ஒரு சமயத்தில் அபியுடன் பள்ளியில் ஒன்றாக படித்தவள் என்றும் கூறப்பட்டு இருந்தது.

  இதையடுத்து, அந்த முகம் தெரியாத பெண்ணை அபி நண்பராக ஏற்றுக் கொண்டாள். இருவரும் அடிக்கடி ஆன்-லைனில் பேசிக் கொண்டனர். இப்படியே தொடர்ந்து பழக்கம் சில நாளில் திசை மாறியது. நைசாக பேசி அபியை சில நடவடிக்கைகளுக்கு அவர் உட்படுத்தினாள்.

  வெப்-கேமரா முன்பு தனது அங்கங்களை காட்டினாள். இதை விளையாட்டாகவே அபி நினைத்தாள். ஆனால்,இவளது செய்கைகள் அனைத்தும் வெப்- காமிராவில் படம் பிடிக்கப்பட்டு, எதிர் முனையில் பதிவு செய்யப்பட்டது. இந்த விஷயத்தை அபி தன் பெற்றோரிடம் சொல்லவும் இல்லை,மகளின் நடவடிக்கைகளை அவர்கள் கண்காணிக்கவும் கிடையாது. இப்படியே 3 மாதங்கள் கடந்த நிலையில், அபியின் தந்தைக்கு மிரட்டல் இ- மெயில் வந்தது. அதில் ரூ.50 லட்சம் தரவேண்டும். இல்லை எனில் அபியின் ஆபாச வீடியோவை யூடியூப்பில் போட்டு விடுவேன். போலீசுக்கு போனால் நிலைமை இன்னும் விபரீதம் ஆகும்.

  மற்ற இணையத்தளங்களிலும் ஆபாச வீடியோவை வெளியிடுவேன் என்றும் மிரட்டப்பட்டார். இதனால் போலீசுக்கு செல்ல தயங்கினார். பணம் பறிக்கும் கும்பலிடம் இருந்து தொடர்ந்து மிரட்டல் இ-மெயில்கள் வந்த வண்ணம் இருந்தன. அபியின் பெற்றோர், தனியார் துப்பறியும் ஏஜென்சியை அணுகி விபரத்தை தெரிவித்தனர். அவர்கள் சைபர் குற்றங்களை கண்டு பிடிப்பதில் கைதேர்ந்தவர்கள். அவர்கள் இதுபற்றி விசாரித்து வருகின்றனர்.

  இது பற்றி, தனியார் துப்பறியும் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

  இது போன்று நிறைய புகார்கள் எங்களிடம் வந்துள்ளன. பேஸ்புக்கில் முதியவர்கள் கூட இளையவர் போன்று தோற்றமளிக்கும் வகையில் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி இளம் பெண்களை ஏமாற்றுகின்றனர். நட்பு விலையில் விழச்செய்து பெண்களை பிளாக் மெயில் செய்வது, பணம் பறிப்பது போன்ற செயல்களில் இ-பயங்கர வாதிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

  நெதர்லாந்து, ரஷ்யா, அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் சைபர் குற்றங்களை நவீன தொழில் நுட்பம் மூலம் சுலபமாக கண்டுபிடித்து விடுகின்றனர். ஆனால், இந்தியாவில் போலீசாருக்கு போதிய பயிற்சியும், நுட்பமும் இல்லாததால்,சைபர் குற்றங்களை கண்டு பிடித்து நடவடிக்கை எடுப்பதில் சிக்கல் உள்ளது.

  இணைய தளத்தில் சாட்டிங்கில் ஈடுபடுபவர்கள் குறிப்பாக பெண்கள் முன் ஜாக்கிரதையாக கையாண்டால், இது போன்ற சிக்கல்களை தவிர்க்க முடியும். வெளிநாடுகள் அல்லது தூரத்தில் இருக்கும் தெரிந்து நட்பு மற்றும் உறவு வட்டாரங்களில் மட்டுமே இ-மெயிலில் பேச வேண்டும். முகம் தெரியாதவர்களுடன் நட்பை ஏற்படுத்திக் கொள்வது, பின்பு பல சிக்கல்களுக்கு வழி ஏற்படுத்தி விடும்.

  முகம் தெரியாதவர்களின் முகவரிக்கு எந்த சூழ்நிலையிலும் போட்டோவை அனுப்ப கூடாது. போட்டோவை வைத்து கூட மார்பிங்” முறையில் ஆபாசமாக சித்தரிக்க முடியும் எச்சரிக்கை மிகவும் அவசியம்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  வீடியோ-மொபைல்கள்@இண்டெர்னெட்,. >>> DESK-TOP கம்ப்யூட்டர்@இண்டெர்நெட். வசதி இருப்பின் >>>

  லேப்டாப் கம்ப்யூட்டர் @USB இண்டெர்நெட்மோடம். என்று இந்த “சினிமா’” அனாச்சாரங்களும் ஆபாசங்களும் நமது வீட்டிலிருந்து – பாக்கெட்டு வரை கிடைக்க >> பெண்களின் பெற்றோர்களும்,பெண்ணின் கணவனும். உழைக்கிறார்கள்.

  கேட்டதை வாங்கி கொடுப்பவர்களே!!

  · மேற்கண்ட சாதனங்களை பிள்ளைகள் எப்படி பயன்படுத்துகிறார்கள்.

  · யார் யாருடன் தொடர்பு கொள்கிறார்கள். எத்தனை சிம் கார்டுகள் உபயோகிக்கிறார்கள்.

  · மாற்று மத தோழிகள் வீட்டுக்கு சென்று என்ன செய்கிறார்கள். அவர்களது வீட்டில் ஆண்களோடு பழகுகிறார்களா?

  · தனி அறையில் இருந்து T.V யில் எந்தெந்த சேனல்கள் பார்க்கிறார்கள். என்ன சி.டி.பார்க்கிறார்கள்.

  · கம்ப்யூட்டரில் (இண்டெர்நெட்டில்) தனிமையில் இருந்து என்ன பார்க்கிறார்கள் என்ன செய்கிறார்கள்.

  · இ-மெயிலில், சாடிங்கில் யார் யாருடன் தொடர்பு கொள்கிறார்கள்…

  என்பதை கேட்டு தெறிந்து கொள்கிறீர்களா? அல்லது எச்சரிக்கை உணர்வோடு கண்காணிக்கிறீர்களா?

  என்னோட பிள்ளையை நானே கண்காணிப்பதா? சந்தேகப்படுவதாக ஆகாதா? என்று கருதாமல். என்னுடைய பிள்ளையின் வாழ்க்கை, குடும்ப மானம், இஸ்லாத்தின் கண்ணியம். இவற்றை முன்னிறுத்தி. கவனமாக இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.

  SUBJECT # 02

  SUBJECT # 03

  Below email received From :Abdul Kader, Madurai

  Best regards,

 2. ஹசாரேவிடம் ஒரு மாணவனின் கேள்விகள்…

  மாணவன் : குளிர்கால நாடாளுமன்றக் கூட்டத் தொடருக்குள் லோக்பால் மசோதா கொண்டுவரவில்லை என்றால் காங்கிரசுக்கு வாக்களிக்க வேண்டாம் எனப் பிரச்சாரம் செய்யப் போவதாகச் சொல்லியுள்ளீர்கள். அப்படிச் சொன்னது பத்திரிகையில் வந்துள்ளது. அது உண்மைதானா?
  அன்னா : ஆம் உண்மையே.
  மாணவன் : அப்படியானால் காங்கிரஸ் அந்தச் சட்டத்தைக் கொண்டு வந்துவிட் டால், காங்கிரசுக்கு வாக்களிக்க பிரச்சாரம் செய்வீர்களா?
  அன்னா : நான் அப்படிச் சொல்ல வில்லையே.
  மாணவன் : வேறு யாருக்கு வாக்களிக்கக் கேட்பீர்கள்?
  அன்னா : அதையும் நான் சொல்லவே யில்லையே.
  மாணவன் : லோக்பால் மசோதா குளிர்கால தொடருக்குள் கொண்டுவரவில்லை என் றால் அப்போது யாருக்கு வாக்களிக்கக் கேட்பீர்கள்?
  அன்னா: அதையும் நான் சொல்லவில்லை.
  மாணவன் : இப்போது சொல்லவில்லை, அப்படியானால் எப்போது சொல்வீர்கள்?
  அன்னா : உங்கள் வாதம் குழப்பமாக உள்ளது. இந்தக் கேள்வி இப்போது வேண்டாம்.
  மாணவன் : நீங்கள் இப்போது சொல்ல வில்லை என்றாலும், காங்கிரசுக்கு அடுத்த பலமான கட்சியான பிஜேபிக்கு வாக்களியுங் கள் என்று கேட்பதாகாதா? அப்படி நினைக் கலாமா?
  அன்னா : அது உங்கள் “யூகம்”?
  மாணவன் : நீங்கள் உண்ணாவிரதம் இருந்தபோது பெரிய பெரிய சாமியார்கள், உலகில் பல இடங்களில் கிளைகள் வைத் துள்ள கோடீஸ்வர சாமியார் களெல்லாம் வந்து உங்கள் போராட்டத்துக்கு ஆதரவு தந்தார்களே, அதன் பொருள் என்ன?
  அன்னா : நியாயத்திற்கு, தர்மத்திற்கு யார் ஆதரவு கொடுத்தால் என்ன? அவர் களாக வந்து ஆதரவு தந்தார்கள். அவர்களுக்கு வேறு நோக்கம் இல்லை.
  மாணவன் : அப்படியானால் கர்நாடக மாநில பிஜேபி கட்சி ஊழல் நடத்தியது ஊர் அறிந்த விஷயம். அதை எதிர்த்து நீங்கள் உண்ணா விரதப் போராட்டம் நடத்தினால் அந்த சாமி யார்கள் வலிய வந்து உங்களுக்கு ஆதரவு தருவார்களா? அதுவும் உங்கள் வாக்குப்படி தர்மத்துக்கும் நியாயத்திற்கான போராட்ட மாகத்தானே இருக்கும்.
  அன்னா : இது குதர்க்கமான கேள்வி. உள்நோக்கமான கேள்வி.
  மாணவன் : அந்த சாமியார்களோடு நெருங்கி உறவு கொண்டுள்ள அத்வானி இப் போது மத்திய அரசின் ஊழலை எதிர்த்து ரத யாத்திரை வருகிறாரே. உங்களை ஆதரித்த
  அந்த சாமியார்களோடு உறவு வைத்துள்ள அத்வானி இப்போது நடத்தும் ரதயாத்திரை,
  உங்களின் போராட்டம்- இவற்றுக்கெல்லாம் இடையில் ஏதோ ஓர் இழை ஓடுவதாகத் தெரிகிறதே, உங்கள் கருத்து என்ன?
  அன்னா : இது உங்கள் கற்பனை, மாணவராகிய நீங்கள் அதிகம் சினிமா பார்ப்பதுண்டா? உங்கள் கற்பனை சினிமா கற்பனை!
  மாணவன் : இது கற்பனை அல்ல, சூழ் நிலை, சாட்சிகள், காட்சிகள் அப்படித்தான் சொல்லுகின்றன. அது சரி, நீங்கள் காந்திய வாதி. அத்வானி 1992ஆம் ஆண்டு இப்படி ஒரு ரதயாத்திரை நடத்தி இந்து, முஸ்லிம் கலவரம் ஏற்பட்டு ரத்தம் சிந்தி உயிர்விட் டார்கள். அதாவது மதக்கலவரத்தில் முடிந் தது, அதே வேகத்தில் பாப்ரி மசூதி இடிக்கப் பட்டது. அதே வேகத்தில் மத்திய ஆட்சி யைப் பிடித்தது. இவையெல்லாம் உங்களுக்கு ஞாபகமிருக்கும். காந்தியவாதியான நீங்கள் அதை ஆதரித்தீர்களா?
  அன்னா : நான் அதை ஆதரித்தேன் என்று யார் சொன்னது?
  மாணவன் : அப்படியானால் அதை எதிர்த்தீர் களா?
  அன்னா : (மௌனம்)
  மாணவன் : அதை எதிர்க்கவில்லை யென்றால் காந்திக்கு செய்யும் துரோக மல்லவா? நான் மாணவன். தாங்கள் எதிர்த்த தாக செய்தி ஏதும் நான் படிக்கவில்லை.
  அன்னா : நீ மாணவன் இன்னும் நீ அதிகம் கற்கவேண்டும். சில விஷயங் களில் சும்மா இருப்பதே சுகம் என்பதை அறிய உனக்கு இன்னும் காலம் தேவைப் படுகிறது.
  மாணவன் : மதக்கலவரத்தை எந்தக் காலத் திலும் காந்தி ஆதரித்ததில்லை. இப்போது அத்வானி ஊழலை எதிர்த்து ரத யாத்திரை வருவதாகச் சொல்லப்படுகிறது. இந்த சக்திகள் ஆட்சியில் இருந்தபோது பல ஊழல்கள் வெளிவந்தன. கர்நாடகா விலும் இப்போது சந்தி சிரிக்கிறது. இந்த யோக்கிய சிகாமணிகள் தான் ஊழலை எதிர்த்து ரத யாத்திரை வரப்போகிறார்களாமே? ரத்த யாத்திரை நடத்தப்போகிறார்களாமே? இதை நீங்கள் ஆதரிக்கிறீர்களா?
  அன்னா : (மௌனம்)
  மாணவன் : அல்லது எதிர்க்கிறீர்களா?
  அன்னா : அன்று அத்வானி நடத்திய தேர் ஓட்டம் வேறு, இன்று அவர் வேறு பிரச் சனைக்காக தேர் ஓட்டுவதாக நீங்கள் படிக்கவில்லையா?
  மாணவன் : படித்தேன். இரண்டு தேர் ஓட்டமும் ஆட்சியைப் பிடிக்கும் நோக்கம் தான். பிரச்சனை வேறு வேறாக இருக்கலாம். அன்று காந்தி போற்றிய ராமனை இந்தக் கூட்டம் தங்களுக்குச் சாதகமாக தேர் ஓட்டி வேறு வடிவத்தில் பயன்படுத்திக்கொண்டது. இன்று காந்தியவாதி என்று சொல்லும் உங்களை, எந்த ஊழலை எதிர்ப்பதாகச் சொல்லி களம் கண்டீரோ, அந்தக் களத்தை, அதே களத்தைப் பயன்படுத்திக்கொண்டு ரதயாத்திரை என்று சொல்லி ஒரு மதவாத அரசியல்கட்சி ஆட்சியைப் பிடிக்க சூழ்ச்சி செய்கிறது. இது உங்களுக்குப் புரிய வில் லையா தாத்தா? நான் சிறியவன், அரசியல் நிறையப் படிக்காதவன். இது எனக்குப் புரிகிற போது, உங்களுக்கு எப்படிப் புரியாது போகும். சொல்லுங்கள்!
  அன்னா : (அமைதி)…
  மாணவன் : ஏன் அமைதியாக இருக் கிறீர்கள்? மவுனம் சம்மதத்திற்கு அறிகுறி யல்லவா? காந்தியைக் கொன்ற அதே கூட்டம் இப்போது காந்தியவாதி என்று சொல்லும் உங்களைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறது. நீங்கள் எதை சிவில் சொசைட்டி என்று கூறுகிறீர்கள். ராமர் பெயரை தன் பெயரோடு சேர்த்துக்கொண்ட நாதுராம் கோட்சே, கோர்ட்டில் வாக்குமூலம் தந்தபோது, பகவத் கீதையைப் படித்த பிறகுதான் காந்தியைக் கொல்ல தைரியம் வந்தது, கொல்லவும் முடிவெடுத்தேன் என்று சொன்னது உங்களுக்குத் தெரியாதா?
  அன்னா : பொடியனே! அதையெல்லாம் நீ ஏன் இப்போது பேசுகிறீர் இந்த இடத்தில் அது அவசியமில்லை.
  மாணவன் : நீங்கள் காந்தியவாதியல்லவா? அத்வானி லஞ்சத்தை எதிர்த்து, ஊழலை எதிர்த்து தேர் ஓட்டம் வருவது தேவையில் லாத ஒன்று, அது ஆட்சியைப் பிடிக்கும் அரசியல் நோக்கம் கொண்டது. அதை நான் ஆதரிக்கவில்லையென்று சொல்ல நீங்கள் தயாரா?
  அன்னா : மௌனம்…?
