எப்படி இருக்கணும் RESUME……?

” பணிக்கான உங்கள் தகுதி சரிபார்ப்பு, ரெஸ்யூமிலேயே ஆரம்பித்து விடுகிறது…” என்கிறார் கார்ப்பரேட் நிறுவனம் ஒன்றின் ஹெச். ஆர். ஆன ஆனந்த், ஒரு RESUME எப்படி இருக்கலாம் என்பதற்கு அவர் தரும் டிப்ஸ்:

01 . ரெஸ்யூமை நல்ல தரமான A 4 சைஸ் பேப்பரில் பிரிண்ட் செய்வது நல்லது.

02 . ஒரு வரி எழுதியுருந்தாலும், அதில் முழுத் தகவலைத் தெளிவாகச் சொல்லுங்கள். வளவளப்பு இருந்தால் எரிச்சல்தான் வரும்.

03 . கல்லூரியில் செய்திருக்கும் புராஜக்டின் தலைப்பை எழுதுங்கள். அதுமட்டும் இல்லாமல், புராஜக்ட் குழுவில் உங்களின் பங்களிப்பைப் பற்றியும் ஒரு வரியில் குறிப்பிடுங்கள்.

04 . விண்ணப்பித்திருக்கும் பதவிக்குத் தேவையான தகுதிகள் இருந்தால் அதை குறிப்பிட மறக்க வேண்டாம்.

05 . முன்பு வேலை பார்த்த பணியிடத்தைக் குறை சொல்லாதீர்கள்.

06 . குடும்பச் சூழ்நிலைகளையும், உடல் நலப் பிரச்சினைகளைப் பற்றியும் எழுதாதீர்கள். ஒருவேளை உடல்நலக் குறைபாடு காரணமாக, ஏற்கெனவே வேலை செய்த நிறுவனத்தில் இருந்து விலகியிருந்தால், நேர்காணலில் மட்டும் தெரிவிக்கலாம்.

07 . ரெஸ்யூமில் எழுத்து மற்றும் இலக்கணப் பிழைகள் இருந்தால் கவனமற்றவர் என்று நினைத்துக்கொள்வார்கள். முடிந்தவரை பிழைகளைத் தவிருங்கள்.

08 . ரெஸ்யூமில் தடித்த (போல்டு) மற்றும் சாய்ந்த (இட்டாலிக்) எழுத்துக்கள் இடம் பெறலாம். ஆனால் ஒரே சைஸ் எழுத்தாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

09 . ரெஸ்யூமை வண்ணம் கொண்டு அலங்காரம் செய்யாதீர்கள். எளிமையாக இருக்கட்டும்.

10 . ஒரு நிறுவனத்திற்காக தயார் செய்த ரெஸ்யூமை, மற்ற எல்லா நிறுவனத்திருக்கும் அனுப்பக் கூடாது. ஒவ்வொரு நிறுவனத்துக்கும் விண்ணப்பிக்கும்போது, பிரத்யோகமாக ரெஸ்யூம் தயாரித்து அனுப்புவது மிகவும் நல்லது.

11 . இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை ரெஸ்யூமைப் பார்த்து புதிய தகவல்களைச் சேர்த்து, அப்டேட் செய்துகொண்டே இருங்கள்.

12 . நீங்கள் வேலைக்கு விண்ணப்பிக்கும்போது, எதற்க்காக விண்ணப்பிக்கிறீர்கள்? உங்களை வேலைக்குச் சேர்ப்பதால் அந்த நிறுவனத்திற்கு என்ன லாபம்? என்பதைக் கூட நீங்கள் குறிப்பிட்டு அனுப்பலாம். அப்படி அனுப்பும்போது கவனமாக வார்த்தைகளை கையாள வேண்டும்.

13 . முடிந்த வரை சுயபுலம்பலைத் தவிருங்கள். நண்பரின் ரெஸ்யூமில் பெயரை மட்டும் மாற்றி ‘ஈயடிச்சான் காப்பி’ வேண்டாம்.

– புதிய தலைமுறை 21 ஜூலை 2011

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: