நமதூரில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு முகாம்.

வருகின்ற சனி,ஞாயிறு(நவம்பர் 5,6) ஆகிய தேதிகளில் மதார் பள்ளிவாசல் மற்றும் நமதூரி ஆங்காங்கே சில இடங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் தங்கள் பெயரை இணைத்துக்கொள்ள முகாம் நடைபெறுகிறது.

Advertisements

One Response

 1. மேட்டுப்பாளையத்தில் நகராட்சி தேர்தலில் பா.ஜ.க. வெற்றி.

  நடந்து முடிந்த நகராட்சி மன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் 2 நகராட்சிகளை பா.ஜ.க. கைப்பற்றியுள்ளது. அதில் ஒன்று நாகர்கோவில், மற்றொன்று மேட்டுப்பாளையம்.

  இதில் நாகர்கோவில் பா.ஜ.க முன்பிருந்தே வலுவான நிலையில் இருந்து வந்துள்ளது. ஆனால் மேட்டுப்பாளையத்தில் முதன்முதலாக பா.ஜ.க வென்று நமக்கு ஒரு படிப்பினையை காட்டி இருக்கிறது.

  அது நமக்குள் ஒற்றுமை இல்லாததையே காட்டி உள்ளது.

  நான்கு முஸ்லிம் குடும்பங்கள் ஒரு ஊரில் இருந்தால் அங்கு ஐந்து ஜமாஅத்கள் இருக்கும், அவ்வளவு ஒற்றுமை நமக்குள். விரலை ஆட்டுபவனும், நீட்டுபவனும் சண்டையிட்டுக் கொண்டிருக்க, பார்த்துக் கொண்டிருந்தவன் ஜெயித்து விட்டான்.

  இந்த நகராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள், மற்றும் அவர்கள் பெற்ற வாக்குக்களை பாருங்கள்.

  T.Sathish Kumar (BJP) – 11326

  A.Nasar (ADMK) – 9495
  M.Abdul Hameed (DMK) – 5833
  Sathyavathi Ganesh (Congress) – 2101
  T.Maharasan (Independent) – 1688
  S.Jafar sadiq (DMDK) – 1456
  Minnal Siraj (PMK) – 737
  Jayakumar (Independent) – 545
  Rajagopal (Independent) – 456
  C.Yugaraj (Independent) – 158
  S.Jayaram (Independent) – 108
  M.JafarSadiq (Independent) – 86

  நான்கு முஸ்லீம்கள் நான்கு கட்சிகளில் நின்று, ஒருவரை ஒருவர் யாருக்காகவோ போராடி, இறுதியில் ஒரு பா.ஜ.க. கட்சிக்கு தொகுதியை தாரை வார்த்து விட்டோம்.

  மாற்று மதத்தார்கள் ஒன்று பட்டு கட்சி பாகுபாடு பார்க்காமல் தெளிவாக ஒரே நபர்களுக்கு சிந்தாமல், சிதறாமல் தங்கள் வாக்குக்களை அளித்து வெற்றி பெற செய்து விட்டார்கள்.

  இதே நாம் செய்திருந்தால், முஸ்லிம்கள் ஜாதி, மத வெறியர்கள் என்று ஊர் சொல்லி இருக்கும்.

  இனி என்ன செய்யப் போகிறோம்?

  இன்னொரு விஷயம் ,

  கோவை மாநகராட்சிக்கு நடை பெற்ற மேயருக்கான போட்டியில் பங்கேற்ற ஐக்கிய ஜமாஅத் & அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் சார்பில் போட்டியிட்ட இஸ்லாமிய வேட்பாளர் அ.தி.மு.க, தி.மு.க வேட்பாளர்களை அடுத்து மூன்றாவது இடத்தில் வந்தார். அவரையடுத்தே பெரிய, சிறிய அரசியல் கட்சிகள் பா.மா.க , தே.மு.தி.க, மதிமு.க, பா.ஜ.க இவை வந்தன. முஸ்லிம் சமுதாயம் ஒன்று பட்டு நின்றால் வெல்லலாம் என இதன் மூலம் தெரிகிறது.

  அல்லாஹ் அனைத்து முஸ்லிம்களுக்கும் நல்ல புத்தியையும் ஒற்றுமையையும் கொடுப்பானாக.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: