Filed under: TNTJ செய்திகள் | Leave a Comment »
TNTJன் பிப்ரவரி-14 வாழ்வுரிமை போராட்டக் களம்.
அல்ஹம்துலில்லாஹ்….
நமதூரிலிருந்து இன்று TNTJன் பிப்ரவரி-14 வாழ்வுரிமை போராட்டத்திற்காக 6 வேன் , 1 சுமோ , 1 ஆட்டோ மற்றும் நிறைய நபர்கள் இரு சக்கர வாகனங்களில் வந்து கலந்துகொண்டார்கள்.
Filed under: TNTJ செய்திகள் | Leave a Comment »
TNTJன் பிப்ரவரி-14 போராட்டத்திற்கான தெருமுனைப் பிரச்சாரம்.
TNTJன் பிப்ரவரி-14 போராட்டத்திற்கான தெருமுனைப் பிரச்சாரம் நமதூரில் 5.02.2012 அன்று மாலை 4 மணிக்கு துவங்கி இரவு 9 மணி வரை நடைபெற்றது.
காயிதேமில்லத் தெரு,ஜாகிர் உசேன் தெரு,குறிச்சி மலை ஜின்னா தெரு,காட்டுக்குளம் மற்றும் IOB பாங்க் அருகில் நடைபெற்றது.
இதில் மாவட்ட பேச்சாளர்கள் சகோதரர் உபையத்துல்லாஹ் மன்பயி , சகோதரர் அலி அவர்கள் பிப்ரவரி-14 போராட்டம் ஏன்?எதற்கு என்ற தலைப்பில் உறை நிகழ்த்தினார்கள்.
Filed under: TNTJ செய்திகள் | Leave a Comment »
TNTJன் பிப்ரவரி-14 போராட்டத்திற்கான சுவர் விளம்பரங்கள்.
TNTJன் பிப்ரவரி-14 போராட்டத்திற்கான சுவர்,ஆட்டோ மற்றும் பள்ளிவாசல்களில் விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளன.
Filed under: TNTJ செய்திகள் | Leave a Comment »
TNTJன் பிப்ரவரி 14க்கான திருமங்கலகுடி-குறிச்சிமலை கிளையின் ஆலோசனைக் கூட்டம்.
TNTJன் பிப்ரவரி 14க்கான திருமங்கலகுடி-குறிச்சிமலை கிளையின் ஆலோசனைக் கூட்டம் இன்று(22.01.2012) நடைபெற்றது.இதில் பிப்ரவரி 14க்காக கிளை சார்பாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் அதற்கான வேலைகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.இதில் உறுப்பினர்கள் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
Filed under: TNTJ செய்திகள் | Leave a Comment »
கல்வி, வேலை வாய்ப்பு பற்றிய விபரங்கள் அறிய.
கல்வி, வேலை வாய்ப்பு பற்றிய விபரங்கள் அறிய TNTJ புதிதாக ஒரு இணையதளம் ஒன்றை உருவாக்கியுள்ளது.இதில் உங்களது தகவல்கள்,Resume ஆகியவற்றை பதிவு செய்து கொள்ளுங்கள்.
Filed under: பயனுள்ள தகவல்கள், TNTJ செய்திகள் | Leave a Comment »
TNTJன் பிப்ரவரி-14 போராட்டத்திற்கான விளம்பரங்கள்
Filed under: TNTJ செய்திகள் | Leave a Comment »
சிறுபான்மையினருக்கு இலவச தொழில் பயிற்சி.
தஞ்சை மாவட்டத்தில் வசிக்கும் சிறுபான்மை வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு அளிக்கப்படும் இலவச தொழில் பயிற்சிகளில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கா. பாஸ்கரன் வெளியிட் செய்திக் குறிப்பு:
தஞ்சை மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவர், இஸ்லாமியர், சீக்கியர், புத்த மதத்தினர் மற்றும் பார்சி வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் சார்பில் திறன் வளர்ப்பு பயிற்சிகள், தேர்ந்தெடுக்கப்பட்ட தனியார் பயிற்சி நிலையங்கள் மூலம் இலவசமாக அளிக்கப்பட உள்ளன. இதற்கான பயிற்சி கட்டனம் பயிற்சி நிலையத்துக்கு அரசால் அளிக்கப்படும்.
எலக்ட்ரிக்கல் வயரிங், ரீவைண்டிங், பிட்டர், வெல்டர் மற்றும் கணினி பயிற்சியும், புடவைகளில் கல் பதித்தல், தையல் பயிற்சி, நவீன ஆடை வடிவமைப்பு மற்றும் ஏர்கண்டிஷனிங் – ரெப்ரிஜெரேஷன் தொடர்பான பயிற்சிகள் அளிக்கப்படும்.
பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது தேர்ச்சி பெறாதவர், குடும்ப ஆண்டு வருமானம் ஒரு லட்சம் ரூபாய்க்கு குறைவாக உள்ளவர், மதிப்பெண் பட்டியல், ஜாதிச் சான்று, குடும்ப அட்டை மற்றும் வருமானச் சான்றுடன் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.
இந்தப் பயிற்சிகளை அளிக்க விரும்பும் தனியார் பயிற்சி நிறுவனங்கள் தங்களது பயிற்சி கட்டண விவரத்துடன் மேற்கண்ட அலுவலகத்தை தொடர்புகொள்ளலாம் என்றார் ஆட்சியர்.
நன்றி : தினமணி
Filed under: பயனுள்ள தகவல்கள் | Leave a Comment »
திருமங்கலக்குடி TNTJ கிளை சார்பாக நடந்த பெண்கள் பயான்.
திருமங்கலக்குடி TNTJ கிளை சார்பாக இன்று(12.01.2012) 3:30 மணியளவில் பெண்களுக்கான மார்க்க விழக்க நிகழ்ச்சி நடந்தது.
இந்நிகழ்ச்சியில் மாநில பேச்சாளர் சகோ.உபையத்துல்லாஹ் அவர்கள் “சமுக தீமைகள்” என்ற தலைப்பில் உரையாற்றினார். இதனைத் தொடர்ந்து பெண்களுக்கான சிறப்பு கேள்வி-பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் பெண்கள் ஆர்வமாக மார்க்க சம்பந்தமான கேள்விகளை கேட்டு அறிந்தனர்.
இதில் உறுப்பினர்கள் மற்றும் பெண்கள் அனைவர்களும் கலந்து கொண்டார்கள். இப்பணி சிறக்க துஆ செய்யுங்கள்….
Filed under: TNTJ செய்திகள் | Leave a Comment »
ரியாத் மண்டல TNTJ சார்பாக காலெண்டர் வினியோகம்.
ரியாத் மண்டல TNTJ சார்பாக 200 காலெண்டர்கள் வினியோகம் செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்
Filed under: TNTJ செய்திகள் | Leave a Comment »







































































