  மாணவன் : ஏன் தயங்குகிறீர்கள்? வாழை மரம் முள்ளில் உராய்ந்தாலும், முள் வாழை மரத்தில் உராய்ந்தாலும் சேதாரம் வாழை மரத்துக்குத் தான். நீங்களே அவர்களோடு உராய்ந்தாலும், அவர்களே உங்களோடு உராய்ந்தாலும் சேதாரம் உங்களுக்குத்தான். தைரியமாக அத்வானி சூழ்ச்சியை எதிர்த்து அறிக்கை விடுங்கள்.
  அன்னா : (அமைதி)….
  மாணவன் : ஏன் அமைதி, ஏன் தயக்கம்? ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், அன்னா ஹசாரேவின் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தில் ஒரு பகுதியாக ஆர்.எஸ்.எஸ். பங்கு பெற்று செயல்படுகிறது. ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ஏற்கனவே அன்னாவின் ஊழல் எதிர்ப்புப் போராட்டத்தில் இறங்கி செயல்பட்டு வருகிறார்கள் என்று வெளிப்படையாக பூனாவில் நடை பெற்ற தசரா விழாவில் பேசியிருக்கிறாரே? உங்கள் பதில் என்ன?
  அன்னா : இதை நான் வன்மையாக மறுக்கிறேன். என்னை எந்த ஒரு ஆர்.எஸ்.எஸ். நபரும் சந்திக்கவில்லை.
  மாணவன்: வாஜ்பாய் அரசு மத்தியில் ஆண்டபோது அந்த ஆட்சி பல ஊழல்களில் சிக்கித் தவித்ததே! உதாரணமாக டெலிகாம் ஊழல், சர்க்கரை இறக்குமதி ஊழல், யூடிஐ மோசடி, கேத்தன் பரேக் ஸ்டாக் மார்க்கெட் மோசடி, தெஹல்கா பத்திரிகை வெளியிட்ட ராணுவத்துறைக்கான ஆயுதம் வாங்கியதில் ஊழல், சவப்பெட்டி ஊழல், மகாபெட்ரோல் மோசடி, நில ஊழல் – இப்படி துர்நாற்றம் வீசியதே, இவைகளெல்லாம் தங்களுக்குத் தெரியுமா? அப்பொழுதெல்லாம் நீங்கள் வெளி நாட்டில் இருந்தீரா? உள் நாட்டில் இருந்தீரா? இந்த யோக்கியர்கள் இப்போது ஆட்டுத் தோல் போர்த்திய நரியாய் ரதயாத்திரை வருகிறார்களே, அதிலும் மத்திய அரசின் ஊழலைக் கண்டித்து பவனி வரப் போகிறார்களே. இது பற்றி உங்கள் கருத்தென்ன?
  அன்னா : அது அந்தக்கட்சி எடுத்த முடிவு.
  மாணவன் : அதன் உள்நோக்கமென்ன? ஊழல் ஒழிய வேண்டுமென்ற எண்ண மில்லை. நீங்கள் போராடி, உண்ணாவிரதம் இருந்து ஒரு பகுதி மக்களைத் திரட்டினீர்களே. அதிலும் சில அறிவு ஜீவிகளையும், மத்தியதர வர்க்கத்தையும் திரட்டினீர்களே. அதில் ஆதாயம் தேடி அரசியல் லாபம் சம்பாதிக்கும் பச்சையான மோசடி என்று எனக்கு, சிறுவனாகிய எனக்குப் புரிகிறது? உங்களுக்குப் புரியவில்லையா?
  அன்னா : (மௌனம்)…
  மாணவன் : ஏன் மௌனம் சாதிக்கிறீர்கள்? என்னைப் போன்ற கோடானு கோடி மாணவர்களுக்கு உங்கள் மீது சந்தேகம் ஏற்படுகிறது என நான் கவலையோடு தெரிவிக்கிறேன். என் மீது நீங்கள் வருத்தப்படக்கூடாது.
  அன்னா : நீங்கள் பேசுவது ஒரு மாணவனிடமிருந்து வரும் வாதமாகத் தெரிய வில்லை. ஓர் அரசியல்வாதி உள் நோக்கத்தோடு பேசுவதுபோல் இருக்கிறது.
  மாணவன் : இப்படி நீங்கள் பேசுவது உங்களின் போக்கை மறைப்பதற்கு பயன்படுத்தும் ஒரு மலிவான வாதம், அவ்வளவே.! இது ரத யாத்திரையா அல்லது ரத்த யாத்திரையா? ரதயாத்திரை ஊழலை ஒழித்திடுமா? மாறாக மத ஆத்திரத்தை மூட்டவே செய்யும். ரத்தம் சிந்தச் செய்யும். சிந்தியுங்கள். வருகிறேன்…

  கற்பனை : தே.இலட்சுமணன்
  (நன்றி தீக்கதிர்)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: